குவார்ட்சு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 68 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 118:
 
== தயாரிப்பில் இணைப்பு முறையும் செயற்கை முறையும் ==
[[படிமம்:SyntheticQuartz quartz crystalsynthese.jpg|thumb|கொதிநீர் முறை (Hydrothermal method) மூலம் வளர்த்தெடுக்கப்பட்ட 19 செ.மீ. நீளமும் 127 கிராம் எடையும் கொண்ட செயற்கைக் குவார்ட்சு]]
அனைத்து குவார்ட்சு வகைகளும் இயற்கையில் கிடைப்பதில்லை. ஒளிகசியும் புதினா பச்சை (அல்லது ஆலிவ்) நிற பொருளான [[பிரசியோலைட்டு]] வெப்ப முறை மூலம் உற்பத்திசெய்யப்படுகிறது, மேலும் இயற்கைப் பிரசியோலைட்டு 1950 முதல் பிரேசில் நாட்டில் இருந்து கிடைத்து வந்தது, இப்பொழுது [[போலந்து]] நாட்டின் சிலெசியா (Silesia) என்ற இடத்தில் இருந்தும், கனடாவில் தண்டர்பே என்னும் இடத்தில் இருந்தும் கிடைக்கின்றது <ref name=Page>{{cite web |url=http://www.quartzpage.de/prasiolite.html |title=Prasiolite |publisher=quarzpage.de |date=last modified 28 October 2009 |accessdate=28 November 2010}}</ref>. மேலும் சிட்ரின் இயற்கையில் கிடைத்தாலும், பெரும்பான்மையாக வெப்பப்படுத்தப்பட்ட செவ்வந்திக்கல்லே சிட்ரின் எனப்படுகிறது. கார்னெலியன் (Carnelian) அதன் நிறம் அடர்வாகும் வகையில் சூடுபடுத்தப்படுகிறது.
 
இயற்கைக் குவார்ட்சு எப்போதும் பளிங்கிருமையாதல் (crystal twinning) என்னும் படிகப் பிழை கொண்டிருக்கும். எனவே தொழிலகங்களில் பயன்படுத்தப்படும் பல குவார்ட்சு வகைகள் செயற்கையாக உற்பத்தி செய்யப்பட்ட பெரிய, குறையில்லாத, பளிங்கிருமையாகாப் படிகங்கள் ஆகும்.
 
==குவார்ட்சின் பயன்பாடுகள்==
குவார்ட்சு சிலிக்கான் ஆக்சைடு என்பதால் பற்பல [[சிலிக்கான்]] சேர்மங்கள் உருவாக்கத்தில் பயன்படுகின்றது. ஒருங்கிணைத்த சிலிக்கான் தொகுப்புச் சுற்றுகள் (IC) செய்யத் தேவையான அடிப்படை சிலிக்கான் சில்லுகளைச் (silicon wafers) செய்வதில் இதன் பயன் இல்லாவிடினும் அவற்றைச் செய்யப் பயன்படும் பல உயர்வெப்பநிலை உலைகளில் இது குழாய்களாகப் பயன்படுகின்றது. சிலிக்கோன் என்னும் [[பல்லுறுப்பி|பலபடி]] செய்யவும் பயன்படுகின்றது. உயர் வெப்பநிலையை நிலைமைப் பண்புடன் தாங்கும் என்பதால் பல தொழிலகங்களில் உராய்வுப்பொருளாகவும் (abrasive), உரு வடிப்பு அச்சுகளாகவும், [[சுட்டாங்கல் (பீங்கான்)|சுட்டாங்கல்]] (Ceramics), [[பைஞ்சுதை]] (cement) செய்வதில் பயன்படுகின்றது.<ref name=Ullmann>Otto W. Flörke et al. Silica" in Ullmann's Encyclopedia of Industrial Chemistry,, 2008, Wiley-VCH, Weinheim. {{DOI|10.1002/14356007.a23_583.pub3}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/குவார்ட்சு" இலிருந்து மீள்விக்கப்பட்டது