போர்த்துகல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 99:
 
ரோம் ஒரு குடியேற்றவாத ஆட்சியை அங்கே நிறுவியது. விசிகோத்தியக் காலத்திலேயே லுசித்தானியாவின் உரோமமயமாக்கம் முழுமை பெற்றது. கிமு 27ல் லுசித்தானியா உரோமப் பேரரசின் ஒரு மாகாணம் ஆனது. லுசித்தானியர் தமது சுதந்திரத்தை இழந்து அடக்கப்படுபவர்கள் ஆயினர். பின்னர், கலீசியா என்று அழைக்கப்பட்ட, லுசித்தானியாவின் வடக்கு மாகாணம் உருவானது. இன்று [[பிராகா]] என்று அழைக்கப்படும் பிராக்காரா ஆகசுத்தா என்பது இதன் தலைநகரமாக இருந்தது. இன்றும் காசுட்ரோ என அழைக்கப்படும் மலைக் கோட்டைகளின் அழிபாடுகளும் பிற [[காசுட்ரோ பண்பாடு|காசுட்ரோ பண்பாட்டு]] எச்சங்களும் தற்காலப் போர்த்துகல் முழுவதும் காணப்படுகின்றன. ஏராளமான உரோமர் காலக் களங்கள் இன்றைய போர்த்துகலில் பரவலாக உள்ளன. சில நகர் சார்ந்த எச்சங்கள் மிகவும் பெரியவை. [[கொனிம்பிரிகா]], [[மிரோபிரிகா]] என்பன இவற்றுக்கு எடுத்துக்காட்டுகள்.
 
==முசுலிம் ஐபீரியா==
கிபி 712ல் [[உமயாட் கலீபகம்]] ஐபீரியத் தீவக்குறையைக் கைப்பற்றியதில் இருந்து 1249ல் [[போத்துகலின் மூன்றாம் அபோன்சோ]] திரும்பக் கைப்பற்றும் வரை ஏறத்தாழ ஐந்தரை நூற்றாண்டுகள் போர்த்துகல் கலீபகத்தின் ஒரு பகுதியாக இருந்தது.
 
விசிகோத்துகளை சில மாதங்களிலேயே முறியடித்த உமயாட் கலீபகம் தீவக் குறையினுள் விரைவாகத் தனது ஆதிக்கத்தை விரிவுபடுத்தியது.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/போர்த்துகல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது