எருமை (கால்நடை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎எருமைப்பால்: + ===பால் சுரப்பைத் தூண்டுதல்===
வரிசை 33:
 
===பால் சுரப்பைத் தூண்டுதல்===
கன்றை சிறிது நேரம் பால் ஊட்ட விடுவதன் மூலமோ அல்லது கையினால் காம்பினைத் தடவி விட்டோ காம்பானது பால் சுரப்பிற்குத் தூண்டிவிடப்படுகிறது. ஏனெனில் இவ்வாறு காம்பைத் தடவி விடுவதால் மடியின் கீழேயுள்ள ஆக்ஸிடோசின் ஹார்மோனைச் சுரக்கும் நாளங்கள் தூண்டப்பட்டு, பால் சுரப்பு அதிகரிக்கிறது. இந்த ஹார்மோன் ஆனது இரத்தத்தின் வழியாக மெமரி (Memory) சுரப்பிற்குக் கடத்தப்படுகிறது. ஏனெனில் ஹார்மோனும், நரம்பு நாளங்களும் பாலை வெளித் தள்ளுவதில் ஈடுபடுகின்றன. எனவே இவை நரம்பு ‘உட்சுரப்பு செயல்’ எனப்படுகிறது. ஆக்ஸிடோசின் ஆல்வியோலை குழாயை சுருங்கி விரியச்செய்கிறது. இதனால் குழாயிலுள்ள [[பால்]] வெளித்தள்ளப்பட்டு காம்பை வந்தடைகிறது.
 
இவ்வாறு அல்வியோலை வழியே வரும் பால் சுரப்பு குறைவாகவே இருக்கும். கன்று பாலூட்டும் போது மடியில் முட்டி மோதும் போதும், கையினால் மசாஜ் செய்வது போல் தடவும் போதும் இந்த ஹார்மோன் சுரப்பு அதிகமாக இருக்கும். அப்போது தான் பால் சுரப்பும் அதிகரிக்கும்.மேலும் கால்நடைகளில் பால்கறப்பதற்கு முன்பு அடர் தீவனமளிப்பது பால் சுரப்பையும், பால் தரும் நேரத்தையும் அதிகரிப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
 
=== பால் சுரப்பு தடைபடுதல் ===
எருமைகள் பொதுவாகவே [[சுற்றுச்சூழல்]] மாற்றத்தைப் பொறுத்து எளிதில் பாதிப்படையக்கூடியவை. இவை பயந்தாலோ, ஏதேனும் வலி, மன அழுத்தம் ஏற்பட்டாலோ உடனே பால் சுரப்பு குறையும். ஏனெனில் மேற்கண்ட சூழ்நிலைகளின் போது அட்ரினலின் என்ற ஹார்மோன் சுரக்கும். இது இரத்த நாளங்களைச் சுருங்கச் செய்து மடிக்குச் செல்லும் ஆக்ஸிஜன் அளவைக் குறைக்கிறது. மேலும் இந்த அட்ரினல் ஆனது அல்வியோலையின் மையோஎபிதீலியல் செல்களின் மீது செயல்புரிந்து, அவை ஆக்ஸிடோசினை எடுத்துக் கொள்ள முடியாமல் அடைத்து விடுகிறது. இதனால் பால் சுரப்பு தடைபடுகிறது. எனவே வலி, மனஅழுத்தம் ஏற்படா வண்ணம் எருமைகளை நன்கு கண்காணித்து சிகிச்சை அளித்தல்வேண்டும். பால் கறக்கும் நேரத்தை மாற்றிக் கொண்டே இருத்தல், தவறான கறக்கும் முறையைக் கையாளுதல், பால் கறக்கும் எந்திரத்தை சரியாகப் பொறுத்தாமை போன்றவையும் பால் சுரப்புக் குறைவுக்குக் காரணங்களாகும்.
 
 
"https://ta.wikipedia.org/wiki/எருமை_(கால்நடை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது