இப்னு சீனா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 100 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
No edit summary
வரிசை 34:
<ref>Cas Lek Cesk (1980). "The father of medicine, Avicenna, in our science and culture: Abu Ali ibn Sina (980-1037)", ''Becka J.'' '''119''' (1), p. 17-23.</ref><ref>[https://eee.uci.edu/clients/bjbecker/PlaguesandPeople/lecture5.html Medical Practitioners]</ref> <ref>D. Craig Brater and Walter J. Daly (2000), "Clinical pharmacology in the Middle Ages: Principles that presage the 21st century", ''Clinical Pharmacology & Therapeutics'' '''67''' (5), p. 447-450 [448-449].</ref>. முக்கியமாக உடலியக்கவியல் ஆராய்ச்சியில் முறைப்படியான பரிசோதனைகளையும், அளவீடுகளையும் முதன்முறையாகப் பயன்படுத்தினார். <ref name=Park>Katharine Park (March 1990). "''Avicenna in Renaissance Italy: The Canon and Medical Teaching in Italian Universities after 1500'' by Nancy G. Siraisi", ''The Journal of Modern History'' '''62''' (1), p. 169-170.
{{quote|"Students of the history of medicine know him for his attempts to introduce systematic experimentation and quantification into the study of physiology".}}</ref>. தொற்றுநோய்களைக் கண்டறிந்தும், அவை தொற்றும் முறைகளை வகைப்படுத்தியும், அவற்றைக் கட்டுபடுத்தும் முறைகளைக் கண்டறிந்தும் அக்கால மருத்துவத் துறைக்குப் பெரும் பங்களிப்புகளைச் செய்தார். <ref name=Tschanz>David W. Tschanz, MSPH, PhD (August 2003). "Arab Roots of European Medicine", ''Heart Views'' '''4''' (2).</ref>
 
மருத்துவ இளவரசர் இப்னு சீனா (980-1037)
 
அபு அலி அல் ஹுசைன் இன்பு அப்துல்லா இப்னு சீனா என்ற முழுப்பெயரை உடைய இவர் உலகம் முழுவதும் அறியப்படுவது Avicenna என்ற லத்தின் மொழிப் பெயர். இஸ்லாமிய உலகில் அறியப்படும் இப்னு சீனா இன்றைய உஸ்பெக்கிஸ்தான் தலைநகரான புக்கராவில் Kharmaithen (The Land of the Sun) க்கு அருகிலுள்ள Afshana என்ற ஊரில் ஆகஸ்ட் 980 (சஃபர் 370)ல் பிறந்து ஈரானிலுள்ள ஹமதான் நகரில் கிபி.1037 ஜூனில் மரணமடைந்தார்.
 
இப்னு சீனாவைப் பற்றி கூறும்போது பல் வேறு விதமான கருத்துக்கள் தொனிக்கின்றன. அவர் பிறப்பையும் இறப்பையும் மாற்றமில்லாமல் கூறுபவர்கள் அவர் Brethren Purity (اخوان‌الصفا) என்ற பிரிவைச் சேர்ந்தவர் என்றும், வேறு சிலர் ஹனஃபி பிரிவை சேர்ந்தவர் என்றும், இன்னும் சிலர் ஷியா பிரிவை சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுகின்றனர். அவரது தந்தையைப் பற்றி தெளிவான செய்தி இல்லை, இவர் இரண்டாவது மகன் என்ற செய்தி உண்டு. அவர் துருக்கி அல்லது அரபி அல்லது பாரசீக வம்சம் என பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. ஆனால் அவரது தாயார் அஃப்ஷானா கிராமத்தைச் சேர்ந்தவர், சித்தாரா (star) என்ற பாரசீகப் பெயரை உடையவர் என்றும் எனவே அவர் பாரசீகர் என்றும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
 
வாழ்க்கைச் சுருக்கம்
 
கிபி. 900 த்தில் இஸ்லாமிய வெற்றிக்குப் பிறகு Transoxiania வும் கொரஸானும் சாமனித்தின் ஆளுமைக்கு உட்பட்டது. புக்கரா தலைநகராகவும் சமர்கந்து முக்கிய கலாச்சார நகராகவும் விளங்கின. பத்தாம் நூற்றாண்டின் மத்தியில் சாமனித் ஆட்சி வலுவிழக்கத் தொடங்கியது. அச்சமயத்தில் இப்னு சீனா பிறந்தார். அவர் பிறந்திலிருந்து மரணிக்கும் வரை வாழ்வின் பெரும்பகுதி நிலையற்ற அரசியல் சூழல்களினால் பாதிப்புக்குள்ளானது.
 
ஆரம்பக் கல்வியை தன் தந்தையிடம் கற்றார். விளையும் பயிர் முளையிலேயே தெரியுமல்லவா, இப்னு சீனா சிறுவனாக இருக்கும்போதே மற்ற சிறுவர்களைக் காட்டிலும் வித்தியாசமானவராகத் திகழ்ந்தார். நூஹ் பின் மன்சூருடைய ஆட்சி காலத்தில் அவருடைய தந்தை அப்பகுதியின் ஆளுநராக இருந்தமையால் தினமும் மாலைப் பொழுது பல அறிஞர்கள் கூடுவது வழக்கமாக இருந்ததால் அவர் வீடு ஒரு கல்விச்சாலை போல் அமைந்திருந்தது. விளையாடும் பருவத்திலிருந்த அறிவின் தேடல், அங்கு குழுமிய அறிஞர்களிடமிருந்து பல்வேறு அறிவுகள் பெறும் வாய்ப்பு அமைந்தது. இயற்கையிலேயே அபரிமிதமான நினைவாற்றல் கொண்டிருந்த இப்னு சீனா தனது பத்தாவது வயதில் திருக்குர்ஆனை மனனம் செய்ததோடு தான் படித்த அனைத்து அரபுப் பாடல்களையும் மனனம் செய்தார். பதிமூன்றாம் வயதில் மருத்துவம் படிக்கத் தொடங்கியவர் பதினாறாம் வயதில் அதில் நிபுணத்துவம் பெற்று வைத்தியம் செய்யத் தொடங்கினார்.
 
சிறுவனாக இருந்த காலத்தில் அவரது தந்தையும் சகோதரரும் ஆன்மா அதன் ஆற்றல் பற்றியும், தத்துவம், இந்திய கணிதம் பற்றியும் விவாதிப்பதை தொடர்ந்து கவனித்து வந்ததாகவும், பின்பு தந்தையின் உதவியால் ஒரு வணிகரிடமிருந்து (greengrocer) இந்திய எண் கணிதத்தையும் (arithmetic), இஸ்மாயில் அல் ஜாஹித் என்ற அறிஞரிடம் ஹனஃபி சட்டங்களையும் (ஃபிக்ஹ்) பயின்றதாகவும், அக்காலத்தில் வாழ்ந்த சில அறிஞர்களிடம் தர்க்கம், றைமெய்இயல் (metaphysics) ஆகியவற்றை கற்றதாகவும், சில நெருக்கடியான சூழலில் உதவி பெற்றதைத் தவிர பெரும்பாலும் தன் சுய ஆற்றலால் பல்வேறு அறிவுகளைப் பெற்றதாகவும் தன் வாழ்க்கைக் குறிப்பில் குறிப்பிடுகிறார் என சில ஆய்வாளர் குறிப்பிடுகின்றனர்.
 
ஆனால், ஒருமுறை புக்கராவுக்கு வந்திருந்த Natali என்ற தத்துவஇயல் அறிஞரை தம் இல்லத்திற்கு அழைத்து வந்து தன் மகனுக்கு தத்துவஇயல் கற்கவைத்ததார் என்றும், பாடம் தொடங்கிய சில நாட்களிலேயே இவருடைய ஆறிவாற்றலைக் கண்ட Natali இப்னு சீனாவை கல்வியைத் தவிர வேறு எவற்றிலும் ஈடுபடுத்தவேண்டாம் என்று அவரது தந்தையிடம் ஆலோசனை வழங்கியதாகவும், சிறிதளவே ஆசிரியரிடம் தத்துவமும், கூடவே தர்க்கமும் கற்றபின் தாலமி, ஈகுலிட், அரிஸ்டாட்டில் ஆகியோரின் தத்துவங்களை ஆசிரியர் உதவி இல்லாமல் கற்றதாகவும், Natali புக்கராவை விட்டு குர்கன்ஞ் சென்றபிறகு இயற்கை அறிவியலும் மெட்டஃபிசிக்ஸும் தானாகவே கற்றதாகவும் 'AVICENNA - his life and works' என்ற புத்தகத்தில் Soheil M Afnan குறிப்பிடுகிறார்.
 
தர்க்கம், இறைமெய்இயல் (metaphysics) இவைகளைப் பற்றி கற்கும்காலை அரிஸ்டாட்டிலின் இறைமெய்இயலை (metaphysics) புரிவதில் பெரும் குழப்பம் இருந்தது. சுருங்கச் சொன்னால் அல் ஃபராபியின் விளக்கஉரை கிடைத்தபின்பே அது புரியத் தொடங்கியது. தத்துவஇயலை மேலும் கற்க தொடங்கியபோது இறைமெய்இயலில் ஏற்பட்ட குழப்பமே இங்கும் நீடித்தது. அவருடை குழப்பத்தைத் தீர்த்துவைக்கக்கூடியவர் எவருமில்லை. எனவே குழப்பமான தருணங்களில் கையிலெடுத்துள்ள நூற்களை வைத்துவிட்டு ஒலு செய்து பின் மஸ்ஜிதுக்குச் சென்று தனது குழப்பத்திற்கு தீர்வு கிடைக்கும் வரை தொழுதுக்கொண்டிருப்பார். இரவு வெகு நேரம் வரை படித்துவிட்டு அதே சிந்தனையில் உறங்கிவிடுவதும் வாடிக்கை. புரியாதவற்றிற்கு கனவுகள் மூலம் தீர்வு கிடைத்ததுண்டு. "அரிஸ்டாட்டிலின் இறைமெய்இயலை நாற்பது முறை வாசித்து அதன் வார்த்தைகள் நினைவில் நின்றாலும் சரியான பொருள் விளங்காமலிருந்தபோது ஒரு புத்தகக் கடையிலிருந்து மூன்று திர்ஹம் கொடுத்து வாங்கிவந்த அல்ஃபராபியின் புத்தகம் விளக்கம் கொடுத்தது" என்கிறார்.
 
16ம் வயதில் மருத்துவப் படிப்பை முடித்துவிட்டு தன் சுய முயற்சியால் பல்வேறு வகையான மருத்துவமுறையைக் கண்டுபிடித்தார். 18ம் வயதில் முழுப் பயிற்சிப் பெற்ற மருத்துவராக பரிணமித்தார். மாறுபட்ட அணுகுமுறையால் பல வியாதிகளை குணப்படுத்தினார். “மருத்துவத்தில் முழு பயிற்சி ஏற்பட்டபின் நான் நல்ல மருத்துவனானேன். பெரும்பாலோருக்கு இலவசமாக சிகிச்சை செய்தேன், எனது புகழ் அரண்மனைவரை சென்றது." பல போராட்டங்களுக்கிடையே ஆட்சியை தக்கவைத்துக்கொண்டிருந்த சுல்தான் நூஹ் இப்னு மன்சூர் (997ல்) நோயுடன் போராடிக்கொண்டிருந்தார். பலரின் வைத்தியம் பலன் அளிக்க மறுத்தது. இறுதியாக இப்னு சீனாவின் சிகிச்சை பலனளித்தது. அதன் பயன் அரண்மனை நூலகம் செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. இது அவருக்கு பெரிதும் உதவியது. அங்கு கிடைத்த அரிய நூல்கள் மேலும் தன் அறிவை வளர்த்துக்கொள்ளும் பெரும் வாய்ப்பாக அமைந்தது.
 
21ம் வயதில் முதன்முறையாக ’மஜுமு’(Compendium) என்ற நூலை எழுதினார், பின் அயலத்தாரின் வேண்டுகோளுக்கிணங்க இருபது தொகுதிகள் கொண்ட ‘அல் ஹாஸில் வல் மஹ்சூல் (the Importance and the Substance) என்ற நூலையும் நன்னெறிகளைப் பற்றி ‘அல் பி(B)ற் வல் இதம்' (Good work and Evil) என்ற நூலையும் எழுதினார். ஆனால் அந்நூல்களின் மூலப்பிரதியையே சக அறிஞர்களிடம் அளித்துவிட்டதால் அவை மறைந்துவிட்டது என்கின்றனர்.
 
22 வயதாகும்போது தந்தையின் மரணத்தால் ஏற்பட்ட பேரிழப்பு இப்னு சீனாவின் வாழ்க்கைப் போக்கையே மாற்றியது. சுயமாக சம்பாதிக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். எனவே தந்தை செய்த பணியை இவர் தொடர்ந்ததோடு மருத்துவப் பணியும் செய்துவந்தார். துருக்கியர்கள் புக்கராவைக் கைப்பற்றி சமனித் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவந்தனர். மஹ்மூது கஜினி ஆட்சிபொறுப்பில் அமர்ந்தபின் இப்னு சீனாவின் நிலமை இன்னும் மோசமாக ஆகியது. ஆட்சியருக்கும் இவருக்கும் இடையே ஏற்பட்ட பனிப்போரினால் புக்கராவை விட்டு நீங்கி கொரஸான் பகுதியில் பல்வேறு நகர்களில் சுற்றித் திரிந்தார். சென்ற நகர்களிலெல்லாம் மருத்துவராகவும், ஆசிரியராகவும், வாழ்க்கை நடத்தினார். ஒவ்வொரு நாள் மாலையிலும் தன் மாணவர்களுடன் தத்துவம் மற்றும் அறிவியல் பற்றி விவாதங்கள் நடத்துவார். 1012ல் குவாரிஜம் அருகிலுள்ள குர்கான் நகரில் சட்ட நிபுணராகப் பணியாற்றிக்கொண்டிருந்தபோது ஜுஜானி (Juzjani) என்பவர் மாணவராக சேர்ந்தார். அது குரு சீடர் உறவாக பரிணமித்து இறுதி வரை அவருடனேயே இருந்தார். ஜுஜானி வெறும் மாணவராக மட்டுமில்லாமல் இப்னு சீனாவின் வாழ்க்கை சரிதையையும் (autobiography) எழுதினார்.
 
கிபி. 925 முதல் ராய் (தற்போது டெஹ்ரானில் ஒரு பகுதி) யைத் தலைநகராகக்கொண்டு புயீத் வம்சத்தினர் ஆட்சி புரிந்து வந்தனர். அது ஒரு தலைசிறந்த இஸ்லாமிய நகராக விளங்கியது. அங்கு ஒரு மிகப் பெரிய நூலகம் ஒன்று இருந்தது, அங்கு ஆட்சிபுரிந்த ஃபக்கீர் அல் தௌலா அறிஞர்களை கண்ணியப்படுத்திவந்தார். 1012/1013ல் ராய் வந்தபோது சுல்தான் இறந்து விட்டார். பட்டத்துக்கு வரவேண்டிய மகன் மஜித் அல் தௌலா சிறுவனாக இருந்ததால் அவர் மனைவி செய்யிதா ஆட்சியைப் பிடித்துக்கொண்டார். இப்னு சீனாவால் அங்கு ஓரிரு வருடமே இருக்க முடிந்தது. மஜித் அல் தௌலாவின் சகோதரர் ஷம்ஸ் அல் தௌலாவின் ஆக்கிரமிப்பால் ராயை விட்டு நீங்கி ஹமதான் சென்றார். அங்கு ஷம்ஸ் அல் தௌலாவுக்கு ஏற்பட்டிருந்த குடல் நோயை(Colic) குணப்படுத்தியபின் அரசவை மருத்துவராகவும் பின்பு அமைச்சராகவும் பணியாற்றினார். 1021ல் ஷம்ஸ் அல் தௌலாவின் மறைவுக்குப் பின் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தின் விளைவாக இஸ்ஃபஹான் சென்றார் அங்கு ஆலா அல் தௌலாவின் அரசவையில் பணியாற்றிக்கொண்டிருந்தபோது அவருக்கு குடல் நோய்(Colic) கடுமையாகத் தாக்கியது. தனக்குத் தானாக வைத்தியம் செய்யத் தொடங்கியதாகவும் ஒரு நாள் எட்டு முறை மருந்து உட்கொண்டதாகவும் அதனால் சிறு குடல் பாதிக்கப்பட்டதாகவும் இருந்தாலும் தொடர்ந்து தனக்குத் தானே சிகிட்சை செய்து வந்ததாகவும் ஒரு நாள் ஒரு பங்கு கூடுதலாக சிவரிவிதை (Celery seed)யில் செய்யப்பட்ட மருந்தை இரு முறை உட்கொண்டதாகவும், ஆனால் சக வைத்தியர் ஐந்து பங்கு மருந்து கொடுத்ததாகவும் இது மேலும் சீர்கேடு செய்தது என்று ஜுஜானி கூறுகிறார்.
 
இருந்தாலும் இவர் எடுத்துக்கொண்ட சுய வைத்தியம் ஓரளவு பலனளித்தாலும் மிகவும் பலவீனமானார். சிறிது சுகம் கிடைத்தபின் மீண்டும் அரசவைக்குச் செல்லத் தொடங்கினார். பூரண சுகம் கிடைப்பதற்கு முன்பே அலா அல் தௌலாவின் நிர்பந்தத்தால் அவருடன் ஹமதான் படை எடுப்பில் கலந்துக்கொண்டபோது மீண்டும் நோய் தாக்கியது. நிற்பதற்குக்கூட சக்தியற்ற நிலைக்குத் தள்ளப்பட்டார். கடினமான நிலையிலேயே ஹமதான் அடைந்தார். தன் நிலையை உணர்ந்துக்கொண்ட இப்னு சீனா சிகிட்சைக்கான முயற்சி எதுவும் எடுத்துக்கொள்ளவில்லை. நண்பர்களின் வேண்டுகோளுக்கு செவிசாய்க்கவில்லை தன்னிடமிருந்த செல்வங்களை ஏழைகளுக்கு கொடுத்தார், தனது அடிமைகளுக்கு சுதந்திரம் கொடுத்தார், மரணம் வரை குர்ஆன் ஓதுவதில் கவனத்தை செலுத்தினார். கிபி. 1037 ஜூன் (ஹிஜ்ரி 428 ரமலான்) தனது 58 ம் வயதில் மரணத்தைத் தழுவினார். (ஹமதான் செல்லும் வழியில் மரணமடைந்ததாகவும் ஹம்தானுக்கு வெளியே அடக்கம் செய்யப்பட்டதாகவும் சிலர் தெரிவிக்கின்றனர்)
 
Medicine and Biology
பொதுவாகவே கிரேக்க தத்துவம் மட்டுமல்ல மருத்துவமும் அன்றைய இஸ்லாமிய உலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. அனேக கிரேக்க நூல்கள் அரபி மொழிக்கு மாற்றப்பட்டிருந்தன. ஹிப்போகிரட்ஸ், கேலன், அரிஸ்டாட்டிலின் மருத்துவக் கொள்கைகளைப் பின்பற்றி இப்னு சீனாவின் நூல்கள் இருந்தன. மேலும் கானூன் ஃபில் தீப் கேலனின் மருத்துவக் கொள்கையிலிருந்து புதிதாக எதுவும் சொல்லாவிட்டாலும் ஐயத்திற்கு இடமில்லாத சிறப்பான விளக்கத்தை அளிக்கிறது. இப்னு சீனாவுக்கு இரு நூற்றாண்டுகளுக்கு முன்பே ஹுனைன் பின் இஸ்ஹாக் , அலி பின் ரப்பான் தாப்ரி, முஹம்மது பின் ஜக்கரியா ராஜி போன்றோர்கள் முறையாகவும் மதிநுட்பத்துடனும் மருத்துவத்தைப் பற்றி விளக்கியுள்ளனர் என்று The Encyclopaedia of Iranica குறிப்பிடுகிறது.
மருத்துவத்துறையைப் பொருத்தவரை இப்னு சீனா இரண்டு முக்கிய நூல்களை அளித்துள்ளார். ஒன்று கானூன் ஃபில் தீப் (The Law of Medicine) மற்றொன்று கித்தாப் அல் ஷிஃபா (The Book of Healing). 1015 க்கு முன்பே கானூனை எழுதத் தொடங்கிவிட்டார்.
கானூன் ஃபில் தீப்
இது 5 பெரும் பாகங்களைக் கொண்டது. பாகம் 1, மருத்துவ விஞ்ஞானம் பற்றியது. இதனுள் நான்கு உட்பிரிவுகள். (முதல் பிரிவில் உடற்கூறு, அது உருவாக்கப்பட்ட four elements-நீர், நெருப்பு, காற்று, மண்; Four Humors- இரத்தம், சளி, மஞ்சள்பித்தம், கரும்பித்தம்; உடல் உள் வெளி உறுப்புக்கள் அமைப்பு (சதை, எலும்பு, நரம்பு, தமணி) அவைகளின் செயல்பாடு முதலானவை; பிரிவு 2, நோய்களின் காரணமும் அறிகுறியும்; பிரிவு 3, உடல்நலம் பேணல் மற்றும் preventive medicine; பிரிவு 4, சிகிட்சை மற்று உணவுக் கட்டுப்பாடு ஆகியவற்றை விரிவாக்கியிருக்கிறார்.) பாகம் 2, அரபு எண்கணித வரிசையில் (அப்ஜத்- د ج ب ا) 800க்கும் மேற்பட்ட மருந்துகள் (mostly of vegetable origin but with many animal and mineral substances). பாகம் 3, உச்சி முதல் பாதம் வரையிலான நோய்கள் பற்றி முறையாகப் பேசப்படுகிறது. பாகம் 4, நோயின் விளைவால் உடலில் ஏற்படும் மாற்றங்கள், பாதிப்புகள் (care of the hair, skin, nails, body odor and treatment of overweight/underweight) மற்றும் மஸாஜ் உடற்பயிற்சி உட்பட பல்வேறு பயிற்சிகள். பாகம் 5, மருந்துக் குறிப்பு அட்டவணை (The Formulary which contains some 650 compound prescriptions - theriacs, elctuaries, potions, syrups etc, ).
ஒரு மருத்துவர் தனது தொழிலில் எந்த அளவு கவனத்துடன் இருக்கவேண்டும் என்பதை தனது மருத்துவ நூலில் கீழ்கண்டவாறு குறிப்பிட்டிருக்கிறார்.
• மருந்து தற்செயலாகக்கூட புறச்சார்புடையதாக இருக்கக்கூடாது.
• சிக்கலில்லாமல் எளிமையாக உபயோகிக்கக்கூடியதாக இருக்கவேண்டும்.
• இரு எதிர்நிலையான நோய்களை குணப்படுத்துமா என்பதை சோதித்தறிந்திருக்கவேண்டும். ஏனென்றால் ஒரு நோயை குணப்படுத்தும் வேளையில் மற்றொரு புதிய நோயை உருவாக்கக்கூடாது.
• நோயின் தன்மையைப் பொருத்து மருந்தின் வீரியம் இருக்கவேண்டும். ஏனென்றால் அது வேறொரு விளைவை ஏற்படுத்தக்கூடும்.
• கொடுக்கக்கூடிய மருந்து எப்படி வேலை செய்கிறது என்பதை கவனித்துக்கொண்டே இருக்கவேண்டும்.
• சோதனைகளை மனித உடம்பில்தான் நடத்தவேண்டுமே ஒழிய குதிரை, சிங்கம் போன்ற விலங்கினத்தின்மீது நடத்தக்கூடாது. காரணம் அம்மருந்து மனிதனுக்கு பலனளிக்காமல் போவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன.
கித்தாப் அல் தீப் Andrea Alpago(d. 1520) வால் இத்தாலியில் மொழிபெயர்க்கப் பட்டது. 1593ல் ரோமில் அரபி பதிப்பு கிடைத்தது. 1491ல் நேபிள்ஸில் ஹீப்ரு பதிப்பு வெளியானது. 12ம் நூற்றாண்டில் Gerard of Cremona வால் லத்தீனில் மொழிபெயர்க்கப் பட்டது. 15ம் நூற்றாண்டில் முப்பது வருடங்களில் பதினாறு முறை பதிப்பிக்கப்பட்டது. 16ம் நூற்றாண்டில் இருபதுக்கு மேற்பட்ட பதிப்புகள் வெளியாயின. 17ம் நூற்றாண்டின் பிற்பகுதி வரை இந்நூல் பிரசுரிக்கப்பட்டது. Lonvain University யில் 18ம் நூற்றாண்டு வரை பாடபுத்தகமாக வைக்கப்பட்டிருந்தது. அனேக ஐரோப்பிய பல்கலைக் கழகங்களில் குறிப்பாக இத்தாலி, பிரான்ஸ் பல்கலைக் கழகங்களில் பல நூற்றாண்டுகள் மருத்துவ பாடமாக போதிக்கப்பட்டது.
கித்தாப் அல் ஷிஃபா الشفاء کتاب(The Book of Healing)
இப்னு சீனாவின் புகழ் பெற்ற நூல்களின் ஒன்றான கித்தாப் அல் ஷிஃபா 1014 ல் தொடங்கி 1020 வாக்கில் முடித்ததாகவும் 1027ல் வெளியிடப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. இதில் தர்க்கம், இயற்கை அறிவியல், கணிதம், இறைமெய்இயல் (metaphysics) ஆகிய நான்கு பெரும் பிரிவுகளைக் கொண்டது. கணிதத்தை quadrivium of arithmetic, geometry, astronomy and music என நான்கு பிரிவுகளாகப் பிரித்து அவற்றில் ஒவ்வொன்றையும் பல உட்பிரிவுகளாக பிரித்திருக்கிறார். வரைகணிதத்தை(Geometry) geodesy, statics, kinmatics, hydrostatics, optics எனவும்; வான்இயலை astronomical & geographical tables, calendar எனவும்; Arithemetic ஐ அல்ஜிப்ரா, இந்திய கூட்டல் கழித்தல் எனவும்; இசையை இசைக் கருவிகள் என உட்பிரிவுகளாக பிரித்திருக்கிறார்.
யூக்லிடின் eliments ஐ பின்பற்றி இப்னு சீனாவின் வரைகணிதம் (geometry) இருந்தது. முன் வந்த இஸ்லாமிய அறிஞர்களின் கோட்பாட்டை பின்பற்றியே இவரது வரைகணிதம் இருந்தாலும் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. கோடு, இணைகோடு, கோணம், முக்கோணம், areas of parallograms and triangles, geometric algebra, regular polygons, proportions relating to area of polygons, volumes of polyhedral and the sphere என அனைத்தையும் வரைகணிதத்தில் விவரித்துள்ளார்.
'கித்தாப் அல் தபியியாத்' என்ற பகுதியில் ஆறு அத்தியாயங்களில் கனிமம் மற்றும் உலோகவியல் கட்டுரையில் மலைகள் உருவான முறை, மேகங்கள் உண்டாவதில் மலைகளின் பங்கு, நீர் ஆதாரங்கள், பூகம்பம் எழுமிடங்கள், கனிமங்கள் உருவாகும் விதம் மற்றும் நிலப்பரப்பின் பன்முகத்தன்மை ஆகியவற்றை விரிவாக எழுதியுள்ளார். இதன் ஆதாரங்களாக இரு கொள்கைகளை முன் வைக்கிறார். முதலாவதாக பல்வேறு உலோகங்கள் உருவாக உறைந்த ஆவிகள் (condensed vepors) முக்கிய பங்கு வகுக்கிறது என்ற அரிஸ்டாட்டிலின் தத்துவம். இரண்டாவதாக Mercury-Sulphur ன் பங்கும் தன்மைகளைப் பற்றி கூறும்போது ஜாபிர் பின் ஹையானின் அல்கெமிக் கொள்கை.
கனிமம், தாவரம், விலங்கின உலகினை ஓர் ஒழுங்குமுறையோடு ஒருங்கிணைத்து கூறியுள்ளது பின்னர் புவிஇயல் மற்றும் கனிமங்களின் ஆய்வுக்கு உறுதுணையாக இருந்தது. மேலும் விண்கற்களின் (meteor)அமைப்பு, படிவுப்பாறை(sedimentary rock) உருவாக்கம், மலைகள் உண்டாக பூகம்பத்தின் பங்களிப்பையும் விளக்கியுள்ளதோடு கடலில் ஏற்பட்ட மாற்றத்தால் தொல்படிமங்கள்(fossils) எப்படி மலையுச்சியில் கிடைக்கின்றன என்பதையும் துல்லியமாக விளக்கியுள்ளார்.
இப்னு சீனாவின் பங்களிப்பைப் பற்றி Stephen Toulmin , மற்றும் Goodfield கூறும்போது கி.பி 1000 ல் இப்னு சீனாவின் மலைத்தொடர்கள் பற்றிய அனுமானம், 800 ஆண்டுகளுக்குப் பிறகு அதன் அடிப்படைக்கூற்றை கிருஸ்துவ உலகம் கண்டறியப்படவேண்டியிருந்தது என்கின்றனர்.
உளவியல்
அரிஸ்டாட்டிலின் உளவியல் கொள்கையைச் சார்ந்தே இவரது கொள்கையும் அமைந்துள்ளது. ஆன்மா(soul) நிறைநிலை பெற்றது(entelechy) என்கிறார் அரிஸ்டாட்டில். கப்பலின் மாலுமி போன்றது என்கிறார் இப்னு சீனா. அது உடம்பை விட்டும் தன்னிலையான இருப்பைக் (existence) கொண்டது என விளக்கம் அளிக்கிறார்.
மனமும் அதன் இருப்பும்(existence), மனதிற்கும் உடம்பிற்குமுள்ள தொடர்பு, உணர்வு(sensation), புலனுணர்வு(perception) முதலானவற்றை கித்தாப் அல் ஷிஃபாவில் விளக்கும்போது, மனம் தன் ஆதிக்கத்தை உடம்பின்மீது செலுத்துவது சாதாரண நிகழ்வாகும். எனவே மனத்தின் விருப்பப்படி உடம்பு செயல்படுகிறது. இது முதல் நிலை. இரண்டாம் நிலையில் மனவெழுச்சியிலும்(emotion) மன உறுதியிலும் (will) தன் செல்வாக்கை செலுத்துகிறது. ஆழமான பள்ளம்(chasm) அல்லது உயரமான இரு கோபுரங்களின் இடையே பாலம் போல் போடப்பட்ட குறுகிய பலகையை ஒருவன் கடக்கும்போது ஒரு பிடிமானம் தேவைப்படுவதின் காரணம் பயம் ஏற்படுவதால் என்பதை இங்கே உதாரணமாகக் காண்பித்துவிட்டு எதிர்மறை மனவெழுச்சி(negative emotion) மரணத்தையும் விளைவிக்கும் என்கிறார். அறிதுயில் (hypnosis-al wahm al amil) நிலையைப் பற்றி விளக்கமளிக்கும்போது செய்யப்படுபவரின் இசைவு இருந்தால் மாத்திரமே செய்யமுடியும் என்கிறார்.
உடல் உள நோய்களை எப்போதுமே ஒன்றாக இணைத்தே பார்க்கிறார். உளச்சோர்வு (மன அழுத்தம்-depression) ஒரு வகையான mood disorder, அது சந்தேகத்தையும் ஒரு வித பயத்தையும்(phobias) ஏற்படுத்திவிடும். உளச்சோர்விலிருந்து(melancholia) பைத்தியத்தனம்(mania) வரை கோப உணர்வு கொண்டுச்செல்லும் என்று விளக்கம் அளிக்கும் இப்னு சீனா தலையினுள் இருக்கும் ஈரத்தன்மை (humidity inside the head) mood disorder ஆவதற்கு ஒரு வகையில் உறுதுணையாக இருக்கிறது, ஒரு மனிதன் அதீத மகிழ்ச்சியில் இருக்கும்போது அதிக அளவு காற்றை சுவாசிக்கிறான். அக்காற்றில் இருக்கும் ஈரம்(moisture) மூளையை சென்றடைகிறது, அதன் அளவு மூளை ஏற்றுக்கொள்ளும் அளவைவிட அதிகப்படும்போது மூளை தன் விவேகத்தை (rationality) இழந்து mental disorder நிலைக்கு இழுத்துச்செல்கிறது என்கிறார். மேலும் நினைவாற்றல் குறைவு, காக்காய் வலிப்பு, கெட்டகனவு(nightmare) இவைகளுக்கான அறிகுறிகளும் அதற்கான சிகிட்சை முறைகளையும் எழுதியுள்ளார்.
மன நோயாளிகளைக் குணப்படுத்த இவர் பிரத்தியேக முறையைக் கையாண்டார். பாரசீக இளவரசிக்கு melancholia எனப்படும் உளச்சோர்வு நோயும், மாயமருட்சி அல்லது திரிபுணர்வு எனப்படும் delusion நோயும் ஒரு சேரத் தாக்கி தன்னை பசுவாக பாவித்து வந்தவளை முற்றிலுமாக குணப்படுத்திய முறையும் சுல்தானுடைய மகளுக்கு பக்கவாதம் ஏற்பட்டு கை அசைக்கவே முடியாத நிலையை மனோரீதியான முரட்டு வைத்தியம் செய்து குணப்படுத்தியதும் உதாரணங்களாகும்.
இறைமெய்யியல் (Metaphysics)
ஆரம்பகால இஸ்லாமிய தத்துவமும், இறைமெய்இயலும் இஸ்லாமிய இறையியலில்(Islamic theology) இரண்டரக் கலந்திருந்தன. இது அரிஸ்டாட்டிலிய சாரம்(essence) மற்றும் இருப்பு(existence) தத்துவத்தின் வித்தியாசத்தைக் காட்டிலும் தெளிவாக வேறுபடுத்தியது. இப்னு சீனாவின் இருப்பு(existence) சார்ந்த தத்துவம் அல் ஃபராபியின் கொள்கையைச் சார்ந்தே இருக்கிறது. அல் ஃபராபியைத் தொடர்ந்து இப்னு சீனாவும் உள்ளமை(being) பற்றிய சந்தேகத்திற்கு முழு ஆய்வை மேற்கொண்டு சாரத்திற்கும் (மாஹியத்-essence) இருப்பிற்கும் (உஜூது-existence) இடையிலான சிறப்பை தெளிவு படுத்துகிறார்.
இப்னு சீனாவின் நோக்கம் அறிவியல் மற்றும் மதத்திலுள்ள அனைத்து அம்சங்களையும் இறைமெய்இயலில் (metaphysics) ஒருங்கிணைக்கும் முயற்சியாக இருந்தது. அவரது கண்ணோட்டத்தில் பிரபஞ்சம் உண்டானதைப் பற்றியும் தீமையின் தொல்லை, இறைவணக்கம், இறையருள், முன்னறிவுப்புகள், அற்புதங்கள், அதிசயங்கள் ஆகியவற்றையும் விளக்க முயற்சிப்பதோடு மதச்சட்டம், மனிதனின் இறுதி விதி தொடர்பான விளைவு பற்றியும் இதனுள் அடக்கியிருக்கிறார்.
அறிவுநெறிஇயல் (Epistemology)
இப்னு சீனாவின் இரண்டாவது செல்வாக்கு மிகுந்த கருத்துருவம் அறிவைப் பற்றிய கோட்பாடு. மனிதனுடைய அறிவு பிறப்பிலேயே ஒரு குறிப்பிட்ட அமைப்பில் அட்டவணைபோல் அமைந்திருக்கிறது. தூய்மையான பேராற்றல் அல்லது திறன் கல்வியின் வழியாகவே உண்மையாக்கப்படுவது தெரியவருகிறது. அனுபவ பரிச்சயத்தை அடிப்படையாகக் கொண்ட பழக்கத்திலிருந்தே உலகிய அறிவு பெறப்படுகிறது. அது வளர்ச்சியுற syllogistic (நேரியல் வாத) முறையே காரணமாயிருந்தது. அவ்வறிவு மூல அறிவாற்றல் (material intellect-அக்ல் அல் ஹயுலானி)லிருந்து வளர்த்துக்கொண்ட நிலையையும், இயக்க அறிவாற்றலில் (active intellect-அக்ல் அல் ஃபால்) இருந்து பெறப்பெற்ற பேராற்றலையும் தன்னுள் தக்கவைத்துக்கொள்கிறது. இவ்விரண்டின் இணைப்பே மனிதன் பெற்ற சரியான புத்திசாலித்தனமான அறிவாகும்.
இப்னு சீனாவின் அறிவுநெறிஇயலை(Epistemology) இறையறிவுடன் தொடர்பு படுத்துவது சிக்கலான காரியமாகும். தெய்வீகம் தூய்மையானது, தூலமற்றது எனவே குறிப்பிட்ட விஷயத்தை அதன் நேரடி அறிவுநெறியில் உட்படுத்த முடியாது. இவ்வுலகில் அவிழ்க்கப்படாத விஷயங்களும் உலகலாவிய முறையில் பிரபஞ்ச குணங்களும் என்ன எங்கே என்பதும் இறைவனுக்கே தெரியும் என்ற முடிவுக்கு இப்னு சீனா வந்தார்.
 
ஆன்மா (The Soul)
 
மனித ஆன்மா பருப்பொருள் சாரா நுண்ணியம்(incorporeal) வாய்ந்தது, அது உருவற்ற ஒன்று ஏனென்றால் பிரிக்கமுடியாத அறிவார்ந்த சிந்தனைகளை தன்னுள் கொண்டது. முரண்பாடில்லாத ஒத்திசைவான சிந்தனைகள் வரையறுக்கப்பட்ட நிலை கொண்டிருப்பதால் வெவ்வேறு சிந்தனைகளின் ஒரு பகுதியாக இருக்கமுடியாது எனவே அது ஒரேயொரு ஒத்திசைவான சிந்தனையே என உளப்பூர்வமாகக் கருதினார்.
 
இப்னு சீனாவைப் பொருத்தவரை ஆன்மா நுண்ணியமும்(incorporeal) இறவாமையும் உள்ளது, உடல் சிதைவோ அழிவோ அதை பாதிக்காது. உடல் மற்றும் ஆன்மா ஒன்றை ஒன்று சார்ந்திருப்பது அவற்றின் இருப்பிற்கு(existence) அவசியமாகிறதால். தர்க்கரீதியாக ஆன்மா உடலை சார்ந்திருந்தால் உடலின் அழிவு அல்லது சிதைவினால் ஆன்மாவின் இருப்பை தீர்மானிக்கமுடியும். எனவே ஆன்மாவுக்கு உடல் காரணி அல்ல அவற்றில் ஆன்மா நுண்பொருளும் உடல் பருப்பொருளுமாகும். ஆனால் அவை இரண்டும் சுயாதீனமானது. அதன் சுயாதீன விளைவாக பருப்பொருளான உடலில் மாற்றங்களும் தேய்வுறுதலும் நிகழ்கின்றனவே தவிர ஆன்மாவின் மாற்றத்தால் அல்ல. எனவே உடலின் மாற்றத்தை ஆன்மா பின் தொடராது.
 
வான்இயல் (Astronomy)
 
இப்னு சீனா இஸ்ஃபஹானிலும் ஹமதானிலும் இருக்கும்போது வான்வெளி ஆய்வுகள் நடத்தியுள்ளார். அவருடைய அவதானிப்புகளில் பல உண்மைகள் கிடைத்தன. உதாரணமாக சுக்கிரன்(venus) சூரியனின் மேற்பரப்பிலுள்ள ஒரு புள்ளி என்றிருந்த நிலைப்பாட்டை மாற்றி அது ஒரு கோள், சூரியனைவிட பூமிக்கு அருகில் இருக்கிறது என்று வெளிப்படுத்தினார். நட்சத்திரங்களை ஆய்வு செய்ய சுழலும்(pivot) வகையில் இரண்டு கால்களையுடைய கருவி ஒன்றை உருவாக்கினார். கீழ்பகுதி கால் படுக்கை வசத்தில் சுழன்று azimuth ஐ காண்பிக்கும் மேல் பகுதி காலில் அமைக்கப்பட்ட அளவுகோலின் உதவியால் வின்மீண்களின் உயரத்தை அளக்கமுடியும். பாக்தாதுக்கும் குர்கானுக்கும் (Gurgan) உள்ள தீர்க்கரேகை வித்தியாசத்தை அளவிட்டு சொன்னதும் குர்கானில் சந்திரன் meridian ஐ கடப்பதை அளந்து சொன்னதும் அவருடைய வான்இயலில் மற்றொரு அம்சமாகும். தவிர ஒளியின் வேகம் (velocity) வரையறைக்குட்பட்டது என்றும் விளக்கினார்.
 
இசையும், இயந்திரக்கருவிகளும்
 
கணிதத்தில் ஒரு பிரிவாகவே இசையைப் பற்றியும் விவரித்திருக்கிறார். அதிகமாக இல்லாவிட்டாலும் தொனி இடைவெளி பற்றியும் சந்த அமைப்பு (rhythmic pattern) பற்றியும் விரிவாக விளக்கியுள்ளதோடு சில இசைக் கருவிகளையும் உருவாக்கியுள்ளார்.
 
உருளைகள்(rollers), நெம்புகோள்கள்(levers), சகடைகள்(pulleys), இருசுச்சக்கரங்கள் (windlasses) ஆகியவற்றை உருவாக்கியதோடல்லாமல் அவற்றைக்கொண்டு எளிதான எந்திரங்களையும் உருவாக்கியுள்ளார்.
 
இப்னு சீனாவும் பைரூனியும்
 
இருவரும் சமகாலத்தில் வாழ்ந்தவர்கள் என்றாலும் இருவருக்கும் கருத்து வேறுபாடும் பனிப்போரும் நிலவியது. இப்னு சீனா அரிஸ்டாட்டிலிய கொள்கையை ஆதரித்தவர். பைரூனி அரிஸ்டாட்டிலின் தத்துவத்தையும் peripatic school யும் விமரிசித்தவர். பைரூனியின் விமரிசனத்திற்கு இப்னு சீனாவும் அவரது மாணவர் அஹமது இப்னு அலி அல் மாசூமியும் பதில் அளித்தனர். பின் பைரூனி பதினெட்டுக் கேள்விகளை இப்னு சீனாவிடம் கேட்டிருந்தார், அவற்றில் பத்து அரிஸ்டாட்டிலின் On the Heavens பற்றிய விமரிசனமாகும்.
 
இப்னு சீனா சுமார் 450 நூல்கள் எழுதியுள்ளார். அவற்றில் 240 மட்டுமே அழியாமல் இருக்கின்றன. அவற்றில் 150 தத்துவத்தைப் பற்றியும் 40 மருத்துவத்தைப் பற்றியும். மற்றவைப் பற்றி குறிப்பு இல்லை. Andrea Alpago(d.1520) என்பவரால் கானூன் ஃபில் தீப் இத்தாலியில் மொழிபெயர்க்கப்பட்டது.
 
***
சில முக்கிய தகவல்:
 
• 980: Avicenna is born in Afschana in the today's Usbekistan
• 981-989: Ibn Sinas family pulls after Bukhara in the today's Usbekistan
• 990: With 10 years it knows the Koran by heart
• 990-996: Ibn Sina is informed by different teachers and begins to study medicine
• 997: It becomes the body physician of Nuh Ibn Mansur
• 1002: Ibn Sina loses his father Abdullah
• 1004: The samanidische dynasty dies out Ibn Sina is unemployed
• 1005-1024: Avicenna serves different princes and begins its most famous works "the canon "and "the healing "
• 1025-1036: Ibn Sina works as a body physician of the ruler of Isfahan
• 1037: The large physician dies in Hamadan at the age of 57 years at the Ruhr
• 12. Jhdt: Gerhard of Cremona translates the canon of the medicine into latin - thus he applies to in 17. Jhdt. as the most important text book of the medicine
• 1470: In the entire evening country there is 15 - 30 latin expenditures of the canon
• 1490: A part of the aluminium-Shifa appears in Pavia
• 1493: In Neapel a Hebrew version of the canon appears
• 1493, 1495, 1546: In Venice three latin versions of the Metaphysica are printed
• 1593: As one of the first Arab works the canon of the medicine in Rome is printed
• 1650: The canon is used for the last time in the universities by luffing and Montpellier
 
Sources:
 
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81_%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE
http://idrees.lk/?p=883
http://kalvianjal.blogspot.com/2013/01/blog-post_5254.html
http://en.wikipedia.org/wiki/Avicenna
http://www.iep.utm.edu/avicenna/
http://www-groups.dcs.st-and.ac.uk/history/Biographies/Avicenna.html
http://ddc.aub.edu.lb/projects/saab/avicenna/contents-eng.html (Canon of Medicine complete) 1953 edition
http://books.google.ae/books?id=B8k3fsvGRyEC&printsec=frontcover&dq=biography+of+ibn+sina&hl=en&sa=X&ei=VbkfUe-zIoaK4ASj54DYCw&ved=0CDQQ6AEwAQ#v=onepage&q=biography%20of%20ibn%20sina&f=false
http://www.iranicaonline.org/articles/avicenna-index
http://en.economypoint.org/a/avicenna.html
http://sharif.edu/~hatef/files/abu%20ali%20sina%2022.pdf
https://www.princeton.edu/~achaney/tmve/wiki100k/docs/The_Book_of_Healing.html
http://en.wikipedia.org/wiki/The_Book_of_Healing
http://www.ontology.co/avicenna.htm
http://www.muslimphilosophy.com/sina/art/ibn%20Sina-REP.htm#is6
 
நன்றி : ஹமீது ஜாஃபர் ( http://hameedjaffer.blogspot.com/ ) | E-Mail : manjaijaffer@gmail.com
***
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/இப்னு_சீனா" இலிருந்து மீள்விக்கப்பட்டது