தியாகு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + விக்கியாக்கம் செய்யப்பட வேண்டும் using தொடுப்பிணைப்பி
தோழர் தியாகு - வாழ்க்கைக் குறிப்பு
வரிசை 26:
அரசியல் செயல்பாடுகள்:
 
தொடக்கத்திலிருந்தே இந்தியப் பொதுவுடைமை(மார்க்சிய) கட்சியின் ஈழம் சார்ந்த தவறான கொள்கைகளை துணிவுடன் சுட்டிக்காட்டியவர் தோழர் தியாகு. 1989 செப்டம்பர் 11 அன்று, ஈழத்தில் திலீபன் தன் உண்ணாநிலைப் போராட்டத்தைத் துவக்கினார். அவருக்கு ஆதரவாக தோழர் தியாகுவும் சிலரும் சேர்ந்து ”திலீபன் அறிமுக மன்றம்” ஒன்றை ஆரம்பித்தனர். அன்று நடைபெற்ற கூட்டத்தில், தோழர் தியாகு ஈழப் போராட்டத்தைப் பற்றி மக்களிடம் விரிவாக விளக்கினார். ஈழப் போராட்டம் குறித்து தவறான பார்வையை விமர்சிக்கவும் அவர் தயங்கவில்லை. மறுநாள் அவர் இந்தியப் பொதுவுடைமை(மார்க்சிய) கட்சியிலிருந்து அவர் நீக்கப்பட்டார். 1993 இல் சுப. வீரபாண்டியனுடன் இணைந்து தோழர் தியாகு “தமிழ்த் தமிழர் இயக்கம்” துவங்கினார். பின்னாளில் அதிலிருந்து தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் உருவானது.தமிழ்த் தமிழர் இயக்கம், தமிழ்த் தேசியப் பொதுவுடைமைக் கட்சி உள்ளிட்ட நான்கு அமைப்புகள் இணைந்து தமிழ்த் தேசிய முன்னனியை உருவாக்கின. தமிழகத்தின் முக்கியப் பிரச்சினைகளான காவிரி நதிநீர்ப் பங்கீடு, முல்லைப் பெரியாறு உள்ளிட்டவைகளுக்கு வீரியத்துடன் இக்கூட்டமைப்பு முன்னெடுத்த்து. தமிழ்த் தேசிய விடுதலைக் கட்சி உருவானபோது அதன் விடுதலை முழக்கமாக ”சமூகநீதித் தமிழ்த் தேசம்” முன்வைக்கப்பட்டது. சமூக நீதியை உள்ளடக்கிய தமிழ்த் தேசிய அரசியலை முன்னெடுப்பதே இவ்வமைப்பின் நோக்கமாகும்.
 
இனப்படுகொலைக்குப் பின்:
"https://ta.wikipedia.org/wiki/தியாகு" இலிருந்து மீள்விக்கப்பட்டது