மும்மலங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
மும்மலம் என்ற கட்டுரை உள்ளது. எனவே இணக்க வேண்டுகோள்
No edit summary
வரிசை 2:

'''மலம்''' என்பது [[இந்து சமயம்|இந்து சமயத்தின்]] ஒரு தத்துவப் பிரிவாகிய [[சைவசித்தாந்தம்]] கூறும் மூன்று உண்மைப் பொருள்களில் ஒன்றாகும். இம்மூன்று உண்மைப் பொருள்கள் ''பதி (இறைவன்)'', ''பசு (உயிர்கள்)'', ''பாசம் (மலங்கள்)'' என்பனவாகும். இவற்றுள் மலங்கள் மூன்று வகையாக உள்ளன. இவை மூன்றையும் ஒருமித்து '''மும்மலங்கள்''' என்பது வழக்கம். சைவ சித்தாந்தத்தின்படி இறைவன், உயிர்கள், மலங்கள் ஆகிய மூன்றும் எப்பொழுதும் நிலைத்திருப்பவை. இவற்றுள் எதுவுமே மற்றொன்றால் படைக்கப்பட்டது அல்ல என்கிறது இத்தத்துவம். இறைவனைச் சென்றடைவதே உயிர்களின் நோக்கம். ஆயினும் குறையுள்ள அறிவு கொண்ட உயிர்கள் இறைவனைச் சேரவிடாமல் உயிர்களின் அறிவை, அறிவற்ற சடப்பொருள்களான மலங்கள் மறைத்துக் கொண்டிருக்கின்றன. இதனால் ஏற்படுகின்ற அறியாமையே உயிர்களின் துன்பங்களுக்குக் காரணம் என்பது சைவ சித்தாந்தக் கருத்து. உயிர்களை மலங்களின் பிணைப்பிலிருந்து விடுவித்துத் தன்னுடன் சேர்த்துக்கொள்ள இறைவனின் அருள் வேண்டும்,
'''மும்மலம்''' என்பது ஒரு சமயநெறிக் கோட்பாடு. மும்மலம் நீக்கின் சிவனடி சேரலாம் என்கிறது, சைவம். சைவசித்தாந்தமும் இதனை வழிமொழிகிறது. மும்மலம் என்பது மூன்று கழிவுப்பொருள்கள்.

உண்ட உணவு மலமாகி வெளிப்படுவதை அறிவோம். இது ஒரு கழிவுப்பொருள். வியர்வை, சிறுநீர், மலம் என்னும் மூன்றும் உடல் வெளிப்படுத்தும் மலங்கள். அதுபோல உணர்வு வெளிப்படுத்தும் மலங்கள் மூன்று. அவற்றைப் பொதுநெறிச் சிந்தனையாளர்கள் '''காமம், வெகுளி, மயக்கம்''' எனக் காட்டினர்.<ref>
காமம் வெகுளி மயக்கம் இவை மூன்றன்

நாமம் கெடக் கெடும் நோய் – திருக்குறள் 360</ref><ref>
மூன்று உள முக்குற்றம் முழுதும் நலிவன

மான்று இருள் தூங்கு மயங்கிக் கிடந்தன (திருமந்திரம் 2435)</ref><ref>
காமம் வெகுளி மயக்கம் இவை கடிந்து

ஏமம் பிடித்திருந்தேன் (திருமந்திரம் 2436)</ref>

சமயநெறி இவற்றை மும்மலம் ('''ஆணவம், கன்மம், மாயை''') எனக் காட்டியது. இதற்கு விளக்கம் சொல்லும் சங்கராச்சாரியார் சூரபன்மன் காமத்தால் அழிந்தான், சிங்கமுகன் கன்மத்தால் அழிந்தான், தாரகன் மாயையால் அழிந்தான் என விளக்குகிறார். <ref>[http://thamizhoviya.blogspot.in/2010/03/blog-post_9848.html சங்கராச்சாரியார் விளக்கம்]</ref>

சைவ சமயம் ஆணவம் என்பது நெல்லிலுள்ள உமி போன்றது, கன்மம் நெல்லிலிள்ள முளை போன்றது, மாயை நெல்லிலுள்ள தவிடு போன்றது என்கிறது.

சிவஞான சித்தியார் உரை <ref>நூற்பா 2-86</ref> ஆணவம் தவிடு போன்றது, கன்மம் முளை போன்றது, மாயை உமி போன்றது என்று உவமைகளை மாற்றிக் காட்டுகிறது. <ref>[[மு. அருணாசலம்]], தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, மூன்றாம் பாகம், 2005, பக்கம் 36</ref>

சிவபெருமான் திரிசூலம் இம்மூன்றையும் அழிக்கும் ஆயுதம் என்கின்றனர். சிவபெருமான் முப்புரம் எரித்தான் என்பது இந்த மும்மலங்களை அழித்தான் என்பதைக் காட்டும் மறைநெறி என்கின்றனர்.

[[படிமம்:Elephant feces in the wildlife.jpg||thumb|200 px|right|யானையின் உடலிலிருந்து கழிந்த மலம்]]

==சமயநெறி விளக்கம்==
*ஆணவம் = பாசம்,
*கன்மம் என்பது ஆகாமியம், சஞ்சிதம், பிராரர்த்தம் என மூன்று வகை.
*மாயை என்பது உள்ளதும் அன்று இல்லதும் அன்று. இறைவனின் வேறானது அன்று. உலகம் மாயை அன்று. அணுவின் உண்மையினை மறைக்கும் பொய்யை மெய்போல் காட்டும். <ref>(இந்த மூன்றும்) சைவசித்தாந்த அகராதி, பேராசிரியர் அ.கி. மூர்த்தி, 1998</ref>

==சொல்நெறி விளக்கம்==
*ஆணவம் – ஆள்வதும், ஆள நினைப்பதும் ஆண்மை. இது மனத் திமிர். இது அவம். தவமல்லாச் செயல்.<ref>
தவம் செய்வார் தம் கருமம் செய்வார் மற்றையார்

அவம் செய்வார் ஆசை உட்பட்டு (திருக்குறள் 266)</ref> இந்த மனமலம் அகற்றப்பட வேண்டும்.
*கன்மம் – உயிரினத்தோடு கல் போல் மறைந்து கிடப்பது. இதனை உயிரினத்தோடு ஊழ்த்து வளரும் ஊழ் என்பர்.
*மாயை – கற்பனை நினைவுகள்.

==அறிவுக்கண் பார்வை==
*ஆணவம் – காட்டில் திரியும் ஆண்விலங்கு, தன் ஆண்மையை வெளிப்படுத்தித் தன் கூட்டத்தைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும். இப்படி மற்றவரையெல்லாம் அடக்கி ஆளும் ஆணவ மலத்தை மனித இனம் கழித்து எறியவேண்டும்.
*கன்மம் – ஆசை, பொறாமை போன்ற குணங்கள் மனிதனோடு கூடப் பிறந்தவை. இவையும் கழிக்கப்படவேண்டிய மலம்.
*தன்னைப்பற்றிய கற்பனையில் மிதப்பது எல்லாருக்கும் இயல்பு. இந்த மாயைக்கும் அளவில்லை. இறைநிலையை எய்த விரும்புவோர் மாயை மலத்தைக் கழிக்க வேண்டும்.

உடல்மலம் தானே கழியும். உள்ளத்தில் இருக்கும் இந்த மும்மலத்தை நாம்தான் கழிக்க வேண்டும். கழித்தால் வாழும்போதே தெய்வநிலை அடையலாம்.<ref>
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான் உறையும்

தெய்வத்துள் வைக்கப்படும். (திருக்குறள் 50)</ref>

==அடிக்குறிப்பு==
{{Reflist|2}}

==மலங்களின் வகைகள்==
"https://ta.wikipedia.org/wiki/மும்மலங்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது