கல்பதுக்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 6:
 
==சங்ககாலப் பதுக்கைகள்==
சங்கத்தமிழ் ஆக்கங்களான அகநானூறு, புறநானூறு, ஐங்குறுநூறு போன்றவற்றில் அக்காலத்துப் பதுக்கைகள் குறித்த குறிப்புக்கள் உள்ளன. அக்காலத்தில் பாலை நிலத்தின் வழியே செல்லும் வழிப்போக்கர்களைக் கொன்று பொருள் பறிக்கும் மறவர்கள், அவ்வாறு கொல்லப்பட்டோரின் உடல்களின் மீது தழைகளைப் போட்டு மூடிக் கற்களையும் குவித்து மேடு செய்து வைப்பர்.<ref>கேசவராஜ், வெ., 2008. பக். 84</ref> பாலை நிலத்தினூடு செல்லும் பாதைகளின் மருங்கில் காணப்படும் இவ்வாறான பதுக்கைகளின் அச்சம் ஊட்டும் வருணனைகளைச் சங்கப் பாடல்கள் தருகின்றன. நரிகள் போன்ற காட்டு விலங்குகள் சிதைக்காமல் இருப்பதற்காகவும், பிணங்கள் எழுந்துவரக்கூடும் என்ற நம்பிக்கையினால், அவ்வாறு நடப்பதைத் தவிர்ப்பதற்குமாகவே தொடக்க காலங்களில் பிணங்களையோ, அவை புதைக்கப்பட்ட இடங்களையோ கற்கள் போட்டு மூடினர் என்கின்றனர்.<ref>கேசவராஜ், வெ., 2008. பக். 28</ref> இவ்வாறான ஒர் தொடக்க நிலையையே சங்கப் பாடல்கள் எடுத்துக் காட்டுகின்றன.
 
==குறிப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/கல்பதுக்கை" இலிருந்து மீள்விக்கப்பட்டது