பைசாந்தியப் பேரரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 59:
|footnotes = &sup1; கொன்சுதாந்தினோபில் (330–1204, 1261–1453). [[நைசியா பேரரசு|நைசியா பேரரசின்]] தலைநகர், நைசியா (தற்போது [[ஈஸ்மித்]], துருக்கி]])யில் இருந்தது.<br />² Establishment date traditionally considered to be the re-founding of Constantinople as a capital of the Roman Empire although other dates are often used<br />³ See [http://www.tulane.edu/~august/H303/handouts/Population.htm this table of population figures] provided by the History Department of [[Tulane University]]. The numbers are based on estimates made by J.C. Russell in "Late Ancient and Medieval Population," published in the ''Transactions of the American Philosophical Society'' (1958), ASIN B000IU7OZQ.
}}
'''பைசாந்தியப் பேரரசு''' (''Byzantine Empire'') என்பது, மத்திய காலத்தில், இன்று [[இஸ்தான்புல்]] என்று அழைக்கப்படும், கொன்சுதாந்தினோபிளைத் தலைநகரமாகக் கொண்டு விளங்கிய பேரரசைக் குறிக்கப் பயன்படுகின்றது. அங்கு [[கிரேக்க மொழி]] பேசப்பட்டது. [[19ம் நூற்றாண்டு|19 ஆம் நூற்றாண்டிலிருந்து]] இப்பெயர் வழங்கி வருகின்றது. இது பொதுவாக [[மேற்கு ரோமப் பேரரசு|மேற்கு ரோமப் பேரரசின்]] வீழ்ச்சிக்கு முந்திய காலத்தைக் குறிக்கிறது. இது '''கிழக்கு ரோமப் பேரரசு''' என அழைக்கப்படுவதும் உண்டு. "பைசாந்தியப் பேரரசு" "கிழக்கு ரோமப் பேரரசு" போன்ற பெயர்கள் பிற்காலத்தில் வரலாற்று எழுத்தாளர்களால் உருவாக்கப்பட்டவை. அங்கு வாழ்ந்தவர்களைப் பொறுத்தவரை, இதை அவர்கள் [[ரோமப் பேரரசு]] என்றோ "ரோமானியா" என்றோதான் அதன் இருப்புக் காலம் முழுதும் அழைத்து வந்தனர்.<ref name="Millar et al">{{harvnb|Millar|2006|pages=2, 15}}; {{harvnb|James|2010|p=5}}; {{harvnb|Freeman|1999|pp=431, 435–437, 459–462}}; {{harvnb|Baynes|Moss|1948|loc="Introduction", p. xx}}; {{harvnb|Ostrogorsky|1969|p=27}}; {{harvnb|Kaldellis|2007|pp=2–3}}; {{harvnb|Kazhdan|Constable|1982|p=12}}; {{harvnb|Norwich|1998|p=383}}.</ref> இது ரோமப் பேரரசின் ஒரு தொடர்ச்சியாகவே கருதப்பட்டதுடன் அதன் பேரரசர்களும், ரோமப் பேரரசர்களின் தொடர்ச்சியான மரபுவழியைச் சேர்ந்தவர்களாகவே இருந்தனர். கிபி 5 ஆம் நூற்றாண்டில் [[மேற்கு ரோமப் பேரரசு]] துண்டு துண்டாக உடைந்து வீழ்ச்சியுற்றபோதும், அதன் கிழக்குப் பாதி, [[ஓட்டோமான் துருக்கியர்]] 1453ல் அதனைக் கைப்பற்றும்வரை, மேலும் ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து சிறப்புடன் இருந்தது. இப்பேரரசின் இருப்புக் காலத்தின் பெரும் பகுதியிலும், ஐரோப்பாவின் பலம் மிக்க பொருளாதார, பண்பாட்டு, படைத்துறை வல்லரசாக இது விளங்கியது.
 
"ரோம", "பைசாந்திய" ஆகிய அடைமொழிகள் பிற்காலத்து வழக்காக இருந்தாலும், இந்த மாற்றம் ஒரு குறித்த நாளில் நிகழ்ந்தது அல்ல. பல கட்டங்களில் இது நிழ்ந்தது எனலாம். 285 ஆம் ஆண்டில் பேரரசர் டியோகிளீசியன் (ஆட்சிக்காலம் 284-305) ரோமப் பேரரசின் நிர்வாகத்தைக் கிழக்குப் பகுதி, மேற்குப் பகுதி என இரண்டு பாதிகளாகப் பிரித்தார்.<ref>{{harvnb|Treadgold|1997|p=847}}.</ref> 324 ஆம் ஆண்டுக்கும், 330 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், பேரரசர் [[முதலாம் கான்சுதந்தைன்]] (306-337) பேரரசின் முதன்மைத் தலைநகரை ரோமில் இருந்து [[போசுபோரசு|போசுபோரசின்]] ஐரோப்பியப் பக்கத்தில் இருந்த [[பைசாந்தியம்]] என்னும் இடத்துக்கு மாற்றினார். இந்த நகரின் பெயர் ''கான்சந்தினோப்பிள்'' (கான்சுதந்தைனின் நகரம்) அல்லது ''நோவா ரோமா'' (புதிய ரோம்) என மாறியது. பேரரசர் [[முதலாம் தியோடோசியசு|முதலாம் தியோடோசியசின்]] (379–395) கீழ் கிறித்தவம் பேரரசின் சமயமாக மாறியது. மாறுநிலையின் இறுதிக்கட்டம், பைசாந்தியப் பேரரசர் [[ஏராக்கிளியசு|ஏராக்கிளியசின்]] ஆட்சிக்காலத்தின் இறுதிப் பகுதியில் தொடங்கியது. இக்காலத்தில், நிர்வாகம், படைத்துறை ஆகியவற்றில் புதிய மாற்றங்கள் ஏற்பட்டதுடன், இலத்தீனுக்குப் பதிலாக கிரேக்க மொழியும் நிர்வாக மொழியாக ஆகியது.<ref>{{harvnb|Ostrogorsky|1969|pp=105–107, 109}}; {{harvnb|Norwich|1998|p=97}}; {{harvnb|Haywood|2001|pp=2.17, 3.06, 3.15}}.</ref> இக்காலப் பகுதியில், பேரரசினுள் அடங்கியிருந்த கிரேக்க மொழி பேசாத பகுதிகளான மையக்கிழக்கு, வட ஆப்பிரிக்கா என்னும் பகுதிகளை முன்னேறி வந்த அரபுக் கலீபகத்திடம் பேரரசு இழந்ததுடன், அது பெரும்பாலும் கிரேக்கம் பேசுகின்ற பகுதிகளை அடக்கியதாகச் சுருங்கியது. பைசந்தியப் பேரரசு, இலத்தீன் மொழி, பண்பாடு ஆகியவற்றிலிருந்து விலகி கிரேக்க மொழி, பண்பாடு ஆகியவற்றைக் கைக்கொண்டதாலும், ரோம பலகடவுட் கொள்கை கொண்ட சமயத்திலிருந்து கிறித்தவத்துக்கு மாறியதாலும், தற்காலத்தில் அது, பண்டைய ரோமப் பேரரசில் இருந்து வேறுபடுத்தப்படுகின்றது.<ref name="Millar et al"/>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/பைசாந்தியப்_பேரரசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது