நூலகவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 6:
 
==வரலாறு==
1627 ஆம் ஆண்டில், [[பிரான்சு]] நாட்டைச் சேர்ந்த [[கபிரியேல் நோடே]] (Gabriel Naudé) என்பவர் நூலக அறிவியல் தொடர்பான முதல் [[பாடநூல்|பாடநூலான]] ''நூலகம் அமைப்பதற்கான ஆலோசனைகள்'' ''(Advice on Establishing a Library)'' என்னும் நூலை எழுதினார்.<ref>[http://surface.syr.edu/cgi/viewcontent.cgi?article=1272&context=libassoc Lemke, Antje Bultmann, "Gabriel Naude and the Ideal Library" (1991). Library Associates. Paper 280. பக்.29]</ref> ஒரு நூலகரும் அறிஞருமான இவர் [[அரசியல்]], [[சமயம்]], [[வரலாறு]], [[மீவியற்கை]] போன்ற பல்வேறு துறைகளையும் சார்ந்த பல நூல்களை எழுதியுள்ளார். [[கார்தினல் யூல்சு மாசரின்]] நூலகத்தை அமைத்து நடத்துவதற்கான வாய்ப்பு அவருக்குக் கிடைத்தபோது, தனது நூலில் உள்ளடக்கிய எண்ணங்களைச் செயல்படுத்தினார்.
 
19 ஆம் நூற்றாண்டில் 1808 - 1829 காலப்பகுதியில், [[மார்ட்டின் சிரெட்டிங்கர்]] (Martin Schrettinger) என்பவர் எழுதிய, இத்துறை சார்ந்த இரண்டாவது பாடநூல் வெளியானது. இதே நூற்றாண்டில், [[தாமசு செபர்சன்]] (Thomas Jefferson) ஆயிரக் கணக்கான நூல்களைக் கொண்டிருந்த தனது நூலகத்துக்காகப் புதிய வகைப்பாட்டு முறை ஒன்றை உருவாக்கினார். இது, துறைவாரி ஒழுங்கை அடிப்படையாகக் கொண்ட [[பேக்கோனிய முறை]]யைத் தழுவியது. இதற்கு முன்னர் அகர வரிசை அடிப்படையிலேயே நூல்கள் ஒழுங்குபடுத்தப்பட்டன. செபர்சனின் சேகரிப்புக்களே தற்போது [[காங்கிரசு நூலகம்]] எனப்படுவதன் தொடக்கம் ஆகும். 1887 ஆம் ஆண்டு சனவரி 1 ஆம் நாள் அமெரிக்காவின் முதல் நூலகவியலுக்கான கல்வி நிறுவனம், ''நூலகப் பொருளியலுக்கான பள்ளி'' என்னும் பெயரில் தொடக்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/நூலகவியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது