இணுவில் பரராஜசேகரப் பிள்ளையார் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 5:
 
==வரலாறு==
ஆரியச்சக்கரவர்த்தி வம்சத்தவரின் ஆட்சி 1240களில் இருந்து 1620 வரை ஏறத்தாழ 380 ஆண்டுகள் நிலைத்திருந்தது. இக்காலப் பகுதியில் பரராசசேகரன் என்ற சிம்மாசனப் பெயரைக் கொண்ட மன்னர்கள் குறைந்தது 6 பேராவது இருந்ததாகத் தெரிகிறது.<ref>சுவாமி. ஞானப்பிரகாசர், 2003. பக். 80.</ref> இவர்களில் எந்தப் பரராசசேகரன் காலத்தில் இக்கோயில் உருவானது என்பது தெரியவில்லை. இதனால் இது தோன்றிய காலம் பற்றி எதுவும் கூறமுடியாது. ஆரியச் சக்கரவர்த்தி வம்ச ஆட்சியின் தொடக்க காலத்திலேயே இணுவில் ஒரு முக்கியமான ஊராக இருந்ததுடன் அரசரின் பிரதிநிதி ஒருவரும் அங்கு இருந்ததாக யாழ்ப்பாண வைபமாலை கூறுகிறது. இதனால், இணுவில் 13 ஆம் நூற்றாண்டிலேயே அரசத் தொடர்புள்ள ஊராக இருந்திருக்க வாய்ப்பு உள்ளது.
 
யாழ்ப்பாண அரசர் காலத்தில் இக்கோயிலை அண்டி ஒரு மடம் இருந்தது. கோயிலுக்கு வருபவர்கள் இதைப் பயன்படுத்தி வந்தனர். யாழ்ப்பாணத்தைப் போத்துக்கேயர் கைப்பற்றியபின்னர் இராச்சியத்தில் இருந்த எல்லா இந்துக் கோயில்களையும் இடித்தனர். அவ்வேளை இக் கோயிலில் இருந்த பிள்ளையார் சிலையை ஒழித்து வைத்த மக்கள் அக்கட்டிடத்தை ஒரு மடம் எனக்கூறியதால் அக்கட்டிடத்தைப் போத்துக்கேயர் இடிக்காமல் விட்டனர்.<ref>சிவலிங்கம், மூ., 2004. பக். 04.</ref>