விக்கிப்பீடியா:விக்கித்தரவு

(விக்கிப்பீடியா:Wikidata இலிருந்து வழிமாற்றப்பட்டது)
விக்கித்தரவு சின்னம்

விக்கித்தரவு (Wikidata) விக்கிமீடியா நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டுள்ள ஓர் திட்டமாகும். இது கட்டற்ற முறையில், கூடிப் பங்களிக்கும் தரவுத்தளம் ஒன்றை உருவாக்க வடிவமைக்கப்பட்டது. மார்ச்சு 6, 2013 முதல் இத்திட்டத்தின் முதல் கட்டமாக விக்கியிடை இணைப்புக்களுக்கு (மொழி இணைப்புகளை மையப்படுத்த) தமிழ் விக்கிப்பீடியா இந்த தரவுத்தளத்தை பயன்படுத்தும்.

அடுத்த கட்டத்தில் தகவற்பெட்டிகளில் வழமையாகக் காணப்படும் தரவுகளை ஓர் மையமான இடத்தில் சேகரித்து வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது விக்கிமீடியா பொதுவகம் போன்றதே; பல்லூடகங்களுக்கு மாற்றாக (ஒரு நாட்டில் வசிப்போர் எண்ணிக்கை அல்லது ஆற்றின் நீளம் போன்ற) தரவுகளுக்கானது. மூன்றாம் கட்டத்தில் பட்டியல்கள் மையப்படுத்தப்படும்.

மொழியிடை இணைப்புக்கள் (முதற் கட்டம்)

தொகு
 
விக்கித்தரவு, கட்டம் 1:அனைத்து மொழிகளுக்குமான இணைப்புக்கள் ஒரு மையமான புள்ளியிலிருந்து
 
பழைய முறைமை: அனைத்து மொழிகளுக்குமிடையேயான இணைப்புக்கள்

விக்கித்தரவில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு விக்கிப்பீடியா பக்கமும் அங்கு சேமிக்கப்பட்டுள்ள மொழி இணைப்புக்களைப் பயன்படுத்தி இடது பக்கப்பட்டையில் நெடுவரிசையாக காட்டுகின்றது. பழைய முறையில் பக்கத்தின் அடியில் விக்கியுரையில் தரப்பட்டுள்ள இணைப்புக்களையும் கவனித்தில் கொள்கிறது; இவை விக்கித்தரவு இடமிருந்து பெறப்படும் தரவுகளை விட முன்னுரிமை பெறுகின்றன.

ஒரு பக்கம் விக்கித்தரவுடன் இணைக்கப்பட்டிருக்கும்போது, தமிழ் விக்கிப்பீடியாவில் பக்கத்தினடியில் இடப்படும் இணைப்பும் விக்கித்தரவிலிருந்து பெறப்படும் இணைப்பும் வேறுபட்டிருந்தால் மொழி விக்கிப்பீடியாவில் உள்ள இணைப்பே காட்டப்படும்;இந்தப் பக்கத்தில் இடாத இணைப்புக்களை விக்கித்தரவிலிருந்து காட்டும்.


ஒரு பக்கம் விக்கித்தரவுகளுடன் இணைக்கப்படாது இருந்தால், முன்னர் போலவே விக்கியுரையில் உள்ள மொழி இணைப்புக்களை காட்டும். சில நேரங்களில் அந்தக் கட்டுரைக்கு விக்கித்தரவு இணைப்பு கொடுக்கப்பட்டிருந்தும், ஆங்கில விக்கிப்பீடியாவிற்கு இணைப்பு கொடுக்கப்படாததால், செயல்படாதிருக்கலாம். இவை காலப்போக்கில் சீர் செய்யப்படும்.

விக்கித்தரவில் மொழி இணைப்புக்களின் மேலாண்மை

தொகு

புதிய கட்டுரை

தொகு
  • வினா 1.நான் ஒரு புதிய கட்டுரையை உருவாக்கியுள்ளேன். இந்தக் கட்டுரை மற்ற மொழிகளில் எழுதப்பட்டுள்ளதை (காட்டாக, ஆங்கிலம்) அறிவேன். எவ்வாறு விக்கியிடை இணைப்புக்களை ஏற்படுத்துவது ?
  1. விக்கித்தரவு செல்லுங்கள்.
    முதன்மை பட்டையில் (வெக்டர் இடைமுகமாயிருந்தால், இடதுபுறத்தில்) "தலைப்பு வாரியாக உருப்படி (Item by title)" தேர்ந்தெடுப்பீர்.
    அதனை, தலைப்பு வாரியாக உருப்படியை சொடுக்கவும்.
    எதிர்வரும் பக்கத்தில் மொழிக் குறியீட்டையும் (எடுத்துக்காட்டாக,ஆங்கில மொழிக்கு en) அந்த விக்கிப்பீடியாவில் கட்டுரைக்கான பெயரையும் இடவும். பின்னர் தேடுக என்பதை அழுத்தவும்.
    இந்தப் பெயரில் ஏற்கெனவே கட்டுரை இருந்தால், உருப்படியின் கீழே சென்று "சேர்" என்பதை அழுத்தவும். திறக்கப்படும் பெட்டிகளில் மொழிக் குறியீட்டையும் (தமிழுக்கு ta) நீங்கள் உருவாக்கிய கட்டுரைப் பெயரையும் இடுக. பின்னர் "சேமியை சொடுக்கவும்". உங்கள் வேலை முடிந்தது!
    இந்த கட்டுரை இல்லையென்றால் "உருப்படியை உருவாக்குக (create the item)" என்று கீழே காணும் இணைப்பைச் சொடுக்கி கட்டுரைப் பெயரையும் சிறு விவரணத்தையும் வரும் படிவத்தில் நிரப்புக. பின்னர் இந்த உருப்படியை மொழியிடை இணைப்புகளில் மேலே விவரித்தவாறு சேர்க்கவும்.

எந்த ஒரு மொழிக் கட்டுரைப்பக்கத்திலும் மொழியிடை இணைப்புக்களின் கீழே இருக்கும் Edit Links இணைப்பைச் சொடுக்குவதன் மூலம் விக்கித்தரவில் தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிக்கட்டுரைகளை இணைக்கமுடியும்.

தலைப்பு மாற்றம்

தொகு
  • வினா 2: கட்டுரையின் தலைப்பை மாற்றிய பின்னர் மொழியிடை இணைப்புக்கள் காணாமல் போயிற்றே.. என்ன செய்வது ?
  1. கட்டுரையின் முந்தையத் தலைப்பைக் கொண்டு மேற்கூறியவாறு விக்கித்தரவுகளில் தேடுக.
  2. காட்டப்படும் தரவுகளில் தமிழ் மொழிக்கான தரவைத் தேடி தொகு இணைப்பை சொடுக்குக. திறக்கும் பெட்டியில் புதிய தலைப்பை இட்டு சேமிக்கவும்.

தவறான மொழியிடை இணைப்பு

தொகு
  • வினா 3: விக்கிப்பீடிய கட்டுரை ஒன்று மற்ற மொழியில் வேறு விடயத்திற்கு இணைக்கப்பட்டுள்ளது. இதனை எவ்வாறு சீர் செய்வது ?
  1. குறிப்பிட்டக் கட்டுரையில் மொழியிடை இணைப்புகள் இருக்கும் பக்கப்பட்டையில் இவற்றின் கீழே உள்ள Edit link என்பதை சொடுக்குக.
  2. விக்கிதரவில் தவறான இணைப்புகளை தொகுக்க, தொகு என்பதையும், நீக்க நீக்கு என்னும் இணைப்பையும் அழுத்தி திருத்தலாம். பின்னர் சேமிக்கலாம்.
  3. இது மிகவும் சிக்கலானதென்றால் இந்தப் பிரச்சினையை Wikidata: Interwiki conflicts என்ற பக்கத்தில் அறிவிக்கலாம்.

புதிதாக உருவாக்கிய கட்டுரைகளை எவ்வாறு விக்கித்தரவில் இணைப்பது

தொகு
  • புதிதாக உருவாக்கிய கட்டுரைப் பக்கத்தை உங்கள் உலாவியில் திறந்துகொள்ளுங்கள்.
  • கட்டுரையில் இடப்பக்கம் பல சுட்டிகள் இருக்கும். அவற்றில் கடைசியாக உள்ள Languages என்பதன் கீழ் உள்ள Add links என்பதைச் செடுக்குங்கள்.
  • அடுத்துவரும் பெட்டியில் Language என்பதில் குறிப்பிட்ட மொழியின் குறியீட்டைக் கொடுக்கவும். எ.கா: ஆங்கிலமாயின் en / EN என உள்ளீடு செய்ய வேண்டும். அடுத்து, Page என்பதில் ஆங்கிலக் கட்டுரையின் பெயரை உள்ளீடு செய்யுங்கள். பின்பு "Link with page" என்பதை அழுத்தவும்.
  • அதன் பின், கட்டுரையின் பெயர் சரியாக உள்ளதா எனப்பார்த்து Confirm என்பதையும், பின் Close dialog and reload page என்பதையும் அழுத்தவும்.

இவற்றையும் காண்க

தொகு

வெளி இணைப்புக்கள்

தொகு