வங்காளதேசம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2) (Robot: Modifying pam:Bangladesh to pam:Banglades
Prash (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 82:
பெரும் வங்காளப் பகுதியிலுள்ள நாகரிகத்தின் எச்சங்கள் நாலாயிரம் வருட பழைமை வாய்ந்தவை.<ref name="bharadwaj">{{cite book |last=Bharadwaj |first=G |editor=Majumdar, RC |year=2003 |chapter=The Ancient Period |title=History of Bengal |publisher=B.R. Publishing Corp}}</ref> இக்காலப்பகுதியில், திராவிட, திபெத்தோ-பர்ம மற்றும் ஆஸ்திரோ-ஆசிய மக்கள் இப்பகுதிகளில் வாழ்ந்தனர். "பங்க்லா" அல்லது "பெங்கால்" என்ற சொல்லின் சரியான மூலம் அறியப்படவில்லை. இருப்பினும், இப்பகுதிகளில் கி.மு. 1000ம் ஆண்டு காலப்பகுதியில் குடியேறிய திராவிட மொழி பேசும் குழுவான "பாங்"இலிருந்து வந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.<ref name="congress">{{cite book |publisher=Library of Congress |url=http://memory.loc.gov/frd/cs/bdtoc.html |chapter=Early History, 1000 B.C.-A.D. 1202 |title=Bangladesh: A country study |editor=James Heitzman and Robert L. Worden |year=1989 |isbn=82-90584-08-3 |oclc=15653912}}</ref>
 
கி.மு. 7ம்நூற்றாண்டிலிருந்து கங்கரிதாய் ராச்சியம் உருவாகியது. இது பின்னர் சிசுநாக, நந்த, மௌரிய, சுங்க, மேகவாகன, மற்றும் கண்வப் பேரரசுகளின் காலப்பகுதியில், பீகாருடன் இணைந்து அப் பேரரசுகளின் கீழ் காணப்பட்டது. கி.பி. 3ம் நூற்றாண்டிலிருந்து 6ம் நூற்றாண்டு வரை குப்தப் பேரரசு மற்றும் ஹர்சப் பேரசின் ஒரு பகுதியாக இருந்தது. அதன் வீழ்ச்சிக்குப் பின், சசாங்கன் எனும் ஆற்றல் மிகு வங்காள தேசத்தவன் ஒரு சிறந்த, குறுகியகால அரசொன்றை நிறுவினான். சிறிதுகால, சர்வாதிகார ஆட்சியின்பின், வங்காள பௌத்த, பால வம்சம் நானூறு வருடங்கள் ஆட்சி புரிந்தது. இதன்பின், சிறிதுகாலம் இந்து சேன வம்சம் ஆட்சி புரிந்தது.
 
மத்தியகால ஐரோப்பிய புவியியலாளர்கள் கங்கைக் கழிமுகப்பகுதியில், ஒரு சொர்க்கம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர். இது மிகைப்படுத்தப்பட்டதாக இருந்தாலும், 16ம் நூற்றாண்டு வரை இந்திய உபகண்டத்திலேயே செல்வச் செழிப்புமிக்க பகுதியாக வங்காளம் காணப்பட்டிருக்கக்கூடும். இப்பகுதியின் ஆரம்பகால வரலாறு, இந்துப் பேரரசுகள், உட்பூசல்கள் மற்றும் இந்து மற்றும் பௌத்த மதங்களுக்கிடையிலான ஆதிக்கப் போட்டி என்பவற்றால் நிரம்பியது.
"https://ta.wikipedia.org/wiki/வங்காளதேசம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது