செவ்வாய் (கோள்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Bot: Migrating 175 interwiki links, now provided by Wikidata on d:q111 (translate me)
சி clean up
வரிசை 1:
{| border="1" cellpadding="2" cellspacing="0" align="right" style="margin-left:1em;"
|+ <big>'''செவ்வாய் [[படிமம்:Mars_symbolMars symbol.svg‎]]'''</big>
|-
!align="center" colspan="2" bgcolor="#000000"| [[படிமம்:Mars_Valles_MarinerisMars Valles Marineris.jpeg|none|250px|செவ்வாய்க் கோள்]]
|-
!bgcolor="#ffc0c0" colspan="2"| [[சுற்றுப்பாதை]]சார்ந்த இயல்புகள்
வரிசை 65:
| [[நெயோன்]]<br />[[கிரிப்டோன்]]<br />[[க்செனொன்]]<br />[[ஓசோன்]] || Trace
|}
'''செவ்வாய்''' (''Mars'') [[சூரியக் குடும்பம்|சூரியக்குடும்பத்தில்]] உள்ள ஒரு [[கோள்]] ஆகும். இது [[சூரியன்|சூரியனிலிருந்து]] நான்காவது கோளாக உள்ளது. இதன் மேற்பரப்பில் காணப்படும் [[இரும்பு ஒட்சைட்டு]] இக்கோளைச் செந்நிறமாகக் காட்டுகிறது.<ref name="nasa_hematite" /> இதனாலேயே இதற்குச் ''செவ்வாய்'' என்ற பெயர் ஏற்பட்டது. ஒரு [[புவிசார் கோள்|புவிசார் கோளான]] இதன் மேற்பரப்பு சந்திரனில் உள்ளதுபோல் [[கிண்ணக்குழி]]களையும், புவியில் உள்ளது போன்ற [[எரிமலை]]கள், [[பள்ளத்தாக்கு]]கள், [[பாலைவனம்|பாலைவனங்கள்]], பனிமூடிய துருவப் பகுதிகளையும் கொண்டது. செவ்வாயின் [[சுழற்சிக்காலம்|சுழற்சிக்காலமும்]], பருவ மாற்றங்களும் புவிக்கு உள்ளதைப் போன்றவையே. [[சூரிய மண்டலம்|சூரிய மண்டலத்துள்]] மிக உயரமான [[ஒலிம்பசு மலை]]யும், மிகப்பெரிய செங்குத்துப் பள்ளத்தாக்குகளுள் ஒன்றான [[மரினர் பள்ளத்தாக்கு]]ம் செவ்வாயிலேயே உள்ளன.
 
1965 ஆம் ஆண்டில் செவ்வாய்க்கு அண்மையாக [[மரினர் 4]] வெற்றிகரமாகப் பறந்து செல்லும்வரை, செவ்வாய்க் கோளின் மேற்பரப்பில் நீர்ம நீர் இருக்கும் என நம்பினர். கோளின் துருவப் பகுதிகளுக்கு அருகில் குறித்த கால அடிப்படையில் மாற்றம் அடைகின்ற கறுப்பு, வெள்ளை அடையாளங்களே இவ்வாறான நம்பிக்கைக்குக் காரணமாக இருந்தன. இவை [[கடல்]]களும், [[கண்டம்|கண்டங்களுமாக]] இருக்கலாம் என எண்ணினர். மேற்பரப்பில் காணப்பட்ட நீண்ட கருமையான கீறல்கள் நீர்ப்பாசனக் கால்வாய்களாக இருக்கலாம் என்றும் கருதப்பட்டது. பின்னர் இதை ஒரு [[ஒளியியல் மாயத்தோற்றம்]] என விளக்கினர். ஆனாலும், ஆளில்லாப் பயணங்களின் மூலம் திரட்டப்பட்ட நிலவியற் சான்றுகள், ஒரு காலத்தில் செவ்வாயில் பெருமளவு நீர் இருந்தது என்பதைக் காட்டுகின்றன.<ref name="marswater" />
 
இது, [[போபோசு (சந்திரன்)|போபோசு]], [[டெய்மோசு (சந்திரன்)|டெய்மோசு]] என்னும் இரண்டு நிலவுகளைக் கொண்டுள்ளது. இவை சிறிய, ஒழுங்கற்ற வடிவம் கொண்டவை. செவ்வாயின் டிரோசான் சிறுகோளான 5261 யுரேக்காவைப்போல் இவை செவ்வாயின் ஈர்ப்பினால் கவரப்பட்ட சிறுகோள்களாக இருக்கலாம்.
வரிசை 78:
 
===மண்===
பீனிக்சு இறங்குகலம் அனுப்பிய தகவல்கள், செவ்வாயின் மண் [[காரத்தன்மை]] கொண்டது எனவும், [[மக்னீசியம்]], [[சோடியம்]], [[பொட்டாசியம்]], [[குளோரைடு]] போன்ற தனிமங்களைக் கொண்டது எனவும் காட்டுகின்றன. புவியிலுள்ள தோட்டங்களில் காணப்படும் இவை தாவர வளர்ச்சிக்கு இன்றியமையாதவை. இறங்குகலச் சோதனைகளின் படி மண் பி.எச் 8.3 கொண்டதுடன், பேர்குளோரேட்டு உப்புக்களையும் கொண்டது எனத் தெரிகிறது.
 
செவ்வாயில் கீறல்கள் பொதுவாகக் காணப்படுவதுடன், கிண்ணக்குழிகள், பள்ளத்தாக்குகள் என்பவற்றின் சரிவுகளில் புதிய கீறல்களும் தோன்றுகின்றன. முதலில் கடுமையான நிறத்துடன் காணப்படும் இக் கீறல்கள் காலம் செல்லச் செல்ல மங்கலான நிறத்தை அடைகின்றன. சில வேளைகளில் சிறியனவாகத் தோன்றும் இக் கீறல்கள் பின்னர் பல நூறு மீட்டர்களுக்கு விரிவடைகின்றன. இக்கீறல்கள் தமது பாதையில் காணும் பாறைகள், பிற தடைகள் போன்றவற்றின் விளிம்போடு செல்வதையும் காண முடிகிறது.
வரிசை 88:
 
== செவ்வாயின் தட்பவெப்பம் ==
செவ்வாயின் மேற்பரப்பின் வெப்பநிலை +27 முதல் -126 டிகிரி வரை உள்ளது. (பூமியில் +58 முதல் -88.3 வரை). ஆனால் சூரியனிடமிருந்து பூமியை விட தூரத்திலிருப்பதால் சராசரி வெப்பநிலை -48 டிகிரி சென்டிகிரேடு. இதனுடைய காற்று மண்டலம் மிகவும் மெல்லியது, பெரும்பாலும் கார்பன்-டை-ஆக்ஸைடு கொண்டது. டெலஸ்கோப்பில் பார்த்தால் மிகச் சிவப்பாகத் தெரியும். அதனால் தான் செவ்வாய் என்றும் ஆங்கிலத்தில் the red planet என்றும் அழைக்கப்படுகிறது. ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் பூமியைப் போன்றே துருவங்கள் பனிப்பிரதேசங்களாக இருப்பது தான். இங்கு ஐஸ் என்பது பெரும்பாலும் 'ட்ரை ஐஸ்' எனப்படும் கார்பன்-டை-ஆக்ஸைடு தான்.
 
== பீகிள்2 - பிரிட்டனின் செவ்வாய் பயணம் ==
ஏற்கனவே 1997ம் ஆண்டு அமெரிக்காவின் பாத்ஃபைண்டர் வாகனம் செவ்வாயில் இறக்கிவிடப்பட்டுள்ளது. பிரிட்டனின் பீகிள்2 வாகனம், செவ்வாயில் பழமையான குன்றுகளுக்கும், வடக்கு சமவெளிக்கும் இடைப்பட்ட 'இசிடிஸ் ப்ளானிட்டியா' என்ற சமதளப் பிரதேசத்தில் இறக்கிவிட ஐரோப்பிய வான்வெளி ஏஜன்சி (ESA) டிசம்பர் 2000ல் நடத்திய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
 
பீகிள்2வை ESAவின் 'மார்ஸ் எக்ஸ்பிரஸ்' என்கிற ராக்கெட் ஜூன் 2003ல் கஜகஸ்தானில் உள்ள (ரஷ்ய) பைக்கானூர் காஸ்மோடிரோம் தளத்தில் இருந்து ஏவப்படும்.
 
பீகிள்2-வின் குறிக்கோள் செவ்வாயில் உயிர்கள் இருக்கின்றதா அல்லது எப்போதாவது இருந்ததா? என்ற கேள்விக்கு முடிவான விடை காண்பதே. அதற்கு 'இசிடிஸ் ப்ளாண்டியா' தான் மிகச் சிறந்த இடம், முன்பு எப்போதாவது செவ்வாயில் உயிர்கள் இருந்தால் அதன் பாஸில்கள் கிடைக்க இங்கு அருமையான வாய்ப்பு உள்ளது என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.
 
பீகிள்2 செவ்வாயில் பாதுகாப்பாக தரையிறங்க 'ஏர் பேக்குகள்' உபயோகிக்கப்படும். செவ்வாயில் தரையில் படும் போது இந்த ஏர் பேக்குகள் பந்து போல் எம்பி விழுந்து நிலைத்து நின்ற பின் அதனுள் இருக்கும் வாயு வெளியேற்றப்பட்டு வாகனம் சேதமின்றி வெளிவரும்.
 
== ரோவர் - அமெரிக்காவின் மற்றொரு செவ்வாய் ஆய்வுத் திட்டம் ==
பீகிள்2 திட்டம் ஒரு புறமிருக்க, அமெரிக்கா இரண்டு ரோபோட்களை 2004ம் ஆண்டு செவ்வாயில் இறக்கிவிடத் திட்டமிட்டுள்ளது. இந்த இரண்டு 'ரோவர்'களுமே முக்காலத்தில் அங்கு நீர், அதாவது திரவ வடிவில் நீர் ஆதாரங்களைத் தேடும் உபகரணங்களைப் பெற்றிருக்கும்.
 
திரவ வடிவில் நீரென்றால் அது நிச்சயம் 0 - 100 டிகிரிக்குள் தான் இருக்க முடியும். மேலும் நீரில் ஆக்ஸிஜனும் இருக்குமென்பதால் அதில் உயிர்கள் (ஒரு செல் உயிர்கள், பாக்டீரியாக்கள் முதல் பல வித உயிரினங்கள்) உண்டாகி வாழந்திருக்ககூடிய சாத்தியங்கள் அதிகமாக உண்டு. பூமியில் உயிரினம் முதன்முதலில் தோன்றியதே நீரில் தான் என்று நம்பப்படுகிறது.
 
செவ்வாயில் தரையிறங்க வாய்ப்பான 185 இடங்கள் பட்டியலில் தொடங்கி தற்போது 30 மிக முக்கியமான இடங்கள் பட்டியலாகக் குறுக்கப்பட்டுள்ளது. இதில் சேதமின்றித் தரையிறங்க வாய்ப்பான இடம் என்பதை விட விஞ்ஞான ரீதியாக சான்றுகள் கிடைக்க வாய்ப்பான இடம் என்பதற்குத்தான் முக்கியத்துவம் அளிப்பதாக வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். ஏவுவதற்கு ஒரு வருடம் முன்பாக இறங்கும் இடம் பற்றி இறுதி முடிவு எடுக்கப்படும்.
 
தற்போது செவ்வாயைச் சுற்றிக் கொண்டிருக்கும் 'மார்ஸ் க்ளோபல் சர்வேயர்' எனும் விண்கலம் அனுப்பும் தகவல்கள் இதற்கு மிகவும் உதவிகரமாக இருப்பதாகள் அமெரிக்க விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
 
== ரோவர் பயணத் திட்டங்கள் ==
[[படிமம்:MarsSunsetCut.jpg|thumb|center|700px|செவ்வாயின் குசேவ் கிரேட்டர் எனுமிடத்திலிருந்து எடுக்கப்பட்டச் சூரிய மறைவுக் காட்சி. மே 19, 2005.]]
அமெரிக்காவில் ப்ளோரிடா மாகாணத்தில் கேப் காணவெரல் தளத்திலிருந்து முதல் ரோவர் ரோபோட் மே 30, 2003 லும், இரண்டாவது அதே வருடம் ஜூன் 27லிலும் ஏவப்படும். செவ்வாயில் முறையே 2004ம் ஆண்டு ஜனவரி 4ம் தேதியிலும், பெப்ரவரி 8ம் தேதியிலும் தரையிறங்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ரோவர்கள் தற்போது MER-A மற்றும் MER-B என்றும் அழைக்கப்படுகிறது. (MER - Mars Exploration Rover).
 
இரண்டு ரோவர்களும் ஒரு செவ்வாய் தினத்திற்கு (24.62 மணிகள்) 100 மீட்டர் தூரம் வரை பயணம் செய்யும். ஆரோக்கியம் நல்லபடியாக இருந்தால் இவை 2004 ஏப்ரல் மாதத்தைத் தாண்டிக் கூட வேலை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வரிசை 132:
* [http://www.thamilworld.com/forum/index.php?showtopic=1533 நிலா முற்ற கட்டுரை]
 
{{வார்ப்புரு:கோள்கள்}}
 
{{வார்ப்புரு:கோள்கள்}}
 
[[பகுப்பு:குறுங்கட்டுரைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/செவ்வாய்_(கோள்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது