கொழும்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: pa:ਕੋਲੰਬੋ
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 32:
கொழும்பில் [[சிங்களவர்|சிங்கள மக்களும்]], [[இலங்கைத் தமிழர்|தமிழ் பேசும் மக்களும்]] அண்ணளவாகச் சம அளவில் வாழ்கின்றனர்.
 
கொழும்பு என்ற பெயர் “'''கொள அம்ப தொட்ட'''” என்ற சிங்கள மொழிப் பெயரிலிருந்து மருவியதாகும். {{cn}} (கொள-பச்சை,அம்ப-மா,தொட்ட-துறைமுகம்). இது இலங்கையில் அப்போதிருந்த [[போர்த்துகல்|போர்த்துக்கேயரால்]] [[கொலம்பஸ்|கிறிஸ்தோபர் கொலம்பசை]] நினைவுகூரும் வகையில் [[:en:colombo|கொலோம்போ]] என மாற்றப்பட்டது. கொழும்பின் மக்கள்தொகை [[2001]]ஆம் ஆண்டில் 377,396ஆகக் காணப்பட்டது. (பாரிய கொழும்பு 2,234,289). கொழும்பு, இலங்கையின் மிகப்பெரிய வர்த்தக நகரமாகும். கொழும்பு வட அகலாங்கு 6°54' கிழக்கு நெட்டாங்கு 79°50'இல் அமைந்துள்ளது.
 
[[இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்]] கொழும்பிலேயே அமைந்துள்ளது. இது தென்னாசியாவின் முதல் வானொலி நிலையமாகும். [[கொழும்பு பல்கலைக்கழகம்]], பௌத்த பாளி பல்கலைக்கழகம், தொழில்சார் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், கட்புல அரங்கேற்றக் கலைகள் பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக்கழகங்கள் கொழும்பு நகர எல்லைக்குள்ளேயே அமைந்துள்ளன. மேலும், கொழும்பின் புறநகர்ப் பகுதியில் [[ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம்]], [[மொறட்டுவ பல்கலைக்கழகம்]] மற்றும் இலங்கை திறந்த பல்கலைக்கழகம் என்பனவும் அமைந்துள்ளன. கொழும்பில் அமைந்துள்ள தொழில்நுட்பக் கல்வி நிறுவனம், இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனம், இலங்கை அபிவிருத்தி நிருவாக நிறுவனம், கடற்றொழில் மற்றும் கடல்சார் பொறியியலுக்கான தேசிய நிறுவனம், சமூக அபிவிருத்திக்கான தேசிய நிறுவனம், அக்குவைனாஸ் பல்கலைக்கழகக் கல்லூரி, தேசிய வியாபார முகாமைத்துவ நிறுவனம் என்பனவும் பட்டக்கல்வி வழங்கும் நிறுவனங்களாக இலங்கைப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.<ref>http://www.ugc.ac.lk</ref> இவை தவிர [[சென்னைப் பல்கலைக்கழகம்]],<ref>www.ideunom.ac.in</ref> [[மதுரை காமராசர் பல்கலைக்கழகம்]],<ref>http://mkudde.org</ref> [[பெரியார் பல்கலைக்கழகம்]] ஆகியவற்றின் தொலைக்கல்வி படிப்பகங்கள் உட்பட ஏராளமான வெளிநாட்டுப் பல்கலைக்கழக வளாகங்களும், பட்டப்படிப்பு நிறுவனங்களும் அமைந்துள்ளன.
"https://ta.wikipedia.org/wiki/கொழும்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது