சிவஞான சித்தியார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி clean up
வரிசை 1:
'''சிவஞான சித்தியார்''' [[சைவ சித்தாந்தம்|சைவ சித்தாந்தக்]] கோட்பாடுகளை விளக்க எழுந்த மெய்கண்ட சாத்திரங்கள் எனப்படும் பதினான்கு நூல்களுள் ஒன்றாகும். [[சிவஞான போதம்|சிவஞான போதத்தின்]] வழி நூலான இதனை இயற்றியவர் [[அருணந்தி சிவாச்சாரியார்]] ஆவார். இவர் சிவஞான போதத்தை இயற்றிய [[மெய்கண்ட தேவர்|மெய்கண்ட தேவரின்]] மாணவன்.
 
பரபக்கம், சுபக்கம் என இரண்டு பகுதிகளைக் கொண்டது இந்த நூல். சைவ சித்தாந்தத்துடன் முரண்படுகின்ற [[புறச்சமயம்|புறச்சமயக்]] கொள்கைகளை மறுத்துச் சித்தாந்தக் கொள்கைகளை நிலை நாட்ட முயல்வதே ''பரபக்கம்'' என்னும் பகுதியின் நோக்கம். ''சுபக்கம்'' சிவஞான போதத்தின் 12 சூத்திரங்களை பன்னிரண்டு அத்தியாயங்களாக விரித்து எழுதப்பட்ட பகுதி. பரபக்கம், 301 பாடல்களாலும், சுபக்கம், 328 பாடல்களாலும் ஆனது.
 
==உசாத்துணைகள்==
* இராசமாணிக்கனார். மா., ''சைவசமய வளர்ச்சி'', பூங்கொடி பதிப்பகம், மயிலாப்பூர், சென்னை, மூன்றாம் பதிப்பு: டிசம்பர் 1999 (முதற்பதிப்பு: 1958)
 
 
==இவற்றையும் பார்க்கவும்==
* [[மெய்கண்ட சாத்திரங்கள்]]
 
{{சைவ நூல்கள்}}
 
[[பகுப்பு:சைவ சித்தாந்த தமிழ் இலக்கியம்]]
[[பகுப்பு:13 ஆம் நூற்றாண்டுத் தமிழ் நூல்கள்]]
 
{{சைவ நூல்கள்}}
"https://ta.wikipedia.org/wiki/சிவஞான_சித்தியார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது