யங்கின் மட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎மேலும் பார்க்கவும்: உரை திருத்தம்
Prash (பேச்சு | பங்களிப்புகள்)
"'''யங்கின் மட்டு''', '''இழுவைத..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
வரிசை 1:
'''யங்கின் மட்டு''', '''இழுவைத் தகைப்பு''' அல்லது '''மீள்தன்மை மட்டு''', என்பது மீள்தன்மையுடைய பொருட்களின் கெட்டித் தன்மையை அளக்கப் பயன்படும் ஒரு கணியமாகும். இது ஒரு அச்சின் வழியேயான தகைப்புக்கும் அவ்வச்சின் வழியேயான விகாரத்துக்கும் இடையிலான விகிதமாக வரையறுக்கப்பட்டுள்ளது. இவ்வரையறை ஊக்கின் விதிக்கமைவான வீச்சில் மாத்திரமே வலிதாகும்.<ref>{{GoldBookRef|title=modulus of elasticity (Young's modulus), ''E''|file=M03966}}</ref> திண்மப் பொறியியலில், தகைப்பு - விகார வளையியின் யாதேனுமொரு புள்ளியிலுள்ள படித்திறன், தான்சன் மட்டு எனப்படும். தகைப்பு - விகார வளையியின் விகிதசம எல்லையினுள் உள்ள தான்சன் மட்டு, யங்கின் மட்டு எனப்படும்.
நீட்சித் தகைவுக்கும், நீட்சித் திரிபுக்கும் இடையே உள்ள தகவு யங் குணகம் எனப்படும். இதன் அலகு N/m2 ஆகும்.
யங் குணகத்தை அறிய சீரான வளைவு முறை சோதனை செய்யலாம்.
 
19ம் நூற்றாண்டில் வாழ்ந்த பிரித்தானிய விஞ்ஞானியான தோமசு யங்கின் நினைவாக இது பெயரிடப்பட்டது. எவ்வாறாயினும், இவ் எண்ணக்கரு 1727லேயே [[லியோனார்டு ஆய்லர்|லியனாட் ஒயிலர்]] என்பவரால் விருத்தி செய்யப்பட்டது. மேலும் இது தொடர்பான ஆரம்பப் பரிசோதனைகள் இத்தாலிய விஞ்ஞானியான [[ஜோர்தானோ ரிக்கார்டி]]யினால் 1782ல் மேற்கொள்ளப்பட்டன.<ref>''The Rational Mechanics of Flexible or Elastic Bodies, 1638–1788'': Introduction to Leonhardi Euleri Opera Omnia, vol. X and XI, Seriei Secundae. Orell Fussli.</ref>
 
==மேலும் பார்க்கவும்==
*[[பரும குணகம்]]
*[[விறைப்பு குணகம்]]
 
[[பகுப்பு:இயற்பியல்]]
 
[[en:Young's Modulus]]
"https://ta.wikipedia.org/wiki/யங்கின்_மட்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது