ஞான யோகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 6:
* இந்த ஆத்ம ஞானத்தை அடையும் வழிமுறைகளில் இரண்டு வழிகள் கூறப்பட்டுள்ளது. ஒன்று ஞான சாதனை. இரண்டாவது யோக சாதனை. ஞானத்திற்கான சாதனை அடைய இரண்டு வழிகள் உள்ளது. ஒன்று, [[வேதாந்தம்| வேதாந்த]] சாத்திரங்களை கேட்டல், கேட்டவைகளை அறிவினால் விசாரித்து ஆராய்ந்து சிந்தித்து தெளிவடைவதே ஞானம்.
 
 
* இரண்டு, (ஆத்ம) ஞானம் என்பது “நான்” என்ற என்ற சொல்லினை விசாரித்து அறிந்து கொள்வதே ’ஞானம்’ என்பர்.
 
 
==ஞானத்தை (அறிவை) ஏழு வகையாக பிரிக்கலாம்==
 
1. விவேக புத்தி: ஒன்றின் பொருளைப் பிரித்து அறிந்து கொள்ளும் தன்மையே அறிவே. எடுத்துக்காட்டாக, இது தர்மம்-இது அதர்மம், இது உண்மை-இது பொய், இது நல்லது-இது கெட்ட்து, இது நன்மை-இது இன்பம், இது அழிவற்றது- இது நிலையானது என்று அறிவினால் பிரித்துப் பார்த்து தெரிந்து கொள்வதே ஞானம் ஆகும். இதனை விவேக புத்தி என்பர்.
 
 
2. வினிச்சய புத்தி: ஒன்றை நன்கு பிரித்துப் பார்க்கும் விவேக புத்தி இருந்தும், அந்த அறிவில் உறுதி இல்லை எனில் அதற்கு வினிர்ச்சய புத்தி என்பர்.
 
 
3. விசுத்த புத்தி: மனத்தூய்மை, கபடமற்ற குணம் மற்றவர்களை ஏமாற்றாத மனம் உடையவர்களை விசுத்த புத்தி உடையவர்கள் என்பர்.
 
 
4. விசால புத்தி: பரந்த மனதை உடையவர்கள், பிறர் பொருளில் ஆசை கொள்ளாதிருத்தல்; அதே நேரத்தில் நமது பொருளை பிறருடன் பகிர்ந்து கொள்வது விசாலபுத்தி என்பர்.
 
5. நிச்சல புத்தி: ஒன்றிலெ நமது மனதை பொருத்திப் பழகும் தன்மையை உறுதியானபுத்தி அல்லது நிச்சல புத்தி என்பர்.
 
 
6. திட புத்தி: துன்பங்கள், துயரங்கள், நட்டங்கள் வரும் போது அதனை தாங்கிக் கொள்ளும் உறுதியான மனம் தேவை. அத்தகைய மனதிற்கு திட புத்தி என்பர்.
 
 
7. ஜாக்கிரத்புத்தி: விழிப்புணர்வுடன் கூடியதாக இருக்கும் மனம் அல்லது அறிவு அல்லது புத்தியை விழிப்புநிலை புத்தி என்பர்.
 
 
==யோகம் என்பதின் பொருள்==
 
யோகத்தை ’ '''மனதின் அமைதி''' ’ என்றும், ’ மனதை சத்வ குணத்திற்கு மாற்றி அமைத்தல் ’ என்றும், நமது எண்ணங்களின் அமைதியே யோகம் என்றும், அலைபாயும் மனதை நமது மனதின் கட்டுப்பாட்டில் நிலை நிறுத்தும் செயல்களுக்கு யோகம் என்பர்.
 
 
சுகம்-துக்கம் போன்ற இருமைகளை சந்திக்கும் போது அதனை தாங்கிக் கொள்ளும் திறன் நமக்குத் தேவை. நமது மனம் சாத்வீக குணத்தில் நிலையில் நிலை நிறுத்த வேண்டும். மனம் நமது கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். இப்படிப்பட்ட நற்குணங்களில் நமது மனதை நிலை நிறுத்த செய்தலே ’யோகம்’ என்பர்.
 
 
==யோகத்தை அடையும் வழிகள்==
 
 
சத்வ குணத்தில் மனதை நிலை நிறுத்த வேண்டும். பதஞ்சலி முனிவர் தனது யோக சூத்திரத்தில், தியானம் எனும் தொடர் பயிற்சியாலும், வைராக்கியத்தாலும் மட்டுமே மனதை நம் கட்டுக்குள் வரமுடியும் என வழியுறுத்துகிறார். வைராக்கியம் எனில் உலக இன்பங்களில் ஆசைப்பட்டு அதற்கு அடிமையாக இல்லாமல் இருப்பதே. வைராக்கியத்தை அடைந்தாலே, மன ஒருமுகப்பாடு, மனத்தூய்மை, புலனடக்கம், மனவடக்கம், அகிம்சை, பொறுமை, தவம், தவம், தியாகம் ஆகிய சாதனைகளால் யோகத்தை எளிதாக அடைய முடியும்.
 
 
==மனம் வைராக்கியம் அடைவதற்கான வழிகள்==
 
 
மனப்பக்குவமே வைராக்கியம் என்பர். தவத்தாலேயே வைராக்கியத்தை அடைய முடியும். அந்த மனதுடன் ஆத்மஞானத்தை அறிந்தால் சீவன் முக்தி எனும் மோட்சம் உறுதியாக கிடைக்கும். ஒரு பெருந் துயரத்தை கடக்க சிறிய கஷ்டங்களை தாங்கிக் கொள்ள நம் மனம் பழகிக் கொள்ள வேண்டும். தவத்தின் மூலம் யோகத்தை அடைந்து மனதை நம் கட்டுக்குள் கொண்டு வரவேண்டும்.
 
உடல் அளவில் செய்யும் [[யோகாசனம்]] எனும் தவத்தால் சோம்பல் நீக்கப்படுகிறது. மேலும் உடல் தூய்மை, சமூகப் பணி, குரு சேவை ஆகியவற்றால் சரணாகதி எனும் பணிவு குணங்களினால் நம்மை நாம் மனதை தூய்மைப்படுத்திக் கொண்டு மன வைராக்கியம் அடையலாம்.
 
"https://ta.wikipedia.org/wiki/ஞான_யோகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது