பிரான்சு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 25:
 
===சூழல்===
[[File:Parcs naturels français.svg|thumb|left|பிரான்சில் உள்ள [[பிரான்சின் பிரதேச இயற்கைப் பூங்காக்கள்|பிரதேச]] (பச்சை), [[பிரான்சின் தேசியப் பூங்காக்கள்|தேசிய இயற்கைப் பூங்காக்கள்]] (இளஞ்சிவப்பு).]]
சூழலுக்காக அமைச்சு ஒன்றை உருவாக்கிய முதல் நாடுகளில் ஒன்றாகப் பிரான்சு விளங்குகிறது. பிரான்சின் சூழல் அமைச்சு 1971 ஆம் ஆண்டில் உருவானது. பிரான்சு பெருமளவு தொழில்மயமானதும், வளர்ச்சியடைந்ததுமான நாடாக இருந்தும், காபனீரொட்சைடு வெளியேற்றுவதில் இது 17 ஆவது நிலையிலேயே உள்ளது. இது, கனடா, சவூதி அரேபியா, ஆசுத்திரேலியா போன்ற குடித்தொகை குறைவான நாடுகளைவிடக் குறைவான காபனீரொட்சைடையே வெளியேற்றுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 1973 ஆம் ஆண்டின் எண்ணெய் நெருக்கடிக்குப் பின்னர், அணுவாற்றலில் முதலீடு செய்வதற்குப் பிரான்சு அரசு எடுத்த முடிவே இதற்குக் காரணம். தற்போது பிரான்சின் 78% மின்சாரம் அணுவாற்றல் மூலமே கிடைக்கிறது. இதனாலேயே பிரான்சு, அதனோடு ஒப்பிடத்தக்க பல நாடுகளைவிடக் கூடிய அளவு சூழல் மாசுபடுவதைக் கட்டுப்படுத்த முடிகிறது.
 
"https://ta.wikipedia.org/wiki/பிரான்சு" இலிருந்து மீள்விக்கப்பட்டது