பிரான்சின் முதலாம் நெப்போலியன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 29:
நெப்போலியன், 1769 ஆம் ஆண்டு ஆகத்து 15 ஆம் தேதி, [[கோர்சிக்கா]]வில் உள்ள [[அசாக்சியோ]] என்னும் நகரத்தில் காசா பொனப்பார்ட்டே எனப்படும் குடும்பத்தின் பரம்பரை வீட்டில் பிறந்தான். இவனது பெற்றோர்களுக்குப் பிறந்த எட்டுப் பிள்ளைகளுள் இவன் இரண்டாமவன். இந்த ஆண்டிலேயே கோர்சிக்காத் தீவு [[செனோவாக் குடியரசு|செனோவாக் குடியரசால்]] பிரான்சுக்கு வழங்கப்பட்டது. இவனுக்கு நெப்போலியன் டி பொனப்பார்ட்டே என்னும் பெயர் இட்டனர். தனது இருபதுகளில் தனது பெயரை பிரெஞ்சு மொழித் தோற்றம் கொடுப்பதற்காக நெப்போலியன் பொனப்பார்ட்டே என மாற்றிக்கொண்டான். கோர்சிக்க பொனப்பார்ட்டே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், [[தசுக்கன்]] மூலத்தையுடைய இத்தாலியக் கீழ்நிலைப் பிரபுக்களின் வழிவந்தோர் ஆவர். இவர்கள் 16 ஆம் நூற்றாண்டில் [[லிகூரியா]வில் இருந்து கோர்சிக்காவுக்கு வந்தனர். 2012 ஆம் ஆண்டில் நிகழ்த்தப்பட்ட டி.என்.ஏ சோதனைகளின்படி இக் குடும்பத்தின் முன்னோர் சிலர் காக்கேசியப் பகுதிகளில் இருந்து வந்ததாகத் தெரிகிறது. இந்த ஆய்வுகளின்படி, [[ஆப்லோகுரூப் வகை E1b1c1]] கிமு 1200 ஆம் ஆண்டளவில் [[வட ஆப்பிரிக்கா]]வில் தோன்றியது. இம்மக்கள் அங்கிருந்து காக்கேசியப் பகுதிகளுக்கும் பின்னர் ஐரோப்பாவுக்கும் சென்றனர்.
இவனது தந்தை [[கார்லோ பொனப்பார்ட்டே]] ஒரு சட்ட வல்லுனர். 1777 ஆன் ஆண்டில் [[பிரான்சின் பதினாறாம் லூயி|16 ஆம் லூயியின்]] அரசவையில் கோர்சிக்காவன் பேராளனாக இcஅர் பொறுப்பு வகித்தார். நெப்போலியனுடைய இளமைப் பருவத்தில் முதன்மைச் செல்வாக்குச் செலுத்தியவர் இவனது தாய் [[லெட்டிசினா ராமோலினோ]] ஆவார். இவரது கடுமையான ஒழுக்கத்தினால் குழப்படிச் சிறுவனான நெப்போலியனைக் கட்டுப்பாட்டுக்குள் வைந்திருந்தார். நெப்போலியனுக்கு யோசேப்பு என்னும் ஒரு அண்ணனும், லூசியன், எலிசா, போலின், கரோலின், யெரோம் ஆகிய இளையோரும் இருந்தனர். ஒரு ஆணும் ஒரு பெண்ணுமாக யோசேப்புக்கு முன் பிறந்த இரண்டு பிள்ளைகள் குழந்தைப் பருவத்திலேயே இறந்துவிட்டனர். நெப்போலியன் தனது இரண்டாவது பிறந்தநாளுக்குச் சற்று முன்னராக, 1771 சூலை 21 ஆம் தேதி, [[அசாக்சியோ பேராலயம்|அசாக்சியோ பேராலயத்தில்]] திருமுழுக்குப் பெற்றான்.
 
பிரபுத்துவ, வசதியான குடும்பப் பின்னணியும், குடும்பத் தொடர்புகளும், பொதுவான கோர்சிக்கர்களுக்குக் கிடைக்கப் பெறாத கல்விகற்கும் வாய்ப்புக்களை நெப்போலியனுக்கு அளித்தன. 1779 ஆம் ஆண்டு சனவரியில் பிரான்சுத் தலை நிலத்தில் ஆட்டன் என்னும் இடத்தில் உள்ள சமயப் பள்ளி ஒன்றில் பிரெஞ்சு மொழி கற்பதற்காகச் சேர்ந்தான். மே மாதத்தில், பிரையேந்லேஸத்து என்னும் இடத்தில் இருந்த படைத்துறை அக்கடமியில் சேர்ந்தான். இவன் அதிக கோர்சிக்கத் தொனியுடனே பிரெஞ்சு மொழியைப் பேசியதுடன் சரியான எழுத்துக்கூட்டலையும் அவன் கற்றுக்கொள்ளவேயில்லை. இதனால் இவன் அவனது உடன் மாணவர்களது கேலிக்கு உள்ளானான். [[கணிதம்|கணிதத்தில்]] திறமை பெற்றிருந்ததோடு, [[வரலாறு]], [[புவியியல்]] ஆகிய பாடங்களிலும் நெப்போலியனுக்குப் போதிய அறிவு இருந்தது.
 
== மரணத்தின் காரணம் ==
"https://ta.wikipedia.org/wiki/பிரான்சின்_முதலாம்_நெப்போலியன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது