இழான் இழாக்கு உரூசோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: pa:ਰੂਸੋ
No edit summary
வரிசை 16:
main_interests = [[அரசியல் தத்துவம்]],[[இசை]], [[கல்வி]], [[இலக்கியம்]], [[தன்வரலாறு]] |
influences = [[தாமஸ் ஹோப்ஸ்|ஹோப்ஸ்]], [[ஜான் லாக்|லாக்]], [[டெனிஸ் டிடெராட்|டிடெராட்]], [[சார்லஸ் டி செகண்டாட், பாரன் டி மாண்டெஸ்கியூ|மாண்டெஸ்கியூ]], [[நிக்கோலோ மாக்கியவல்லி|மாக்கியவல்லி]]|
influenced = [[இம்மானுவேல் காந்த்|காந்த்]], [[Johann Gottlieb Fichte|Fichte]], [[எகல்|ஹேகல்]], [[ஜோஹான் வூல்ஃப்காங் வொன் கோத்|கோத்]], [[Romanticismபுனைவியல்]], [[தாமஸ் பைன்|பைன்]], [[அகஸ்ட்டே காம்ட்டே|காம்ட்டே]], [[சைமன் பாலிவர்|பாலிவர்]], [[பிரடெரிக் ஏங்கெல்ஸ்|ஏங்கல்ஸ்]], [[ஜாக் டெரிடா|டெரிடா]] |
notable_ideas = [[General will]], [[amour-propre]], [[மனித இயல்பு #இயல்பு நிலை|மனிதத்தின் இயற்கையான நல்லியல்புகள்]]|
}}
 
'''இழான் இழாக்கு உரூசோ''' (ஜான் ஜாக் ரூசோ, ''Jean-Jacques Rousseau'', [[சூன் 28]], [[1712]] – [[சூலை 2]], [[1778]]) ஒரு முக்கியமான [[பிரான்சு|பிரான்சிய]] [[மெய்யியல்|மெய்யியலாளரும்]] அறிவொளிக் கோட்பாட்டாளரும் ஆவார். இவரது அரசியல் தத்துவம் [[பிரெஞ்சுப் புரட்சி|பிரான்சியப் புரட்சி]]யிலும், [[தாராண்மைவாதம்]], [[பழமைவாதம்]], [[சமூகவுடமை]]க் கோட்பாடுகளிலும் செல்வாக்குச் செலுத்தியது. ''[[குற்ற ஏற்புரைகள் (நூல்)|குற்ற ஏற்புரைகள்]]'' (''Confessions''), ''[[தனித்த பயணியின் கனவுகள் (நூல்)|தனித்த பயணியின் கனவுகள்]]'' (''Reveries of a Solitary Walker'') போன்ற அவரது எழுத்துக்கள் மூலம் தற்காலத் [[தன்வரலாறு|தன்வரலாற்று]] இலக்கிய வடிவத்தை அறிமுகப்படுத்தியதுடன், சிந்தனையில் [[அகநிலைநோக்கு|அகநிலைநோக்கை]] (''subjectivity'') ஊக்குவித்தார். இதன் தாக்கத்தை [[ஜார்ஜ் வில்லியம் பிரடெரிக் ஹேகல்|எகல்]], [[சிக்மண்ட் பிராய்ட்|பிராய்டு]] போன்ற பரந்துபட்ட சிந்தனையாளர்களின் ஆக்கங்களில் காணமுடியும். இவரது [[ஜூலி அல்லது புதிய ஏலவீஸ்]] (''Julie, ou la nouvelle Héloïse'') என்னும் [[புதினம்]] [[18ம் நூற்றாண்டு|18 ஆம் நூற்றாண்டின்]] அதிகம் விற்பனையான [[புனைகதை]] இலக்கியங்களுள் ஒன்றாக இருந்ததுடன், [[புனைவியல்|புனைவியலின்]] (''romanticism) ''வளர்ச்சிக்கும் முக்கிய பங்காற்றியது. ஒரு [[கோட்பாட்டாளன்|கோட்பாட்டாளனாகவும்]], [[இசையமைப்பாளர்|இசையமைப்பாளனாகவும்]], [[இசை]]த்துறைக்கும் இவர் பெரும் பங்கு ஆற்றியுள்ளார். 1778 இல் காலமானார். இவரது உடல் [[1794]] ஆம் ஆண்டில் [[பாரிசு|பாரிசில்]] உள்ள [[பந்தியன் (பாரிசு)|பந்தியனில்]] அடக்கம் செய்யப்பட்டது.
 
 
வரிசை 36:
[[படிமம்:Rousseauvenicembassy.jpg|thumb|200px|right| உரூசோ தூதரின் செயலாளராகப் பணிபுரிந்த காலத்தில், பிரான்சின் தூதரகமாக இருந்த கட்டிடம்.]]
1743 தொடக்கம் 1744 வரை, வெனிசில் இருந்த பிரான்சு தூதருக்கு இவர் செயலாளராக இருந்தார். 11 மாதங்கள் வரை பணிபுரிந்த பின்னர் இவர் பணிநீக்கப்பட்டார். விசாரணைக்குப் பயந்து இவர் அங்கிருந்து பாரிசுக்குத் தப்பிச் சென்றார். அங்கே அவர் ஓரளவு படித்திருந்த தையல்காரி ஒருவருடன் நட்புக்கொண்டு அவருடன் வாழ்ந்தார். உரூசோவின் கூற்றுப்படி அவருக்கு இத் தையல்காரி மூலம் ஐந்து பிள்ளைகள் பிறந்தன. பிள்ளைகள் பிறந்தவுடனேயே அவை [[அனாதை இல்லம்|அனாதை இல்லங்களுக்கு]] அனுப்பப்பட்டன. அனாதை இல்லத்துப் பிள்ளைகளின் இறப்பு வீதம் அதிகமாக இருந்த அக் காலத்தில் இப் பிள்ளைகளில் பல இறந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. கல்வி, பிள்ளை வளர்ப்பு ஆகியவற்றில் அறியப்பட்ட கோட்பாட்டாளராக விளங்கிய உரூசோ, தனது பிள்ளைகளைக் கைவிட்டது குறித்து இவரது எதிரிகள் இவரைக் கடுமையாக விமர்சித்தனர். தான் ஒரு ஏழைத் தந்தை என்றும், அநாதை இல்லங்களில் பிள்ளைகள் நல்ல வாழ்க்கை வாழ்வார்கள் என்றும் உரூசோ கூறினார்.
{{people-stub}}
 
[[பகுப்பு:பிரெஞ்சு மெய்யியலாளர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/இழான்_இழாக்கு_உரூசோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது