சிந்துவெளி முத்திரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 5:
==பயன்பாடு==
இம்முத்திரைகள் எதற்குப் பயன்பட்டன என்பது குறித்துத் தெளிவு இல்லை. எனினும், இவை வணிகப் பொருட்களுக்கு முத்திரை இடுவதற்காகப் பயன்படுத்தப்பட்டு இருக்கலாம் என்பதே பெரும்பாலான ஆய்வாளர்களின் கருத்து. [[மெசொப்பொத்தேமியா]] போன்ற தொலைதூர இடங்களிலும் இவ்வகை முத்திரைகள் கண்டெடுக்கப்பட்டிருப்பது இக்கருத்துக்கு வலுவூட்டுகின்றது. கொள்கலன்கள், கதவுகள், களஞ்சியங்கள் போன்றவற்றை மூடி முத்திரையிடவும், ஆவணங்களைச் சரிபார்த்ததற்குச் சான்றாகவும் இம் முத்திரைகள் பயன்பட்டிருக்கலாம் என்பது சில ஆய்வாளர்கள் கருத்து.<ref>Kenoyer, 2010, p. 45.</ref> இவற்றை நூலில் கோர்த்துக் கழுத்தில் அல்லது கையில் கட்டியிருக்கக்கூடும் என்ற கருத்தும் உள்ளது. இவற்றுட் சில சடங்கு சார்ந்த தேவைகளுக்கும் பயன்பட்டிருக்கலாம்.
 
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட காட்சிகளைக் கொண்டனவான விளக்கக் காட்சிகளுடன் கூடிய முத்திரை அச்சுக்களும் சிறப்பாகத் தயாரிக்கப்பட்டன. இவை "பையான்சு" அல்லது களிமண் தகட்டு முத்திரைகளை உருவாக்கப் பயன்பட்டன. இவை பொருளாதார அல்லது சடங்குசார் தேவைகளுக்குப் பயன்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.<ref>Kenoyer, 2010, p. 45.</ref> இவ்வாறான விளக்கக்காட்சி முத்திரைகளில் இடம்பெறும் கருத்தியல்கள் உயர்குடியினரதும், இம்முத்திரைகளை ஒரு கட்டுப்படுத்தும் பொறிமுறையாகப் பயன்படுத்திய பிறரதும் தகுதியை நிலைநிறுத்திக் கொள்வதற்கு அவசியமாக இருந்ததாகவும் கருதப்படுகிறது.<ref>Kenoyer, 2010, p. 45.</ref> இது தவிர, இத்தகைய முத்திரைகள் பிந்திய நகரக் காலத்தில் கூடுதலாகப் பயன்பட்டதானது, நகரத்தின் பல்வேறு சமுதாயங்களை ஒருங்கிணைப்பதற்குச் சடங்குகளையும், தொடர்பான கருத்தியல்களையும் ஊக்கப்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டதையும் அதற்கு இம் முத்திரைகள் பயன்பட்டதையும் காட்டுகிறது.<ref>Kenoyer, 2010, p. 45.</ref>
 
==உருச் செதுக்கல்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சிந்துவெளி_முத்திரை" இலிருந்து மீள்விக்கப்பட்டது