பெட்ரோ பரேட்டோ டி ரெசென்டே: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 8:
அடுத்த ஆண்டில் அவர் வட ஆப்பிரிக்காவுக்குச் சென்றார் அங்கே 1628 வரை பணியாற்றினார். 1629 ஆம் ஆண்டில், இந்தியாவுக்கான புதிய வைசுராய் [[டொம் மிகுவேல் டி நோரன்கா]]வின் செயலராக அவரது கப்பல் அணியில் இணைந்து இந்தியாவுக்குப் பயணமானார். அந்த ஆண்டு அக்டோபர் 21 ஆம் தேதி அக்கப்பல் அணி கோவாவை அடைந்தது. கோவாவில், வைசுராயின் தனிச் செயலராக மட்டுமன்றி, மேலும் பல பதவிகளையும் ரெசென்டே வகித்தார். இதனால், போர்த்துக்கேயக் கிழக்கிந்திய அரசாங்கத்தின் ஆளுகைக்கு உட்பட்ட பல கோட்டைகளில் இருந்து கிடைக்கும் ஆவணங்களைப் பார்க்கும் வாய்ப்பு ரெசென்டேக்குக் கிட்டியது. தனிப்பட்ட ஆர்வம் காரணமாக ஒரு நூலை எழுதும் நோக்கத்துடன் அவற்றிலிருந்து தகவல்களையும் இவர் சேகரித்து வந்தார். இந்த நூலுடன் இணைக்கும் நோக்குடன் போர்த்துக்கேயரின் கோட்டைகள், குடியேற்றங்கள் குறித்த படங்களையும் அவர் வரைந்து வைத்திருந்தார்.
 
இந்த வேளையில், போர்த்துக்கேய அரசர் மூன்றாம் பிலிப்பு, கிழக்கிந்தியாவைச் சேர்ந்த கோட்டைகள், குடியேற்றங்கள் குறித்த தகவல்களை அனுப்புமாறு வைசுராய்க்குக் கட்டளை இட்டிருந்தார். வைசுராய் இந்தப் பணியை அந்தோனியோ பொக்காரோவிடம் ஒப்படைத்தார். பொக்காரோ உரைப்பகுதியை மட்டும் எழுதுவதற்குச் சம்மதித்து ரெசேன்டேயின் படங்களை அத்துடன் இணைத்து அனுப்பலாம் என்று ஆலோசனை கூறினார். ரெசென்டே, பொக்காரோவிடம் இருந்து உரைப் பகுதியைப் பெற்றுக்கொண்டு அதற்குப் பதிலாகத் தனது படங்களைக் கொடுக்கச் சம்மதித்தார். ரெசென்டே வரைந்த 52 படங்கள் போர்த்துகலுக்கு அனுப்பப்பட்ட அறிக்கையில் இடம்பெற்றிருந்தன.
 
==ரெசென்டேயின் நூல்கள்==
அந்தோனியோ பொக்காரோவினால் தொகுத்து அனுப்பப்பட்ட கிழக்கிந்தியாவைச் சேர்ந்த கோட்டைகள், குடியேற்றங்கள் குறித்த தகவல்களைக் கொண்ட ஆவணத்தின் மூலப்படி அதன் பிற படிகள் என்பவற்றுக்குப் புறம்பாக, "ரெசென்டேயின் கிழக்கிந்திய அரசு தொடர்பான நூல்" எனக் குறிப்பிடப்படும் ஏறத்தாழ அதே போன்ற கையெழுத்துப்படிகள் பாரிசில் உள்ள தேசிய நூலகத்திலும், இலண்டனில் உள்ள பிரித்தானிய நூலகத்திலும் காணப்படுகின்றன. ரெசென்டேயின் இந்த நூலில் பெருமளவுக்கு பொக்காரோவின் உரைப்பகுதியே பயன்படுத்தப்பட்டு உள்ளது. ஆனாலும், படங்கள் கூடுதலாகச் சேர்க்கப்பட்டுள்ளன. 1646 ஆம் ஆண்டைச் சேர்ந்த இலண்டனில் உள்ள படியில் 76 படங்கள் உள்ளன. இவற்றுள் 66 படங்கள் ரெசென்டேயுடையவை. ஏனைய பத்தும் பிறரால் வரையப்பட்டவை. 1636 ஆம் ஆண்டைச் சேர்ந்த பாரிசில் உள்ள படியில் 70 படங்கள் உள்ளன. இவை அனைத்தும் மூலப் படங்களில் இருந்து பெயர் தெரியாத ஒருவரால் படியெடுக்கப்பட்டவை.
 
==உசாத்துணைகள்==
"https://ta.wikipedia.org/wiki/பெட்ரோ_பரேட்டோ_டி_ரெசென்டே" இலிருந்து மீள்விக்கப்பட்டது