முதலாம் உலகப் போர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி clean up
வரிசை 10:
| அணி1= [[முதலாம் உலகப்போர்க் கூட்டணிகள்|'''நேச நாடுகள்''']]:
[[ரஷ்யப் பேரரசு]]
[[பிரான்ஸ் மூன்றாம் குடியரசு|பிரான்ஸ்]]
[[பிரித்தானியப் பேரரசு]]
[[இத்தாலி இராச்சியம் (1861–1946)|இத்தாலி]]
[[ஐக்கிய அமெரிக்கா]]

[[முதலாம் உலகப்போர்க் கூட்டணிகள்|''மற்றும் பல.'']]
| அணி2= [[மைய நாடுகள்|'''[[மைய நாடுகள்]]''']]:
[[ஆஸ்திரியா-ஹங்கேரி]]
[[ஜேர்மன் பேரரசு]]
[[ஓட்டோமான் பேரரசு]]
[[பல்கேரியா]]
| தலைவர்1= [[ரஷ்யாவின் நிக்கோலாஸ் II|நிக்கோலாஸ் II]]
[[அலெக்சேய் புருசிலோவ்]]
[[ஜார்ஜஸ் கிளெமென்சியு]]
[[ஜோசப் ஜோப்ரே]]
[[பேர்டினண்ட் ஃபோக்]]
[[ராபர்ட் நிவேலே]]
[[Philippe Petain]]
[[ஐக்கிய இராச்சியத்தின் ஐந்தாம் ஜார்ஜ்|மன்னர் ஜார்ஜ் V]]
[[ஹெர்பேர்ட் ஹென்றி அஸ்குயித்|ஹெர்பேர்ட் எச். அஸ்குயித்]]
[[டேவிட் லாயிட் ஜார்ஜ்|டே. லாயிட் ஜார்ஜ்]]
[[டக்ளஸ் ஹேக்]]
[[ஜான் ஜெலிக்கோ, முதலாம் ஏர்ள் ஜெலிக்கோ|ஜான் ஜெலிக்கோ]]
[[இத்தாலியின் மூன்றாம் விக்டர் இம்மானுவேல்|விக்டர் இம்மானுவேல் III]]
[[லுய்கி கடோர்னா]]
[[ஆர்மண்டோ டயஸ்]]
[[வூட்ரோ வில்சன்]]
[[ஜான் பேர்ஷிங்]]

| தலைவர்2= [[ஆஸ்திரியாவின் முதலாம் பிராண்ஸ் ஜோசப்|பிராண்ஸ் ஜோசப் I]]
[[Conrad von Hötzendorf]]
[[ஜேர்மன் பேரரசர் இரண்டாம் வில்ஹெல்ம்|வில்ஹெல்ம் II]]
[[எரிக் வொன் பால்கென்ஹெயின்]]
[[பால் வொன் ஹின்டென்பர்க்]]
[[ரெயின்ஹார்ட் ஸ்கீர்]]
[[எரிக் லுடெண்டார்ஃப்]]
[[மெஹ்மெட் V]]
[[இஸ்மாயில் என்வர்]]
[[முஸ்தாபா கெமால் அத்தாதுர்க்|முஸ்தாபா கெமால்]]
[[பல்கேரியாவின் முதலாம் பேர்டினண்ட்|பேர்டினண்ட் I]]
வரிசை 19:
| குறிப்புகள்=

'''முதல் உலகப்போர்''' என்பது உலகம் தழுவிய அளவில் இடம்பெற்ற ஒரு போர். எனினும் இது பெரும்பாலும் [[ஐரோப்பா]]விலேயே நடைபெற்றது. இப் போரில் நேச நாடுகள் என்று அழைக்கப்பட்ட [[பிரான்ஸ்]], [[ரஷ்யா]], [[பிரிட்டன்]] மற்றும் [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்கா]] ஆகிய நாடுகளும் மைய நாடுகள் என்று அழைக்கப்பட்ட [[ஆஸ்திரியா]], [[ஹங்கேரி]], [[ஜெர்மனி]] மற்றும் [[இத்தாலி]] ஆகிய நாடுகளும் எதிர்ப் பக்கங்களில் நின்று போரிட்டன. இதன் அளவும், செறிவும் முன்னெப்பொழுதும் இல்லாத அளவு பெரிதாக இருந்தது. பெருமளவினர் சண்டையில் ஈடுபட்டிருந்ததோடு பெரும் தொகையில் இழப்புகளும் ஏற்பட்டன. 60 மில்லியன் ஐரோப்பியர்களை உள்ளடக்கிய சுமார் 70 மில்லியன் போர்வீரர்கள் சண்டையில் ஈடுபட்டிருந்தனர். புதிய தொழில்நுட்பங்களின் வழிவந்த [[இயந்திரத் துப்பாக்கி]]கள், உயர்தரமான [[கனரகப் பீரங்கி]]கள், மேம்பட்ட போக்குவரத்து, [[நச்சு வளிமம்]], [[வான்வழிப் போர்]]முறை, நீர்மூழ்கிகள் என்பன போரின் தாக்கத்தைப் பெரிதும் அதிகப்படுத்தின. போரில் 40 மில்லியன் பேருக்குக் காயங்களும் உயிரிழப்புக்களும் ஏற்பட்டன. இதில் குடிமக்களும், போராளிகளுமாகச் சுமார் 20 மில்லியன் பேர் இறந்தனர். போரினால் ஏற்பட்ட, [[முற்றுகை]]கள், [[புரட்சி]]கள், [[இன ஒழிப்பு]], நோய்த் தொற்றுக்கள் என்பன மக்களுடைய துன்பங்களை மேலும் அதிகப்படுத்தின. இப் போர் [[1914]]ம் ஆண்டு முதல் [[1918]]ம் ஆண்டு வரை நடைபெற்றது.

இப் போரினால், 20 ஆம் நூற்றாண்டின் எஞ்சிய காலம் முழுதும், அரசியலிலும், [[பண்ணுறவாண்மை]] தொடர்பிலும் பெரும் விளைவுகள் ஏற்பட்டன. போரின் விளைவு காரணமாக, [[ஆஸ்திரோ-ஹங்கேரியப் பேரரசு]], [[ரஷ்யப் பேரரசு]], [[உதுமானிய பேரரசு]] என்பன சிதைவுற்றுத் துண்டுகள் ஆகின. செருமானியப் பேரரசு வீழ்த்தப்பட்டது. அது பெருமளவிலான நிலப்பகுதிகளை இழந்தது. இவ் விளைவுகள் காரணமாக ஐரோப்பாவிலும், மையக் கிழக்கிலும் நாடுகளின் எல்லைகள் மாற்றம் அடைந்தன. பழைய முடியாட்சிகளின் இடத்தில் பல [[பொதுவுடமை]] அரசுகளும், [[குடியரசு]]களும் உருவாயின. மீண்டும் இவ்வாறான போர் ஏற்படாமல் தடுக்கும் நோக்கத்துடன், உலக வரலாற்றில் முதல் முறையாகப் பன்னாட்டு அமைப்பான [[நாடுகளின் சங்கம்]] (League of Nations) ஒன்று உருவானது. போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தங்களும், புதிதாக உருவான நாடுகளின் உறுதியற்ற தன்மைகளும், 20 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் ஒரு உலகப் போர் ஏற்படுவதற்கான முக்கிய காரணங்களாக அமைந்தன.

1871 ஆம் ஆண்டில் ஜேர்மனி ஒருங்கிணைக்கப்பட்டதும், 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஐரோப்பாவின் வல்லரசுகளிடையே இக்கட்டான அதிகாரச் சமநிலை நிலவியதும் இப் போர் உருவாவதற்கான அடிப்படைக் காரணங்களுள் அடங்கும். இவற்றுடன், 19 ஆம் நூற்றாண்டில் ஜெர்மனியிடம் நிலப்பகுதிகளை இழந்ததில் பிரான்சுக்கு ஏற்பட்ட எதிர்ப்பு உணர்வு; ஜேர்மனிக்கும், பிரித்தானியாவுக்கும் இடையே பொருளியல், படைத்துறை, குடியேற்றங்கள் தொடர்பான போட்டிகள்; [[பால்கன் பகுதிகள்|பால்கன் பகுதிகளில்]] ஆஸ்திரோ-ஹங்கேரிய ஆட்சி தொடர்ச்சியான உறுதியற்ற நிலையில் இருந்தமை என்பனவும் இப் போருக்கான மேலதிக காரணங்களாகும்.

[[ஆஸ்திரியா]] நாட்டுப் பட்டத்து இளவரசரான [[பிரான்சிஸ் பெர்டினாண்ட்|பிரான்சிஸ் பெர்டினாண்டும்]], அவருடைய மனைவியும் காரில் சென்ற போது (1914 [[ஜுன் 28]]) சுட்டுக் கொல்லப்பட்டது போர் தொடங்குவதற்கான உடனடிக் காரணம் ஆயிற்று. சுட்டவன், [[காவ்ரீலோ பிரின்சிப்]],[[செர்பியா]] நாட்டைச்சேர்ந்தவன். இதன் காரணமாகப் பழிவாங்கும் நோக்குடன், செர்பிய இராச்சியத்தின் மீது [[ஆஸ்திரியா]] படையெடுத்தது. இதனைத் தொடர்ந்து பல கூட்டணிகள் உருவாயின. பல ஐரோப்பிய நாடுகள் பேரரசு எல்லைகள் உலகின் பல பகுதிகளிலும் இருந்ததால் விரைவிலேயே போர் உலகம் முழுவதற்கும் விரிவடைந்தது. சில கிழமைகளுக்கு உள்ளாகவே பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் போரில் இறங்கிவிட்டன. போர் முக்கியமாக நேச நாடுகள், மைய நாடுகள் எனப்பட்ட இரண்டு கூட்டணிகளுக்கு இடையே நடை பெற்றது. நேச நாடுகளின் பக்கத்தில் தொடக்கத்தில் பிரான்ஸ், ஐக்கிய இராச்சியம், ரஷ்யா என்பனவும் அவற்றோடு சேர்ந்த பேரரசுகளும் இருந்தன. பின்னர் பல நாடுகள் இக் கூட்டணியில் இணைந்தன. குறிப்பாக, ஆகஸ்ட் 1914ல் ஜப்பானும், ஏப்ரல் 1915 இல் இத்தாலியும், ஏப்ரல் 1917ல் ஐக்கிய அமெரிக்காவும் இணைந்தன. ஐரோப்பாவின் மையப் பகுதியில் இருந்ததால் மைய நாடுகள் என அழைக்கப்பட்ட கூட்டணியில், [[ஜெர்மனி]]யும், ஆஸ்திரியாவும் அவற்றோடு சேர்ந்த பேரரசுகளும் இருந்தன. [[ஓட்டோமான் பேரரசு]] 1914 அக்டோபரில் இக் கூட்டணியில் இணைந்தது. ஓராண்டு கழித்து பல்கேரியாவும் இதில் இணைந்தது. [[போர் விமானம்|போர் விமானங்களும்]], [[போர்க் கப்பல்]]களும், [[நீர்மூழ்கிக் கப்பல்]]களும் முதன் முதலாக இந்தப் போரில் தான் பயன்படுத்தப்பட்டன. போர் முடிந்தபோது, நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து, ஸ்பெயின், ஸ்கண்டினேவிய நாடுகள் மொனாக்கோ என்பன மட்டுமே ஐரோப்பாவில் நடுநிலையில் இருந்தன. எனினும் இவற்றுட் சில நாடுகள் போர்புரிந்த நாடுகளுக்குப் பொருளுதவிகள் செய்திருக்கக்கூடும்.
வரிசை 35:
=== ஆயுதப் போட்டி ===
[[படிமம்:HMS Dreadnought 1906 H61017.jpg|thumb|250px|right|ராயல் கடற்படையின் [[எச்எம்எஸ் டிரெட்நோட்]].]]
ஜேர்மனிக்கு, பிரித்தானியாவைப் போல பெரிய பேரரசின் வணிகச் சாதகநிலை இல்லாமல் இருந்தபோதும், 1914 ஆம் ஆண்டளவில் அந் நாட்டின் தொழில்துறை பிரித்தானியாவினதைக் காட்டிலும் பெரிதாகி விட்டது. இதனால், தத்தமது கடற்படைகளை வலுவாக வைத்திருக்கவேண்டி போருக்கு முந்திய ஆண்டுகளில் இரு நாடுகளும் பெருமளவிலான போர்க் கப்பல்களைக் கட்டின. இவ்விரு நாடுகளுக்கும் இடையிலான இந்தக் கடற்படைப் போட்டி 1906 ஆம் ஆண்டளவில் [[எச்எம்எஸ் டிரெட்நோட்]] (HMS Dreadnought) என்னும் போர்க்கப்பலின் வெள்ளோட்டத்துடன் மேலும் தீவிரமானது. இப் போர்க் கப்பலின் அளவும், வலுவும் இதற்கு முந்திய கப்பல்களை காலம் கடந்தவை ஆக்கின. பிரித்தானியா பிற துறைகளிலும் தனது கப்பற்படையின் முன்னணி நிலையைப் பேணிவந்தது.

[[டேவிட் ஸ்டீவன்சன்]] என்பார் இந்த ஆயுதப் போட்டியை, தன்னைத்தானே சுழல்முறையில் வலுப்படுத்திக்கொண்ட உச்சநிலையிலான படைத்துறைத் தயார்நிலை என விளக்கினார்."<ref>{{harvnb|Stevenson|1996}}</ref> டேவிட் ஹெர்மான் கப்பல் கட்டும் போட்டியை போரை நோக்கிய ஒரு நகர்வாகவே பார்த்தார்.<ref>{{harvnb|ஹெர்மான்|1996}}</ref> எனினும் [[நீல் பெர்கூசன்]] என்பார், பிரித்தானியா தனது முன்னணி நிலையைத் தக்க வைத்துக் கொள்ளும் வலிமையைக் கொண்டிருந்ததால், ஏற்படவிருந்த போருக்கான காரணமாக இது இருக்க முடியாது என வாதிட்டார்.<ref name="Ferguson1999">{{harvnb|பெர்கூசன் |first=Niall |1999 }}</ref> இந்த ஆயுதப் போட்டிக்கான செலவு பிரித்தானியா, ஜேர்மனி ஆகிய இரு நாடுகளிலுமே தாக்கத்தை ஏற்படுத்தின. பிரித்தானியா, ஜேர்மனி, பிரான்ஸ், ரஷ்யா, ஆஸ்திரியா-ஹங்கேரி, இத்தாலி ஆகிய பெரிய வல்லரசுகளின் ஆயுதங்களுக்கான மொத்தச் செலவு 1908 க்கும் 1913 க்கும் இடையில் 50% கூடியது.<ref name="Fromkin2004">
வரிசை 42:
=== திட்டங்கள், நம்பிக்கையின்மை, படைதிரட்டல் ===
[[படிமம்:French heavy cavalry Paris August 1914.jpg|thumb|250px|right|போருக்குச் செல்லும் வழியில் பிரான்சின் கனரக குதிரைப்படையினர், மார்புக் கவசங்களையும் தலைக் கவசங்களையும் அணிந்தபடி, பாரிஸ் நகரில் அணிவகுத்துச் செல்கின்றனர், ஆகஸ்ட் 1914.]]
ஜெர்மனி, பிரான்ஸ், ரஷ்யா ஆகிய நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட படைதிரட்டல் திட்டங்கள் பிணக்குகளைத் தாமாகவே தீவிரமாக்கின எனப் பல அரசியல் அறிஞர்கள் கருதுகின்றனர். பல மில்லியன் கணக்கான படையினரைச் செயற்படவைத்தல், நகர்த்துதல், வசதிகள் அளித்தல் போன்றவற்றின் சிக்கலான தன்மைகளினால், தயார்ப் படுத்துதலுக்கான திட்டங்களை முன்னராகவே தொடங்கவேண்டி இருந்தது. இத்தகைய தயார்ப்படுத்தல் உடனடியாகவே தாக்குதலை நடத்தவேண்டிய நிலையையும் நாடுகளுக்கு ஏற்படுத்தியது.

குறிப்பாக, [[ஃபிரிட்ஸ் பிஷர்]] (Fritz Fischer) என்னும் வரலாற்றாளர் ஜேர்மனியின் [[ஸ்கீல்பென் திட்டம்|ஸ்கீல்பென் திட்டத்தின்]] உள்ளார்ந்த தீவிரத்தன்மை பற்றி எடுத்துக்காட்டினார். ஜேர்மனிக்கு இரண்டு முனைகளில் போரிடவேண்டிய நிலை இருந்ததனால் ஒருமுனையில் எதிரியை விரைவாக ஒழித்துவிட்டு அடுத்த முனையில் கவனம் செலுத்தவேண்டிய தேவை இருந்தது. இதனால், வலுவான தாக்குதல் ஒன்றின் மூலம் பெல்ஜியத்தைக் கைப்பற்றிக்கொண்டு, பிரான்சின் படைகள் தயாராகுமுன்பே அதனைத் தாக்கிச் செயலிழக்கச் செய்ய வேண்டும் என்பதும் திட்டமாக இருந்தது. இதன் பின்னர் ஜேர்மன் படையினர் தொடர்வண்டிப் பாதை வழியாகக் கிழக்கு நோக்கிச் சென்று மெதுவாகத் தயாராகிக் கொண்டிருக்கும் ரஷ்யப் படைகளை அழிப்பது திட்டம்.

பிரான்சின் [[திட்டம் 17]], ஜேர்மனியில் தொழிற்றுறை மையமான [[ரூர் பள்ளத்தாக்கு|ரூர் பள்ளத்தாக்கைத்]] (Ruhr Valley) தாக்குவதை நோக்கமாகக் கொண்டிருந்தது. கோட்பாட்டு அடிப்படையில் இது, ஜேர்மனி நவீன போர் நடவடிக்கைகளில் ஈடுபடும் வலிமையை ஒழித்துவிடும்.

ரஷ்யாவின் திட்டம் 19, ஆஸ்திரியா-ஹங்கேரி, ஜேர்மனி, ஓட்டோமான்கள் ஆகியோருக்கு எதிராக ஒரே நேரத்தில் தாக்குதல்களைத் தொடங்க வேண்டுமென எதிர்பார்த்தது. எனினும், திருத்தப்பட்ட திட்டம் 19 இன் படி ஆஸ்திரியா-ஹங்கேரியே முதன்மை இலக்காகக் கொள்ளப்பட்டது. இதன்மூலம் கிழக்குப் [[பிரசியா]]வுக்கு எதிராகப் படைகளை அனுப்புவதற்கான தேவை குறைகின்றது.

மூன்று திட்டங்களுமே விரைவாகச் செயற்படுவது வெற்றியை முடிவு செய்யும் என்னும் கருத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தன. விரிவான கால அட்டவணைகள் தயாரிக்கப்பட்டன. போருக்கான ஆயத்தங்கள் தொடங்கிய பின் திரும்பிப் பார்க்கும் சாத்தியங்கள் மிகவும் குறைவு.
வரிசை 56:
{{harvnb|மார்ஸ்டென்|2001|p=177}}</ref><ref>{{harvnb|Isenberg|1981}}</ref> 1918 ஆம் ஆண்டளவில் ஜேர்மனியின் முயற்சிகள் தோல்வியடையத் தொடங்கியபோது [[இரண்டாம் கெய்சர் வில்கெல்ம்]] போன்ற தலைவர்கள் விலக வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன. அத்துடன், இராணுவவாதமும், [[வல்லாண்மையியம்|வல்லாண்மையியமும்]] (aristocracy) முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்ற பொதுவான கோரிக்கைகளும் உருவாகின. இந்த அடிப்படை 1917 ல் ரஷ்யா சரணடைந்ததன் பின்னர், அமெரிக்கா போரில் பங்குபற்றுவதற்கான நிலைமையைத் தோற்றுவித்தது.<ref>{{harvnb|ரொஸ்|1996}}</ref>

நேச நாடுகளின் கூட்டணியின் முக்கிய பங்காளிகளான பெரிய பிரித்தானியாவும், பிரான்சும் மக்களாட்சியைக் கொண்ட நாடுகள். இவை ஜெர்மனி, ஆஸ்திரியா-ஹங்கேரி, ஓட்டோமான் பேரரசு போன்ற சர்வாதிகார நாடுகளுடன் போரிட்டன. நேச நாடுகளில் ஒன்றாகிய ரஷ்யா 1917 ஆம் ஆண்டு வரை ஒரு பேரரசாக இருந்தது, எனினும் அது ஆஸ்திரியா-ஹாங்கேரியினால் [[சிலாவிய மக்கள்]] ஒடுக்கப்படுவதை எதிர்த்தது. இப் பின்னணியில் இப் போர் தொடக்கத்தில் சனநாயகத்துக்கும், சர்வாதிகாரத்துக்கும் இடையிலான போராகவே பார்க்கப்பட்டது. எனினும், போர் தொடர்ந்தபோது இது அதன் நம்பகத்தன்மையை இழந்துவிட்டது.

[[நாடுகளின் சங்கம்|நாடுகளின் சங்கமும்]] (League of Nations), [[ஆயுதக்குறைப்பு]]ம் உலகிக் நிலைத்த அமைதியை ஏற்படுத்தும் என வில்சன் நம்பினார். [[எச். ஜி. வெல்ஸ்]] என்பாரின் கருத்தொன்றைப் பின்பற்றி போரை, "எல்லாப் போர்களையும் முடித்து வைப்பதற்கான போர்" என விபரித்தார். பிரித்தானியாவும், பிரான்சும் கூட இராணுவவாதத்தில் சிக்கியிருந்த போதும் போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கத்தை அடைவதற்காக, அவர்களுடன் சேர்ந்து போரிட அவர் தயாராக இருந்தார்.

[[பிரிட்ஸ் பிஷர்]] (Fritz Fischer) போருக்காகப் பெரும்பாலும் ஜேர்மனியின் வல்லாண்மைவாதத் தலைவர்களையே குற்றஞ்சாட்டினார்<ref>{{harvnb|Southgate}}</ref>. ஜேர்மனியின் சமூக சனநாயகக் கட்சி பல தேர்தல்களில் வெற்றிபெற்று இருந்தது. அவர்களுடைய தங்களுடைய வாக்கு விகிதத்தை அதிகரித்து 1912 ஆம் ஆண்டில் பெரும்பான்மைக் கட்சியானது. எனினும் திரிவு செய்யப்பட்ட அவைகளுக்கு, கெய்சருடன் ஒப்பிடும்போது குறைவான அதிகாரங்களே இருந்தன. இச் சூழலில் ஒருவகையான அரசியல் புரட்சி ஏற்படுவதற்கான சாத்தியங்கள் அதிகம் இருப்பதாக அஞ்சப்பட்டது. ரஷ்யாவிலும் படைப் பெருக்கமும், 1916-1917 ஆம் ஆண்டுகளில் நிறைவேற்றப்பட வேண்டிய சீர்திருத்த நடைவடிக்கைகளும் நடந்து வந்தன. இவைகளுக்கு முன்பே போரில் ரஷ்யா தோல்வியுற்று, ஜேர்மனி ஒன்றிணைக்கப்படக் கூடிய நிலை இருந்தது. தனது பிந்திய ஆக்கங்களில், ஜேர்மனி 1912 ஆம் ஆண்டிலேயே போரைத் திட்டமிட்டு விட்டதாக பிஷர் வாதித்தார்<ref>{{harvnb|Fischer|1975|p=470|quote=ஜூலை 1917ல் ஜேர்மன் அரசியல்வாதிகள் தொடக்கி வைத்த போர் பயத்தினாலும் வேறு வழியின்றியும் தற்பாதுகாப்புக்காகத் தொடங்கப்பட்டது அல்ல. இது எதிரிகள் வலுப்பெற முன்பே அவர்களது பலத்தை அழித்துவிட எடுக்கப்பட்ட முயற்சியும், அதன்மூலம் ஜேர்மனியின் அரசியல் குறிக்கோள்களை அடைவதற்கான நடவடிக்கையும் ஆகும்.}}</ref>.
வரிசை 66:
=== அதிகாரச் சமநிலை ===
[[படிமம்:Map Europe alliances 1914-ta.png|thumb|285px|right|போருக்கு முந்திய ஐரோப்பியப் படைத்துறைக் கூட்டணிகள்.]]
போருக்கு முந்திய காலத்தில் வல்லரசுகளின் வெளிநாட்டுக் கொள்கைகளின் இலக்கு அதிகாரச் சமநிலையைப் பேணிக் கொள்வதாகும். இது, வெளிப்படையானதும், இரகசியமானதுமான கூட்டணிகளையும், ஒப்பந்தங்களையும் உள்ளடக்கிய விரிவான வலையமைப்புக்களோடு தொடர்புபட்டது. எடுத்துக் காட்டாக [[பிராங்கோ-பிரஷ்யப் போர்|பிராங்கோ-பிரஷ்யப் போருக்குப்]] (1870–71) பின்னர், தனது மரபுவழியான எதிரியான பிரான்சின் பலத்தைச் சமப்படுத்துவதற்கு வலுவான ஜெர்மனியைப் பிரித்தானியா விரும்பியது. ஆனால், பிரித்தானியாவின் [[கடற்படை]]க்குச் சவாலாக ஜேர்மனி தனது கப்பற்படையைக் கட்டியெழுப்ப முற்பட்டபோது, பிரித்தானியா தனது நிலையை மாற்றிக்கொண்டது. ஜேர்மனியின் அச்சுறுத்தலைச் சமாளிப்பதற்காகத் துணை தேடிய பிரான்ஸ், ரஷ்யாவைக் கூட்டாளி ஆக்கிக்கொண்டது. ரஷ்யாவிடம் இருந்து அச்சுறுத்தலை எதிர்கொண்ட ஆஸ்திரியா-ஹங்கேரி, ஜேர்மனியின் ஆதரவை நாடியது.

முதல் உலகப் போர் தொடங்கிய பின்னர், இவ்வாறான ஒப்பந்தங்கள் ஓரளவுக்கு மட்டுமே எந்தநாடு எந்தப் பக்கத்துக்குச் சார்பாகப் போரிட்டது என்பதை முடிவு செய்தது. இத்தாலி, ஆஸ்திரியா-ஹங்கேரியுடனும், ஜேர்மனியுடனும் ஒப்பந்தங்களைச் செய்திருந்தது. எனினும் அது அந் நாடுகளுக்குச் சார்பாகப் போரில் இறங்கவில்லை. அது பின்னர் நேச நாடுகளுக்கு ஆதரவாக இருந்தது. எல்லாவற்றிலும் குறிப்பிடத்தக்க ஒப்பந்தம் ஜேர்மனிக்கும், ஆஸ்திரியா-ஹங்கேரிக்கும் இடையே முதலில் தற்பாதுகாப்புக்காகச் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம் ஆகும். இதனை 1909 ஆம் ஆண்டில் ஜேர்மனி விரிவுபடுத்தி, ஆஸ்திரியா-ஹங்கேரி போரைத் தொடங்கினாலும் கூட ஜேர்மனி அதன் பக்கம் இருக்கும் என உறுதி கூறியது<ref>{{harvnb|பிரம்கின்|2004|pp=266-267}}</ref>.
வரிசை 93:

==== சேர்பியப் படையெடுப்பு ====
சேர்பியப் படைகள், ஆஸ்திரியா-ஹங்கேரிக்கு எதிரான [[சேர்ச் சண்டை]] எனப்பட்ட சண்டையில் ஆகஸ்ட் 12 ஆம் தேதியில் இருந்து ஈடுபட்டிருந்தன. இவை, டிரினா, சாவா ஆகிய ஆறுகளின் தெற்குக் கரையில் இருந்து தற்காப்புத் தாக்குதலை நடத்தின. அடுத்து இரண்டு கிழமைகளில் ஆஸ்திரியா-ஹங்கேரித் தாக்குதல்கள் பெரும் இழப்புக்களுடன் பின்னடைவுகளைச் சந்தித்தது. நேச நாடுகள் கூட்டணியின் குறிப்பிடத்தக்க முதல் வெற்றியான இது, ஆஸ்திரியாவின் விரைவான வெற்றி குறித்த கனவுகளைத் தகர்த்தது. இதனால், ஆஸ்திரியா தனது படைகளில் பெரும்பகுதியை சேர்பிய முனையில் ஈடுபடுத்த வேண்டி ஏற்பட்டதால், ரஷ்ய முனையிலான நடவடிக்கைகள் பலவீனமாயின.

==== பெல்ஜியத்திலும் பிரான்சிலும் ஜேர்மன் படைகள் ====
வரிசை 106:
முதலாம் உலகப் போருக்கு முந்திய படைத்துறை உத்திகள் தொழில்நுட்ப வளர்ச்சிகளுக்கு இணையாக வளரத் தவறியிருந்தன. இப்போது, பெரும்பாலான போர்களில் காலங்கடந்த முறைகளால் ஊடறுக்க முடியாத கவர்ச்சிகரமான பாதுகாப்பு முறைமைகள் உருவாக்கப்பட்டன. [[முட்கம்பி]] வேலிகள் பெருமளவில் காலாட் படைகள் முன்னேறுவதற்குத் தடையாக இருந்தன. தொலைதூர கனரக ஆயுதங்கள், 1870 ஆண்டின் ஆயுதங்களைக் காட்டிலும் கூடிய பாதிப்புக்களை விளைவிக்கக் கூடியனவாக இருந்ததுடன், [[இயந்திரத் துப்பாக்கி]]களுடன் சேர்ந்து, திறந்த வெளிகளைப் படைகள் கடந்து செல்வதைக் கடினமாக்கியிருந்தன. இப் போரில் ஜேர்மனி [[நச்சு வளிமம்|நச்சு வளிமங்களைப்]] போராயுதமாக அறிமுகப்படுத்தியது. விரைவிலேயே எதிரணியும் இதனைப் பயன்படுத்தத் தொடங்கியது. எனினும், சண்டைகளை வெல்வதில் இது முக்கிய பங்கு வகித்ததாகத் தெரியவில்லை. நச்சு வளிமங்களின் விளைவுகள் கொடூரமானவையாக இருந்தன. தாக்கப்பட்டவர்கள் மெதுவாகவும், கூடிய வலிகளுடனும் இறந்தனர். இப் போரில், நச்சு வளிமங்கள் மிகுந்த அச்சத்தை விளைவிப்பனவாகவும், மிகவும் கொடூரமான நினைவுகளை ஏற்படுத்தியன ஆகவும் இருந்தன. இரு அணித் தளபதிகளுமே பதுங்குகுழி நிலைகளைப் பாரிய இழப்பின்றித் தகர்ப்பதற்கான வழிமுறைகளைக் கண்டறியத் தவறியிருந்தனர். காலப் போக்கில், தொழில்நுட்பத்தின் உதவியுடன் புதிய தாக்குதல் ஆயுதங்கள் உருவாக்கப்பட்டன. இவற்றுள் குறிப்பிடத்தக்கது "[[தாங்கி]]" ஆகும். பிரித்தானியாவும், பிரான்சுமே இதனை முக்கியமாகப் பயன்படுத்தினர். இவர்களிடமிருந்து கைப்பற்றியவற்றையும், தாமே உருவாக்கிய குறைந்த அளவு தாங்கிகளையும் ஜேர்மனியும் பயன்படுத்தியது.

[[முதலாம் மார்னே சண்டை]]க்குப் பின்னர், நேச நாடுகளின் படைகளும், ஜேர்மனியின் படைகளும், [[கடல் நோக்கிய ஓட்டம்]] (Race to the Sea) எனப்பட்ட, தொடரான பல சுற்றுவழி நகர்வுகளை மேற்கொள்ளலாயின. பிரித்தானியாவும், பிரான்சும் லோரைனில் இருந்து பெல்ஜியத்தின் பிளெமியக் கரை வரை நீண்டிருந்த பதுங்குகுழிகளில் இருந்து போரிட்ட ஜேர்மனியின் படைகளை எதிர்கொள்ளவேண்டி ஏற்பட்டது. பிரித்தானியாவும், பிரான்சும் தாக்குதலில் குறியாக இருந்தபோது, ஜேர்மனியின் படைகள் கைப்பற்றப்பட்ட நிலப்பகுதிகளைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தன. இதனால், பாதுகாப்புக்கு ஏற்றவாறு ஜேர்மனியின் பதுங்குகுழிகள் எதிரிப்படைகளினதைக் காட்டிலும் சிறப்பாக அமைக்கப்பட்டிருந்தன. ஆனால், பிரித்தானியாவினதும், பிரான்சினதும் பதுங்குகுழிகள் ஜேர்மனியின் பாதுகாப்பு நிலைகளை ஊடறுக்கும் வரையிலான தற்காலிகத் தேவைக்கானவையாகவே இருந்தன. எவருமே வெற்றிபெற முடியாதிருந்த இந்த நிலையை மாற்றுவதற்கு, இரு பகுதியினருமே அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சிகளைப் பயன்படுத்தலாயினர். 1915 ஆம் ஆண்டு ஏப்ரலில், 1899 இலும் 1907 இலும் ஏற்படுத்தப்பட்ட ஹேக் மாநாட்டு முடிவுகளுக்கு எதிராக, ஜேர்மனி [[குளோரீன்]] வளிமத்தை முதன்முதலாகப் பயன்படுத்தியது. இவ்வளிமம் பயன்படுத்தப்பட்ட பகுதிகளில் இருந்து நேசப் படைகள் பின்வாங்கியதால், அவற்றின் முன்னரங்க நிலைகளில் 6 கிலோமீட்டர் (4 மைல்கள்) நீளமான வெளியொன்றை ஏற்படுத்த ஜேர்மனியால் முடிந்தது. கனடாவின் படைகள் [[இரண்டாம் ஈபிரெ சண்டை]]யில் (Second Battle of Ypres) இந்த உடைப்பை மூடிவிட்டனர்.

[[படிமம்:GermanInfantry1914.jpg|250px|left|thumb| ஜேர்மனியின் நிலைகள் மீதான பிரான்சின் ஒரு தாக்குதல். சம்பேன், பிரான்ஸ், 1917]]
[[சொம்மா சண்டை]]யின் முதல் நாளான 1916 ஜூலை முதலாம் தேதி பிரித்தானியப் படைகளுக்கு மறக்கமுடியாத நாளாக விளங்கியது. இந் நாளில் அப்படைகளுக்கான பாதிப்பு 57,470 போராக இருந்தது. இதில் 19,240 பேர் இறந்துவிட்டனர். பெரும்பாலான பாதிப்புக்கள் தாக்குதல் தொடங்கிய முதல் மணிநேரத்தில் இடம்பெற்றன. சொம்மாத் தாக்குதல் முழுவதிலுமான பிரித்தானியப் படைகளின் இழப்பு சுமார் ஐந்து இலட்சம் பேராகும்<ref>{{harvnb|டுஃபி}}</ref>.

அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு எந்தத் தரப்பினருமே எதிர்த்தரப்பினருக்கு முடிவான தோல்வியை ஏற்படுத்த முடியவில்லை. எனினும், [[வேர்டன் சண்டை|வேர்டனில்]] 1916 ஆம் ஆண்டு முழுதும் தொடர்ந்த ஜேர்மனியின் நடவடிக்கைகளும், சொம்மாவில் நேசப்படைகளுக்கு ஏற்பட்ட தோல்வியும், பிரான்சின் படைகளை நிலைகுலையும் நிலைக்கு அருகில் கொண்டுவந்தது. வீணான முன்னரங்கத் தாக்குதல்களும், நடைமுறைக்கு ஒவ்வாத முறைகளை இறுக்கமாகப் பின்பற்றியதும், பிரித்தானியாவினதும், பிரான்சினதும் படைகளுக்குக் கடும் இழப்புக்களை ஏற்படுத்தியதுடன், பரவலான [[பிரான்ஸ் படைவீரர் கலகங்கள் (1971)|படைவீரர்களின் கலகங்களுக்கும்]] வித்திட்டது.

1915 தொடக்கம் 1917 வரையான காலப்பகுதி முழுவதும், எடுத்துக்கொண்ட போர் உத்திகள், வியூகங்கள் என்பன காரணமாக பிரித்தானியப் பேரரசுக்கும், பிரான்சுக்கும் ஜேர்மனியைவிடக் கூடிய அளவில் இழப்புக்கள் ஏற்பட்டன. ஜேர்மனி, வேர்டன் சண்டையின்போது ஒரேயொரு முக்கிய தாக்குதலை மட்டுமே நிகழ்த்திய வேளையில், ஜேர்மனியின் நிலைகளை ஊடறுப்பதற்காக நேசப்படைகள் பல தாக்குதல்களை நடத்தின. உத்தி அடைப்படையில், ஜேர்மனியின் தற்காப்புக் கொள்கை, இழப்புக்களைத் தாங்கக்கூடிய இலகுவான முன்னணி நிலைகளுடனும், வலுவான எதிர்த்தாக்குதல்களை உடனடியாக நடத்தக்கூடிய முக்கியமான நிலைகளுடனும் கூடிய பதுங்குகுழிப் போருக்கு பொருத்தமானதாக அமைந்தது. இது, எதிரிகளின் தாக்குதல்களைக் குறைந்த இழப்புடன் முறியடிப்பதற்கு உதவியாக அமைந்தது. மொத்தமாகப் பார்க்கும்போது தாக்குதல், தற்காப்பு இரண்டிலுமே உயிரிழப்புக்கள் பாரிய அளவிலேயே இருந்தன.
வரிசை 121:
=== கடற்போர் ===
[[படிமம்:Grand Fleet sails.jpg|thumb|250px|right|பிரித்தானியப் பெருங் கப்பற்படை.]]
போரின் தொடக்கத்தில், ஜேர்மன் பேரரசு, உலகின் பல பகுதிகளிலும் ஓரளவு தாக்குதற் திறன் கொண்ட கப்பல்களை வைத்திருந்தது. இவை பின்னர் நேச நாடுகளைச் சேர்ந்த வணிகக் கப்பல்களைத் தாக்குவதற்குப் பயன்பட்டன. பிரித்தானிய ராயல் கடற்படை அக் கப்பல்களைத் தாக்கி அழித்து வந்தது. எனினும், வணிகக் கப்பல்களைப் பாதுகாக்க முடியாத சில இக்கட்டான நிலைகளும் ஏற்படவே செய்தன. எடுத்துக்காட்டாக, சிங்டாவோவில் இருந்த கிழக்காசியப் படைப்பிரிவைச் சேர்ந்த இலகு போர்க்கப்பலான [[எம்டன்]], 15 வணிகக் கப்பல்களை அழித்ததுடன், ஒரு ரஷ்ய இலகு போர்க்கப்பலையும், பிரான்சின் அழிப்புக் கப்பலொன்றையும் மூழ்கடித்தது. ஆனாலும், ஜேர்மனியின் கிழக்காசியப் பிரிவைச் சேர்ந்த, ஆயுதம் தாங்கிய கப்பல்களான ''ஸ்கார்னோஸ்ட்'', ''நீசெனோ'', இலகு போர்க்கப்பல்களான ''நேர்ன்பர்க்'', ''லீப்சிக்'' மற்றும் இரண்டு போக்குவரத்துக் கப்பல்களுக்கு வணிகக் கப்பல்களைத் தாக்கும் ஆணை வழங்கப்படவில்லை. அவை ஜேர்மனியை நோக்கிச் சென்றன. வழியில் பிரித்தானியக் கப்பற்படையினரை எதிர் கொண்ட ''டிரெஸ்டென்'' என்னும் கப்பலும் உள்ளிட்ட ஜேர்மனியின் கப்பல்கள், [[கொரோனெல் சண்டை]] எனப்பட்ட சண்டையில் இரண்டு ஆயுதம் தாங்கிய கப்பல்களை மூழ்கடித்தன. எனினும் 1914இ இடம்பெற்ற [[போக்லாந்துத் தீவுச் சண்டை]]யில், ''டெஸ்டென்'' தவிர்ந்த எல்லாக் கப்பல்களுமே அழிக்கப்பட்டன.<ref>{{harvnb|டெய்லர்2007|pp=39–47}}</ref>.

போர் தொடங்கியதுமே ஜேர்மனி மீதான கடற் தடையொன்றைப் பிரித்தானியா ஏற்படுத்தியது. இந்த உத்தி, ஜேர்மனிக்கான முக்கியமான இராணுவ, குடிமக்களுக்கான தேவைகளின் வழங்களை நிறுத்துவதில் வெற்றிகண்டாலும், இது முன்னைய இரண்டு நூற்றாண்டுகளாகப் பல்வேறு பன்னாட்டு ஒப்பந்தங்களால் ஏற்றுக்கொள்ளப் பட்டிருந்த அனைத்துலகச் சட்டங்களை மீறுவதாக அமைந்தது<ref name="isbn0-313-33181-2">{{harvnb|கீனே|2006|pp=5}}</ref>. அனைத்துலகக் கடல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் பிரித்தானியா கடற் கண்ணிகளை விதைத்து, எக்கப்பலும் கடலின் எப்பகுதிக்குள்ளும் நுழைய முடியாதவாறு தடுத்தது. இது நடுநிலைக் கப்பல்களுக்கும் ஆபத்தை விளைவிப்பதாக இருந்தது.<ref name="isbn1-85728-498-4">
வரிசை 130:

ஜேர்மன் [[யூ-போட்டுகள்]] ஐக்கிய அமெரிக்காவுக்கும், பிரித்தானியாவுக்கும் இடையிலான வழங்கல்களின் போக்குவரத்தைத் துண்டிக்க முயன்றன.<ref>{{cite web |url=http://www.uscg.mil/History/h_AtlWar.html|title=Coast Guard in the North Atlantic War|accessdate=2007-10-30|work=}}</ref> தாக்குதல்கள் எச்சரிக்கை எதுவும் இன்றியே வருவது நீர்மூழ்கிப் போரின் இயல்பு ஆகும். இதனால் வணிகக் கப்பல்கள் தப்புவதற்கு மிகவும் குறைந்த சாத்தியங்களே உண்டு.<ref name="isbn0-8050-7617-4">
{{harvnb|கில்பர்ட்|2004|pp=306}}</ref> ஐக்கிய அமெரிக்கா இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தது. இதனால் ஜேர்மனி தனது தாக்குதல் முறையில் மாற்றங்களை ஏற்படுத்தியது. 1915 ஆம் ஆண்டில் [[ஆர்எம்எஸ் லூசித்தானியா]] என்னும் பயணிகள் கப்பல் மூழ்கடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பயணிகள் கப்பல்களைத் தாக்குவது இல்லை என்று ஜேர்மனி உறுதியளித்தது. அதேவேளை பிரித்தானியா தனது வணிகக் கப்பல்களை ஆயுதமயமாக்கியது. இது அவற்றை போர்நோக்கமற்ற கப்பல்களுக்கான பாதுகாப்பு விதிமுறைகளுக்கு அடங்காமல் செய்தது. இறுதியாக, அமெரிக்கா போரில் ஈடுபடப்போகிறது என்று உணர்ந்து கொண்ட ஜேர்மனி, [[கட்டுப்பாடற்ற நீர்மூழ்கிப் போர்]] என்னும் கொள்கையைக் கடைப்பிடிக்க முடிவு செய்தது.<ref name="isbn0-8420-2918-4">{{harvnb|ஜான்ஸ்|year=2001|p=80}}</ref> அமெரிக்கா பெருமளவில் படைகளை வெளியே அனுப்பமுன் நேச நாடுகளின் கடல் வழிகளை நெருக்குவது ஜேர்மனியின் நோக்கமான இருந்தது.

வணிகக் கப்பல்கள் அழிப்புக் கப்பல்களின் பாதுகாப்புடன் கூடிய அணிகளாகச் செல்லத் தொடங்கியதும் யூ-போட்டுகளின் அச்சுறுத்தல்கள் குறையலாயின. இந்த உத்தி யூ-போட்டுகளுக்கான இலக்குகளை இல்லாதாக்கியது. இதனால் இழப்புக்கள் குறைந்தன. புதிய கருவிகளின் அறிமுகம், கடலுக்கு அடியிலேயே நீர்மூழ்கிகளைத் தாக்கக்கூடிய வாய்ப்புக்களையும் உருவாக்கின. கப்பல்கள் ஒன்று சேரும்வரை காத்திருக்க வேண்டி இருந்ததால் அணிகளாகச் செல்லும் உத்தியின் மூலம் வழங்கல்களில் தாமதங்கள் ஏற்பட்டன.

[[வானூர்தி தாங்கி]]களும் முதன் முதலாக முதலாம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்டன. [[எச்எம்எஸ் பியூரியஸ்]] என்னும் வானூர்தி தாங்கிக் கப்பலில் இருந்து புறப்பட்ட [[சொப்வித் கமல்]] (Sopwith Camels) என்னும் வானூர்திகள் 1918 ஆம் ஆண்டில், தொண்டேர்னில் உள்ள [[செப்பெலின்]] வானூர்தித் தரிப்பிடத்தை வெற்றிகரமாகத் தாக்கின. அத்துடன் இதிலிருந்து [[பிளிம்ப்]] (blimp) வானூர்திகள் மூலம் நீர்மூழ்கிகளைக் கண்காணிக்கும் பணிகளும் நடைபெற்றன.<ref>{{harvnb|Price}}</ref>
வரிசை 138:
=== தெற்குப் போர்முனைகள் ===
==== பால்க்கன் போர் ====
ரஷ்யாவுடன் போரிடவேண்டி இருந்ததால், ஆஸ்திரியா-ஹங்கேரி அதன் படைகளின் மூன்றில் ஒரு பகுதியை மட்டுமே சேர்பியாவைத் தாக்கப் பயன்படுத்த முடிந்தது. பெரும் இழப்புகளுக்குப் பின்னர் ஆஸ்திரியர்கள் சேர்பியாவின் தலைநகரான பெல்கிரேடைக் கைப்பற்றிச் சிறிது காலம் வைத்திருந்தனர். 1914 இன் முடிவில், கொலூபரா சண்டை என அழைக்கப்பட்ட எதிர்த்தாக்குதல் ஒன்றை நடத்திச் சேர்பியர்கள் ஆஸ்திரியர்களை நாட்டை விட்டு விரட்டினர். 1915 ஆம் ஆண்டின் முதல் 10 மாதங்களிலும் ஆஸ்திரியா-ஹங்கேரி தனது ஒதுக்குப் படைகளில் பெரும்பாலானவற்றை இத்தாலியுடன் போரிடப் பயன்படுத்தியது. ஜேர்மனியும், ஆஸ்திரியா-ஹங்கேரியும் சேர்பியாவுக்கு எதிராகத் தாக்குதல் நடத்துவதற்கு [[பல்கேரியா]]வை இணங்க வைத்தனர். ஆஸ்திரியா-ஹங்கேரியின் மாகாணங்களான சிலோவேனியா, குரோசியா, பாஸ்னியா என்பன சேர்பியாவை ஆக்கிரமிப்பதற்கும், ரஷ்யா, இத்தாலி என்பவற்றுடன் போரிடுவதற்கும் ஆஸ்திரியா-ஹங்கேரிக்குப் படைகளை அளித்தன. மான்டனீக்ரோ சேர்பியாவுக்குத் துணைநின்றது.

ஒரு மாதத்துக்கும் குறைவான காலத்தில் சேர்பியா கைப்பற்றப்பட்டது. மைய நாடுகள் வடக்கிலிருந்து அக்டோபரில் தாக்குதலைத் தொடங்கின. நான்கு நாட்களின் பின்னர் பல்கேரியாவும் தெற்கிலிருந்து தாக்கத் தொடங்கியது. இரண்டு முனைகளில் போரிடவேண்டியிருந்த சேர்பியப் படைகள் தோல்வியை உணர்ந்துகொண்டு [[அல்பேனியா]]வுக்குப் பின்வாங்கின. அவர்கள் ஒரு தடவை மட்டுமே பல்கேரியருடன் போரிடுவதற்காகத் தமது பின்வாங்கலை நிறுத்தினர். சேர்பியர்கள் கொசோவோச் சண்டை என்னும் சண்டையில் தோல்வியடைந்தனர். 6-7 ஜனவரி 1916 ஆம் ஆண்டில் இடம்பெற்ற [[மொய்கோவாக் சண்டை]] என்னும் சண்டையின் மூலம் சேர்பியர்கள் பின்வாங்குவதற்கு மான்டனீக்ரோ உதவியது. எனினும் இறுதியில் ஆஸ்திரியா மான்டினீக்ரோவையும் கைப்பற்றியது. சேர்பியப் படைகள் கப்பல் மூலம் [[கிரீஸ்|கிரீசுக்குச்]] சென்றன.
"https://ta.wikipedia.org/wiki/முதலாம்_உலகப்_போர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது