புவிப்புறத் தொலைக்காட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: en:Terrestrial television
சி *திருத்தம்*
வரிசை 1:
'''புவிப்புறத் தொலைக்காட்சி ''' (''Terrestrial television'') என்ற வகை [[தொலைக்காட்சி பரப்புகை அமைப்பு|தொலைக்காட்சிப் பரப்புகை]] [[வானொலி]] ஒலிபரப்பை ஒத்து காற்றுவெளியில் [[மின்காந்த அலைகள்]] மூலம் அனுப்பப்பட்டு [[தொலைக்காட்சி அலைவாங்கி]] ஒன்றின் மூலம் பெறப்படும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளாகும். இது [[செய்மதித் தொலைக்காட்சி|செய்மதியையோ]] [[கம்பிவடத் தொலைக்காட்சி|கம்பிவடத்தையோ]] ஊடகமாகப் பயன்படுத்துவதில்லை. வீட்டில் உள்ளத் [[தொலைக்காட்சிப் பெட்டி]]யில் உள்ள [[இசைவித்த மின்காந்த அலைவெண் வாங்கி]] கொண்டு விரும்பும் அலைவரிசையைப் பெறலாம். ஐரோப்பாவில் இது புவிப்புறத் தொலைக்காட்சி என அறியப்பட்டாலும் ஐக்கிய அமெரிக்காவில் இதனை '''ஒளிபரப்புத் தொலைக்காட்சி''' (''broadcast television'') என்றும் சில நேரங்களில் '''வளியாற்றுத் தொலைக்காட்சி''' (''over-the-air television'', OTA) என்றும் குறிப்பிடப்படுகிறது.
 
புவிப்புறத் தொலைகாட்சியே முதன்முதலாக ஓர் ஊடகம் வழியாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்ட தொழினுட்பமாகும். 1927ஆம் ஆண்டு ஏப்ரல் 27 அன்று [[வாசிங்டன், டி. சி.]]யிலிருந்து முதல் தொலைதூரத் தொலைக்காட்சி ஒளிபரப்பப்பட்டது. [[பிபிசி]] 1929ஆம் ஆண்டு பொதுமக்களுக்கான ஒளிபரப்பை துவங்கியது; வழமையான நிகழ்ச்சிகளை 1930 முதல் ஒளிபரப்பத் தொடங்கியது. 1950களில் கம்பிவடத் தொலைக்காட்சிகள் வரும்வரை இவ்வகை ஒளிபரப்பே கோலோச்சி வந்தது.
 
==இந்தியாவில்==
[[இந்தியா]]வில் 1959ஆம் ஆண்டில் செப்டம்பர் மாதம் 15ஆம் நாள் [[தில்லி]]யில் சோதனையோட்டமாக சிறு பரப்பானைக் கொண்டு தற்காலிக ஒளிப்பதிவு தளத்திலிருந்து ஒளிபரப்பப்பட்டது. வழமையான நிகழ்சிகள் 1965ஆம் ஆண்டிலிருந்து [[அனைத்திந்திய வானொலி]]யின் அங்கமாக செயல்படத் தொடங்கின. இச்சேவை [[மும்பை]]க்கும் [[அமிர்தசரசு|அமிர்தசரசிற்கும்]] 1972ஆம் ஆண்டில் விரிவுபடுத்தப்பட்டது. 1975 வரை ஏழு இந்திய நகரங்களில் மட்டுமே தொலைக்காட்சி சேவைகள் இருந்தன; தொலைக்காட்சி சேவைகளை வழங்கும் ஒரே நிறுவனமாக [[தூர்தர்சன்]] இருந்தது. 1976ஆம் ஆண்டில் அனைத்திந்திய வானொலியிலிருந்து தூர்தர்சன் தனியாக செயல்படத் தொடங்கியது. தேசிய சேவைகள் 1982ஆம் ஆண்டிலிருந்து அனைத்து நிலையங்களிலிருந்தும் ஒளிபரப்பப்பட்டன. அதே ஆண்டு வண்ணத் தொலைக்காட்சி இந்தியாவிற்கு அறிமுகமானது.
"https://ta.wikipedia.org/wiki/புவிப்புறத்_தொலைக்காட்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது