திரைக்கதை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 48 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
No edit summary
வரிசை 4:
 
[[பகுப்பு:திரைப்படம்]]
 
ஒரு திரைப்படத்தின் வெற்றிக்கு முழுமுதற் காரணமாக எப்போதும் "திரைக்கதை" என்பதாகவே இருக்கும். "ஸிட் ஃபீல்ட்" என்பவர் திரைக்கதையின் பிதாமகன் என்று அழைக்கப்படுகிறார். இதுவரை உலகில் வெளியாகியுள்ள திரைப்படங்கள், இனி வெளியாகவுள்ள திரைப்படங்கள் ஆகியவை பெரும்பாலும் இவர் வகுத்துக் கொடுத்த திரைக்கதை அமைப்பை அடிப்படையாகக் கொண்டே திரைக்கதை எழுதப்பட்டு, உருவாக்கப்படுகிறது. அந்த திரைக்கதை அமைப்பு யாதெனில் :
 
ஆரம்பம் - நடு - முடிவு.
 
வெற்றிகரமாக ஓடிய எந்த திரைப்படத்தை எடுத்து அலசிப் பார்த்தாலும் ஆதாரமாக இந்த அமைப்பு (Structure) இருந்தே தீரும். இதை வேறு விதமாக விளக்க முடியும். அதாவது ஆரம்பம் - திருப்பம் - முடிவு...!!!
 
ஒரு கதையை திரைக்கதையாக எழுத முயலும்போது இந்த அமைப்பின்படி எழுதினால் அந்த திரைக்கதை சுவாரஸ்யமாக, விறுவிறுப்பாக அமைய வாய்ப்புக்கள் அதிகம். இது "மூன்று அங்க அமைப்பு" என்று அழைக்கப்படுகிறது. ஆங்கிலத்தில் சொல்வதானால் Three Act Structure. கொஞ்சம் விரிவாக பார்ப்போம்.
 
ஆரம்பம் : இந்த அங்கத்தில் கதையின் முக்கிய கதாபாத்திரங்களையும், இந்த திரைப்படம் எதைப் பற்றியது என்பதையும் தெளிவாக பார்வையாளர்களுக்கு உணர்த்தி விட வேண்டும்.
 
திருப்பம் : இந்த அங்கத்தில் கதையில் ஒரு திருப்பம் நிகழ்ந்து, அதன் மூலம் கதையின் முடிவை நோக்கிச் செல்ல ஆரம்பிக்க வேண்டும்.
 
முடிவு : இந்த அங்கத்தில் கதையின் இறுதில் என்ன நடந்தது, எப்படி நடந்தது என்று விவரித்து திரைக்கதையை முடிக்க வேண்டும்.
 
இந்த மூன்று அங்க அமைப்பின் இடையில் இரண்டு "சம்பவங்கள்" இருக்க வேண்டும். ஆங்கிலத்தில் Plot Points என்பார்கள். முதல் அங்கத்திலிருந்து, இரண்டாம் அங்கத்துக்குள் கதையை நுழைக்க 'முதல் ப்ளாட் பாய்ன்ட்' உதவுகிறது. அதே போல இரண்டாம் அங்கத்திலிருந்து, மூன்றாம் அங்கத்துக்குள் கதையை நுழைக்க 'இரண்டாம் ப்ளாட் பாய்ன்ட்' உதவுகிறது.
 
இந்த மூன்று அங்க திரைக்கதை அமைப்பைப் பற்றி மேலும் முழுமையாகத் தெரிந்து கொண்டபின்பே யாரும் திரைக்கதை எழுதத் தொடங்க வேண்டும். "திரைக்கதை எழுதுவது எப்படி" என்று எழுத்தாளர் சுஜாதா அவர்கள் எழுதியுள்ள புத்தகம் மிகுந்த பிரசித்தி பெற்றது. ஆங்கிலத்தில் திரைக்கதை எழுதுவது பற்றி பல புத்தகங்கள் இருக்கின்றன. அவற்றை வாசித்தும் அறிந்து கொள்ளலாம்.மேலும் பல வலைத் தளங்களிலும் திரைக்கதை எழுதுவது பற்றி விஷயம் அறிந்து வைத்துள்ளவர்கள் எழுதியுள்ளனர். உதாரணமாக www.karundhel.blogspot.com/
"https://ta.wikipedia.org/wiki/திரைக்கதை" இலிருந்து மீள்விக்கப்பட்டது