பிரித்தானியப் பேரரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இங்கு [[d:q...
சிNo edit summary
வரிசை 1:
[[படிமம்:British Empire 1897.jpg|thumb|300px|right|1897 ஆம் ஆண்டில் பிரித்தானியப் பேரரசு]]
[[படிமம்:BritishEmpire1919.png |thumb|300px|பிரித்தானியப் பேரரசினதும் அதன் செல்வாக்குப் பகுதிகளினதும் நிலப்படம்]]
'''பிரித்தானியப் பேரரசு''' (''British Empire'') உலக வரலாற்றில் இருந்த [[பேரரசு]]கள் அனைத்திலும் பெரியது ஆகும்.<ref>{{Cite book |last=Ferguson |first=Niall |year=2004 |title=Empire, The rise and demise of the British world order and the lessons for global power |publisher=Basic Books |isbn=0-465-02328-2}}</ref> ஒரு [[நூற்றாண்டு]]க்கும் மேலாக உலகின் முதன்மையான [[வல்லரசு|வல்லரசாகத்]] திகழ்ந்தது. ஐரோப்பியக் [[குடியேற்றவாதம்|குடியேற்றவாதப்]] பேரரசுகளைத் தோற்றுவித்த [[15ம் நூற்றாண்டு|15]] ஆம் நூற்றாண்டின் புத்தாய்வுக் கடற் பயணங்களுடன் தொடங்கிய [[கண்டுபிடிப்புக் காலம்|கண்டுபிடிப்புக் காலத்தின்]] விளைவாக இது உருவாகியது. [[1921]] ஆம் ஆண்டளவில் பிரித்தானியப் பேரரசு உலகின் 458 [[மில்லியன்]] மக்களை உள்ளடக்கியதாக இருந்தது. இது அக்காலத்தின் உலக [[மக்கள்தொகை]]யின் காற்பங்கு ஆகும். 33 மில்லியன் [[சதுர கிலோமீட்டர்]] (13 மில்லியன் [[சதுர மைல்]]) பரப்பளவைக் கொண்டிருந்த இப்பேரரசு உலக மொத்த நிலப்பரப்பிலும் காற்பங்கைத் தன்னுள் அடக்கியிருந்தது. இதனால் இதன் மொழி மற்றும் பண்பாட்டுப் பரவல் உலகம் தழுவியதாக இருந்தது. இது உயர் நிலையில் இருந்தபோது, இதன் ஆட்சிப்பரப்பு புவிக் கோளத்தில் எல்லாப் பகுதிகளிலும் பரவி இருந்ததனால், "பிரித்தானியப் பேரரசில் சூரியன் மறைவதில்லை" என்று சொல்லப்பட்டது.
 
 
[[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப் போரைத்]] தொடர்ந்து வந்த ஐந்து பத்தாண்டுகளில் இப் பேரரசுக்குள் அடங்கியிருந்த பல நாடுகள் [[விடுதலை]] அடைந்தன. இவற்றுட் பல விடுதலையடைந்த பிரித்தானியப் பேரரசு நாடுகளின் [[பொதுநலவாய நாடுகள்]] குழுவில் சேர்ந்து கொண்டன. சில நாடுகள் பிரித்தானியப் பேரரசர் / பேரரசியையே தமது நாடுகளின் தலைவராகவும் ஏற்றுக்கொண்டிருந்தன.
 
 
== தொடக்கம் (1497-1583) ==
வரி 38 ⟶ 36:
 
1700ல் [[ஸ்பெயினின் இரண்டாம் சார்லஸ்]] இறந்தபின் ஸ்பெயினும், அதன் குடியேற்ற நாடுகளும் பிரான்ஸ் அரசனின் பேரனான [[அஞ்சுவின் பிலிப்பே]]யின் கைக்கு வந்தபோது, பிரான்சும், ஸ்பெயினும் அவற்றில் குடியேற்ற நாடுகளும் ஒன்றிணையக்கூடிய சாத்தியம் ஏற்பட்டது. இது, இங்கிலாந்துக்கும், ஐரோப்பாவிலுள்ள ஏனைய நாடுகளுக்கும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விடயமாக இருந்தது. 1701ல், பிரித்தானியா, [[போர்த்துக்கல்]], நெதர்லாந்து ஆகிய நாடுகள், [[புனித ரோமப் பேரரசு]]டன் சேர்ந்து கொண்டு, பிரான்சுக்கும், ஸ்பெயினுக்கும் எதிரான [[எசுப்பானிய வாரிசுரிமைப் போர்|எசுப்பானிய வாரிசுரிமைப் போரில்]] ஈடுபட்டன. இது 1714 ஆம் ஆண்டுவரை நீடித்தது. போரின் இறுதியில் செய்துகொள்ளப்பட்ட [[உட்ரெக்ட் ஒப்பந்தம்]] என்னும் ஒப்பந்தப்படி, பிலிப் தனதும் தனது வாரிசுகளும் பிரான்சின் அரசுக்கு உரிமை கோருவதில்லை என ஏற்றுக்கொண்டார். அத்துடன், ஸ்பெயின் தனது ஐரோப்பியப் பேரரசையும் இழந்தது.
 
==உசாத்துணை==
{{Reflist}}
 
[[பகுப்பு:பிரித்தானியப் பேரரசு| ]]
"https://ta.wikipedia.org/wiki/பிரித்தானியப்_பேரரசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது