ஆரியச் சக்கரவர்த்திகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Bot: Migrating 4 interwiki links, now provided by Wikidata on d:q3111204 (translate me)
சி clean up, replaced: {{^}} → {{subst:மேற்கோள்}} using AWB
வரிசை 13:
[[File:Sri Lanka geopolitics, 1520s.png|180px|வலது|thumb|1520களில் யாழ்பான அரசு (வெள்ளை நிறம்)]]
 
'''ஆரியச் சக்கரவர்த்திகள்''' என்பது, இலங்கைத் தீவின் வட பாகத்திலிருந்த [[யாழ்ப்பாண இராச்சியம்|யாழ்ப்பாண இராச்சியத்தை]] 13 ஆம் நூற்றாண்டு தொடக்கம் 17ஆம் நூற்றாண்டு முற்பகுதி வரை ஆண்ட அரச வம்சத்து மன்னர்களைக் குறிக்கும். இவ்வம்சத்தின் தோற்றம் பற்றியோ இவர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்பது பற்றியோ எல்லோரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தகவல்கள் ஏதும் இல்லை. பெரும்பாலும் இவர்கள் [[முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன்]] என்ற பாண்டிய மன்னனின் அமைச்சர் [[ஆரியச் சக்கரவர்த்தி (பாண்டிய அமைச்சன்)|ஆரியச் சக்கரவர்த்தி]] வழி வந்தவர்களே என்று கூறப்பட்டாலும்<ref>Pathmanathan, ''The Kingdom of Jaffna'',p.11</ref> மாற்றுக் கருத்துகளும் உள்ளன. இவ்வரசைத் தொடங்கிய [[கூழங்கைச் சக்கரவர்த்தி]] தென்னன் நிகரானவன் என்று போற்றப்படுவதால் இது [[பாண்டியர்]] ஆணை கீழ் நட்ந்த இராச்சியம் என்பது பெரும்பாலானோர் கருத்து.<ref>“தென்னன் நிகரான செகராசன்</br />தென்னிலங்கை மன்னவனாகுஞ் சிங்கையாரியமால்”</ref><ref name="தமிழ் வழி">{{cite web | url=http://www.noolaham.net/project/04/364/364.htm | title=நாம் தமிழர் | publisher=கொழும்புத் தமிழ்ச் சங்கம் | accessdate=ஆகஸ்ட் 15, 2012 | author=பொ. சங்கரப்பிள்ளை (B.A. (Lond). B. Com. (Hons). (Lond.), M. Sc. (Econ (Lond.)}}</ref> யாழ்ப்பாணத்தின் வரலாறு பற்றிக் கூறும் [[வையாபாடல்]], [[யாழ்ப்பாண வைபவமாலை]] போன்ற நூல்கள், யாழ்ப்பாண அரசு அரசனில்லாது இருந்தபொழுது, தமிழ்நாட்டிலிருந்து அழைத்துவரப்பட்ட இளவரசனாலேயே இந்த வம்சம் ஆரம்பித்துவைக்கப் பட்டதாகக் கூறுகின்றன.
 
எனினும் இம் முதல் ஆரியச் சக்கரவர்த்தியின் காலம் பற்றியோ அல்லது அவ்வரசனுடைய அடையாளம் பற்றியோ பொதுக்கருத்துக் கிடையாது. வடமேற்கு இந்தியாவின், [[குஜராத்]], கிழக்கிந்தியாவிலிருந்த [[கலிங்க நாடு|கலிங்க தேசம்]], தமிழ் நாட்டிலுள்ள [[ராமேஸ்வரம்]], [[சோழநாடு]] போன்ற பல இடங்களையும், அவர்களது பூர்வீக இடங்களாகக் காட்டப் பல ஆய்வாளர்கள் முயன்றுள்ளார்கள்.
 
மேலே குறிப்பிடப்பட்டுள்ள நூல்கள் முதலாவது ஆரியச் சக்கரவர்த்தியை கூழங்கைச் சக்கரவர்த்தி, விஜய கூழங்கைச் சக்கரவர்த்தி, கோளறு கரத்துக் குரிசில் எனப் பலவாறாக குறிப்பிடுகின்றன. அவ்வரசனின் கையிலிருந்த ஊனம் (கூழங்கை) காரணமாகவே இப்பெயர்கள் வழங்கியதாகக், காரணமும் கூறப்படுகிறது.
 
இது தவிர, 13ஆம் நூற்றாண்டில், தமிழ்ப் படைகளின் உதவியோடு வட பகுதி உட்பட்ட இலங்கையின் ஒரு பகுதியைக் கைப்பற்றிய கலிங்க தேசத்தவனான, [[கலிங்க மாகன்]] என்பவனே முதல் ஆரியச்சக்கரவர்த்தி எனவும் சிலர் நிறுவ முயன்றுள்ளார்கள். காலிங்கச் சக்கரவர்த்தி என்பதே கூழங்கைச் சக்கரவர்த்தியெனத் திரிபடைந்திருக்கக் கூடும் என்பது அவர்களது கருத்து.
 
இவ்வம்சத்தின் தோற்ற காலம் பற்றியும், கருத்து-எதிர்க்கருத்துகள் (வாதப் பிரதிவாதங்கள்) உண்டு. [[யாழ்ப்பாண வைபவமாலை]], [[வையாபாடல்]] போன்றவை முதலரசன் காலத்தை முறையே --க்கும், --க்கும் முன்தள்ளியுள்ளன. எனினும் தற்கால ஆய்வாளர்களான பத்மநாதன் (ஆங்கிலத்தில் யாழ்பான அரசு என்ற நூலை எழுதியவர்) போன்றோர், முதல் ஆரியச்சக்கரவர்த்தியின் காலம் 13ஆம் நூற்றாண்டு என்றே நம்புகிறார்கள். இவ்வம்சத்தைச் சேர்ந்தவர்களாகப் போர்த்துக்கீசருக்கு முன் 13 பெயர்களும், [[போர்த்துக்கீசர்]] காலத்தில் 6 பெயர்களுமாக மொத்தம் 19 [[யாழ்ப்பாண அரசர்களின் பட்டியல்|அரசர்கள்]] குறிக்கப்படுகின்றனர். இவர்கள் [[பரராசசேகரன்]], [[செகராசசேகரன்]] என்ற [[சிம்மாசனம்|சிம்மாசனப்]] பெயர்களை மாறிமாறி வைத்துக்கொண்டு அரசாண்டார்கள்.
 
==மேற்கோள்களும் குறிப்புகளும் ==
{{^}}
<references/>
 
==இவற்றையும் பார்க்கவும்==
"https://ta.wikipedia.org/wiki/ஆரியச்_சக்கரவர்த்திகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது