வடதிருமுல்லைவாயில் மாசிலாமணீசுவரர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Yokishivam (பேச்சு | பங்களிப்புகள்)
Yokishivam (பேச்சு | பங்களிப்புகள்)
சி *திருத்தம்*
வரிசை 54:
'''வடதிருமுல்லைவாயில்''' - மாசிலாமணீஸ்வரர் கோயில் [[சுந்தரர்]] பாடல் பெற்ற தலமாகும். இது செங்கற்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ளது. இத்தலம் கிருதயுகத்தில் இரத்தினபுரமாகவும், திரேதாயுகத்தில் வில்வவனமாகவும், துவாபரயுகத்தில் சண்பக வனமாகவும், கலியுகத்தில் முல்லைவனமாகவும் விளங்குகிறது என்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).
 
[[படிமம்:மாசிலாமணிkopu.jpeg|thumb|px150|left|இராஜகோபுரம்]]
==தல வரலாறு==
தொண்டை நாட்டில் வடதிசையில் முரடர்களாகிய குறும்பர்கள் '''ஓணன்''', '''வாணன்''' என இருவர் இருந்தனர். அவர்கள் சிறு தெய்வமான வைரவரை வழிபடுபவர்கள், வன்முரையால் மற்றவர்கள் பொருளைச் சேர்த்துக்கொண்டு பெரிய அரண்களைக் கட்டிக்கொண்டு, பொருளை இழந்தவர்கள் தாக்கும் போது இந்த அரண்களில் பதுங்கிக் கொண்டு கொடுமைகள் செய்துவந்தனர். தொண்டை நாட்டைச்சேர்ந்த புழல் கோட்டத்தினுள் நுழைந்து அடிக்கடி மக்களுக்குத் துன்பம் விளைத்து வந்தனர்.