ஆறு ஆண்டுகளில் கட்டிடங்கள் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்று மலேசிய அரசாங்கம் வரையறுத்தது. அதன் விளைவாக, ஒவ்வொரு கோபுரத்திற்கும் ஒரு கட்டுமான கூட்டமைப்பு என இரண்டு கட்டுமான கூட்டமைப்புகளுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. மேற்கு கோபுரத்தைக் கட்டும் பொறுப்பை <supsmall>(மேல் வலது புகைப்படத்தில் வலதுபுறமாக இருக்கும் கோபுரம்)</supsmall> [[ஜப்பான்|ஜப்பானிய]] கட்டுமான கூட்டமைப்பான ஹசாமா கார்ப்பரேசன் ({{lang-en|Hazama Corporation}}) ஏற்றுக் கொண்டது.
கிழக்கு கோபுரத்தைக் கட்டும் பொறுப்பை <supsmall>(மேல் வலது புகைப்படத்தில் இடதுபுறமாக இருக்கும் கோபுரம்)</supsmall> தென் கொரிய கட்டுமான கூட்டமைப்பான [[சம்சுங்|சாம்சுங்]] இஞ்ஜினியரிங் & குக்டோங் இஞ்ஜினியரிங் ({{lang-en|Samsung Engineering & Construction and Kukdong Engineering & Construction}}) ஏற்றுக் கொண்டது. கட்டுமானம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, ஆரம்பக் கட்டத்தில் வழக்கமாக நடைபெறும் [[உறுதிக்கலவை தொழில்நுட்பம்|உறுதிக்கலவை]] வலிமைச் சோதனையில் ({{lang-en|routine strength test}}) ஒரு பகுதியில் பலகீனங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.