துபாய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: pa:ਦੁਬਈ
வரிசை 83:
[[2008]] தரவுகளின்படி துபையின் [[மொத்த உள்நாட்டு உற்பத்தி]] 82.11 பில்லியன் [[அமெரிக்க டாலர்]]கள் ஆகும்<ref name=gdp>{{cite web|url=http://dsc.gov.ae/EN/Pages/GrossDomesticProduct.aspx |title="Gross Domestic Product (GDP) of the Emirate of Dubai 2006–2008" |publisher=Dubai Statistics Centre}}</ref>. துபை ஐக்கிய அரபு அமீரகங்களில் பொருளாதாரத்தில் இரண்டாவது பெரிய அமீரகம் ஆகும். அபூ ழபீயை விட நிலப்பரப்பிலும், எண்ணெய் வளத்திலும் பல மடங்கு சிறிய ஒரு அமீரகம் துபை. துபை அமீரகத்தின் தொடக்க கால வளர்ச்சிக்கு, அதன் எண்ணெய் வளம் காரணமாகவும், போதுமானதாகவும் இருந்தது. ஆனால் துபாயின் எண்ணெய் வளம் அதன் தொடர் வளர்ச்சிக்கு போதுமானதாக இருக்காது என்பதை அந்த அமீரகத்தின் அரசாங்கம் உணர்ந்ததே இருந்தது. இதன் காரணமாக, துபை அரசு எண்ணெய் சாரா பிற தொழில்துறைகளின் வளர்ச்சிக்கு வித்திட்டது. வெளிநாட்டு மூலதனத்தை அதிகரிக்கும் பொருட்டு அரசு நடைமுறைப்படுத்திய திட்டங்களின் விளைவாக துபை கடந்த முப்பது ஆண்டுகளில் பொருளாதரத்தில் பல மடங்கு வளர்ச்சி அடைந்தது. குறிப்பாக 2005-ல் வெளிநாட்டவர்கள் துபையில் குறிப்பிட்ட சில பகுதிகளில் சொத்து வாங்க அனுமதி அளித்தது வெளிநாட்டு முதலீடு பெருக ஒரு முக்கிய காரணம் ஆகும்.
 
துபையின் கட்டுமானத் துறை, 2004 தொடங்கி ஐந்து ஆண்டுகள் அசாதாரண வளர்ச்சியை அடைந்தது. இதற்கு [[இந்தியா]], [[இங்கிலாந்து]], [[உருசியா]], [[ஈரான்]], [[பாகித்தான்பாகிஸ்த்தான்]] மற்றும் [[அமெரிக்கா]] முதலிய நாடுகளில் இருந்து வந்த முதலீடுகள் பெரும் காரணமாக அமைந்தது. 2008 ஆண்டு இறுதி வாக்கில் துபையின் கட்டுமானத் துறையும் அதை நம்பி இருந்த துபையின் பொருளாதாரமும் பெரும் வீழ்ச்சியை அடைந்தன. இந்த வீழ்ச்சிக்கு உலகப் பொருளாதாரப் பின்னடைவு மற்றும் அளவுக்கு அதிகமாக அதிகரித்த சொத்துக்களின் மதிப்பு ஆகியவை முக்கிய காரணங்கள்.
 
== இவற்றையும் பார்க்கவும் ==
"https://ta.wikipedia.org/wiki/துபாய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது