நூலகவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 4:
 
நூலகவியல் என்னும் துறை இன்று நூலகமும் தகவல் விஞ்ஞானமும் என்று அழைக்கப்படுகின்றது.<ref>[[தூவி பதின்ம வகைப்பாடு]] (DDC) 1876ல் வெளியிடப்பட்ட அதன் முதலாவது பதிப்பில் அதன் 19 ஆவது வகுப்பிற்கு "நூலகப் பொருளியல்" என்று பெயரிட்டிருந்தது. 2வது பதிப்பில் அது வகுப்பு 20க்கு நகர்த்தப்பட்டது. எனினும் "நூலகப் பொருளியல்" என்னும் பெயர் 14வது பதிப்புவரை (1942) மாறாமல் இருந்தது. 15வது பதிப்பில் (1951) இப்பெயர் "நூலக அறிவியல்" என மாற்றப்பட்டு 17வது பதிப்புவரை (1965) பயன்படுத்தப்பட்டது. 18வது பதிப்பில் (1971)இவ்வகுப்பு "நூலகமும் தகவல் அறிவியலும்" எனப் பெயர் மாற்றம் பெற்றது.</ref> இது, நூலகவியலானது தகவல்களைத் திரட்டாக கொண்ட ஆவணங்களுடன் தொடர்புபட்டது என்பதையும் தகவல் மூலங்கள், தகவல் ஒழுங்கமைப்பு, பரிமாற்றம் என்பவற்றுடன் தொடர்புபட்டது என்பதையும் விளக்குவதாக அமைகின்றது.
 
==வரலாறு==
1627 ஆம் ஆண்டில், [[பிரான்சு]] நாட்டைச் சேர்ந்த [[கபிரியேல் நோடே]] (Gabriel Naudé) என்பவர் நூலக அறிவியல் தொடர்பான முதல் [[பாடநூல்|பாடநூலான]] ''நூலகம் அமைப்பதற்கான ஆலோசனைகள்'' ''(Advice on Establishing a Library)'' என்னும் நூலை எழுதினார். ஒரு நூலகரும் அறிஞருமான இவர் [[அரசியல்]], [[சமயம்]], [[வரலாறு]], [[மீவியற்கை]] போன்ற பல்வேறு துறைகளையும் சார்ந்த பல நூல்களை எழுதியுள்ளார். [[கார்தினல் யூல்சு மாசரின்]] நூலகத்தை அமைத்து நடத்துவதற்கான வாய்ப்பு அவருக்குக் கிடைத்தபோது, தனது நூலில் உள்ளடக்கிய எண்ணங்களைச் செயல்படுத்தினார்.
 
19 ஆம் நூற்றாண்டில் 1808 - 1829 காலப்பகுதியில், [[மார்ட்டின் சிரெட்டிங்கர்]] (Martin Schrettinger) என்பவர் எழுதிய, இத்துறை சார்ந்த இரண்டாவது பாடநூல் வெளியானது. இதே நூற்றாண்டில், தாமசு செபர்சன் () என்பவர் ஆயிரக் கணக்கான நூல்களைக் கொண்டிருந்த தனது நூலகத்துக்காகப் புதிய வகைப்பாட்டு முறை ஒன்றை உருவாக்கினார். இது, துறைவாரி ஒழுங்கை அடிப்படையாகக் கொண்ட [[பேக்கோனிய முறை]]யைத் தழுவியது. இதற்கு முன்னர் அகர வரிசை அடிப்படையிலேயே நூல்கள் ஒழுங்குபடுத்தப்பட்டன. செபர்சனின் சேகரிப்புக்களே தற்போது [[காங்கிரசு நூலகம்]] எனப்படுவதன் தொடக்கம் ஆகும். 1887 ஆம் ஆண்டு சனவரி 1 ஆம் நாள் அமெரிக்காவின் முதல் நூலகவியலுக்கான கல்வி நிறுவனம், ''நூலகப் பொருளியலுக்கான பள்ளி'' என்னும் பெயரில் தொடக்கப்பட்டது.
 
==குறிப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/நூலகவியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது