விக்கிப்பீடியா:நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 309:
அவ் அடிப்படையில் மேலே பரிந்துரைத்தவர்கள் பெருமபாலும் பொருத்தமானவர்களாகவே தோன்றுகிறார்கள். சில சிறு தவறுகள் நடந்திருந்தாலும் நாம் அனைவருமே தொடர்ந்து பக்குவமடைதல் போலவே அவர்களும் பக்குவமடைவார்கள் என நம்புகிறேன். இருப்பினும் சிலருக்கு எதிரான வாக்குகளும், முழு ஆதரவில்லாமல் நடுநிலை வாக்குகளும் வந்துள்ளன. அதற்கான முறையான காரணங்களும் முன்வைக்கப்பட்டன. அவர்கள் நேர்மையான விமர்சனங்களை ஏற்குமிடத்தில் அதைக் குறிப்பிட்டு இனி கூடுதல் எச்சரிக்கையுடன் இருப்பதாக உறுதியளிப்பது கருத்திட்டவரையும் பொதுவாக விக்கி சமூகத்தையும் கூடுதல் நமபிக்கை கொள்ளச் செய்யும். பிழையான புரிதலினாலோ, தவறான தகவலின் பேரிலோ எதிர்ப்பு வந்திருந்தால் தக்கவாறு விளக்க வேண்டும். இவ்வாறு கருத்திடுவது சரியோ இல்லையோ என்ற ஐயத்தில் அவர்கள் செய்யாமலிருந்திருக்கலாம். ஆகையால் ஒரு மறுப்பு வாக்காவது வந்திருப்பவர்களின் தேர்வை வேண்டுகோள்களை நீட்டிக்கிறேன். போதுமான காலத்துக்குப்பின் அவர்களின் வேண்டுகோளின்மீது முடிவெடுக்கலாம். மற்றவர்களின் வேண்டுகோள்களைப் பரணிடுகிறேன், அவர்களுக்கான அணுக்கத்தை நாளை செயற்படுத்தலாம். -- [[User:Sundar|சுந்தர்]] <sup>\[[User talk:Sundar|பேச்சு]]</sup> 16:19, 15 அக்டோபர் 2013 (UTC)
 
:சுந்தர், தங்களின் இந்த முடிவு எனக்குச் சரியானதாகத் தோன்றவில்லை. தற்போது இவர்கள் அனைவரும் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருக்கின்றனரா? இவர்களுக்கு எதிர்ப்பு நிலையைக் கடைப்பிடித்தவர்கள் கருத்தை ஆதாரத்துடன் அறிந்து, அதற்குத் தொடர்புடைய பயனர்கள் தன்னிலை விளக்கமளிக்க வாய்ப்பளிக்கப்பட வேண்டும். --[[பயனர்:Theni.M.Subramani|தேனி. மு. சுப்பிரமணி.]]<sup>/[[பயனர் பேச்சு:Theni.M.Subramani|உரையாடுக]]</sup>. 18:16, 15 அக்டோபர் 2013 (UTC)