கம்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 19:
 
==2000 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் கம்பு==
இந்தியாவில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சிகளில் கம்பு 2000 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது தெரியவருகிறது.கம்புப் பயிர் வறட்சியையும் தாங்கிக்கொண்டு வளரக்கூடியது. அதிக தட்ப வெப்ப சூழலிலும், குறைவான ஊட்டமுள்ள நிலங்களிலும் கூட வளரும் தன்மை உடையது.
 
 
நன்கு உலர வைத்த கம்பு தானியம் சுமார் 3 முதல் 6 மாதங்கள் வரை கெடாமல் இருக்கும். பின்னர் மீண்டும் ஒருமுறை வெயிலில் காயவைத்து எடுத்து வைத்தால் மேலும் 6 மாதங்கள் கெடாமல் இருக்கும்.
 
== பாரம்பரிய முறையில் கம்பு சமையல் ==
 
* முதலில் கம்பை எடுத்துத் தண்ணீரில் ஊற வைக்கவும்.
* ஊறிய பின்னர் தண்ணீரை வடித்து விட்டுப் பின்னர் அந்தக் கம்பைத் தூய்மையான துணியில் பரப்பி வைத்து விடவும்.
* மேற்பரப்பிலுள்ள ஈரம் போனபின் கம்பை எடுத்து உரலில் இட்டு இலேசாகக் குத்தவும்.
* அதில் உமி நீங்கியதும் அதை முறத்தில் இட்டுப் புடைக்கவும்.
* பின்னர் மீண்டும் உரலிலிட்டு நன்கு குத்தவும்.
* அதிலிருந்து பெரிய குருணை, சிறிய குருணை, மாவு ஆகியவற்றைத் தனித்தனியே பிரிக்கவும்.
* பின்னர் அடுப்பில் உலை வைத்து முதலில் பெரிய குருணையை இட்டு வேக வைக்கவும்.
* அது வேகக் கொஞ்சம் நேரம் அதிகமாகும். அது வெந்தபின் சிறிய குருணையை அதனுடன் சேர்த்துக் கலக்கி வேக வைக்கவும்.
* அதுவும் வெந்தபின்னர் மாவினைப் போட்டுக் கலக்கவும்.
* குறிப்பிட்ட பதத்திற்கு வெந்தபின்னர் அடுப்பை அணைத்துவிட்டுப் பாத்திரத்தை அப்படியே சிறிது நேரம் மூடிவைக்கவும்.
* பின்பு கெட்டியாக ஆகிவிட்ட கம்பஞ்சோற்றினைக் கரண்டியில் எடுத்து உருண்டைகளாகத் தட்டில் இட்டு அதனுடன் குழம்பு, ரசம், மோர் சேர்த்து உண்ணலாம்.
* மீதமாகி விட்டால் சிறுசிறு உருண்டைகளாக்கிப் பாத்திரத்திலிட்டு நல்ல நீரை ஊற்றி வைத்துவிட்டால் இரண்டு நாட்களுக்குக் கெடாமல் இருக்கும்.
 
==கம்பின் பயன்பாடு==
"https://ta.wikipedia.org/wiki/கம்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது