விக்கிப்பீடியா பேச்சு:நிர்வாக அணுக்கத்தைத் திரும்பப் பெறுதல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 135:
:::அவ்வாறே செய்ததற்கும் நல்லெண்ணத்தைக் காட்டும் விளக்கத்தைச் சேர்த்ததற்கும் நன்றி, சூரியா. உங்களைப்போலவே இங்குள்ள பலரும் குறிப்பாக நானும் விக்கியில் கூட்டுழைப்பின் வழியாக நிறையப் பண்பட்டிருக்கிறேன் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன். -- [[User:Sundar|சுந்தர்]] <sup>\[[User talk:Sundar|பேச்சு]]</sup> 07:48, 20 அக்டோபர் 2013 (UTC)
::::இந்தக்கணக்கு இப்போது தடைசெய்யப்பட்டுவிட்டதால் பதிலை எதிர்பார்க்க முடியாது. ஆனால், இவ்வுரையாடலில் இரவி, சூரியா, புருனோ ஆகிய மூவரில் ஒருவர்தான் இராசனின் கணக்கை இயக்குவதாகச் சொல்லப்பட்டுள்ளது. ஆதாரமில்லாமல் இப்படிக் கூறுதல் அவதூறாகும். தேவைப்பட்டால், அக்கருத்துக்கான அடிப்படையை விளக்கி முறையாகக் கைப்பாவை அறிதல் வேண்டுகோள் விடுக்கலாம். அல்லது செல்வா இராசனின் பேச்சுப்பக்கத்தில் கேட்டுள்ளது போல விளக்கம் கோரலாம். ஆனால், இங்கே கைப்பாவைக் கணக்கிலிருந்து ஒரு பொறுப்பற்ற அவதூறு பதியப்பட்டுள்ளது. அதற்கு தேனி மு. சுப்பிரமணி போன்ற நெடுநாள்ப் பங்களிப்பாளர் விருப்பம் தெரிவித்திருப்பது நல்லதல்ல. அதை அவர் விலக்கிக் கொள்ள வேண்டும். நான் கருத்து விடுபாட்டை போற்றுவதால் அழுத்திச் சொல்லவில்லை. அவதூறு நடைபெறாமலும் அதே வேளை கருத்து விடுபாட்டையும் காக்கும் வண்ணம் நடப்பது கம்பிமேல் நடப்பதைப்போலவுள்ளது. அனைவரும் கூடுதல் நல்லெண்ண நம்பிக்கை கொண்டாலொழிய இதற்குத் தீர்வு இல்லை. :( -- [[User:Sundar|சுந்தர்]] <sup>\[[User talk:Sundar|பேச்சு]]</sup> 03:44, 21 அக்டோபர் 2013 (UTC)
 
:சுந்தர், தங்களின் நிலையை என்னால் உணர முடிகிறது. இருப்பினும், தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்டத்தில் தெரிவிக்கப்பட்ட எனது கருத்துகள் குறித்த கருத்து வேறுபாடுகளுக்குப் பின்பு [[விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள்/கூடல்கள்/சென்னை/கருத்துகள்|#தேனி. மு. சுப்பிரமணி 2 - அனைவருக்கும் நன்றி]] எனும் தலைப்பிலான உரையாடல் மூலம் நான் விலகிக் கொள்வதாக அறிவித்த பின்பு, பல பயனர்களின் (தாங்கள் உட்பட) வேண்டுகோளுக்கும், என்னுடன் கனடாவிலிருந்து செல்வாவும், சேலத்திலிருந்து தகவலுழவனும் நீண்ட நேரம் தொலைபேசியின் பேசியதற்கும் மதிப்பளிக்க வேண்டும் என்கிற நிலையில் நான் [[விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள்/கூடல்கள்/சென்னை/கருத்துகள்|# திரும்பப் பெறுகிறேன்]] என்று எனது கருத்தைப் பதிவு செய்த பின்பே அடையாளம் காட்டாமலும், பின்னர் போலியான பயனர் கணக்கைத் தொடங்கியும், பல குற்றச்சாட்டுகளைச் சுமத்தி என்னை மன வேதனைப்படுத்தியிருக்கிறார்கள். என் மீது குற்றம் சுமத்தியவர்கள், விளக்கம் கேட்பவர்கள் உரையாடல்களில் இருந்து அவர்கள் குறிப்பிட்டதைப் போன்று நானும் நூற்றுக்கும் அதிகமான குற்றங்களைக் கண்டறிந்து காட்சிப்படுத்த முடியும். என்னிடம் கேட்கப்பட்ட கேள்விகளில் எவற்றிற்குப் பதிலளிக்க வேண்டுமென்று விரும்பினேனோ அவற்றுக்குப் பதிலளித்து விட்டேன். தமிழ் விக்கிப்பீடியாவில் நான் இனியும் தொடர்வது எனக்கு இழுக்காகவே அமையும் என்றே கருதுகிறேன். தமிழ் விக்கிப்பீடியாவில் எனது நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்துவதற்கு முயற்சித்தவர்களை முதலில் கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள்.
 
[[பயனர்:786haja|786haja]] என்பவரும், இந்தக் கணக்கை இயக்கியவருடனும் எனக்கு எவ்விதத் தொடர்பில்லாவிட்டாலும், இவரின் கருத்து கவனத்தில் கொள்ள வேண்டியாதாக நான் கருதியதாலேயே எனது விருப்பத்தைப் பதிவு செய்தேன். தடை செய்யப்பட்ட கணக்குக்கு விருப்பம் தெரிவித்ததை விலக்கிக் கொள்ள வேண்டும் என்கிற தங்களின் விருப்பத்திற்கேற்ப அதை விலக்கிக் கொள்கிறேன்.--[[பயனர்:Theni.M.Subramani|தேனி. மு. சுப்பிரமணி.]]<sup>/[[பயனர் பேச்சு:Theni.M.Subramani|உரையாடுக]]</sup>. 04:32, 21 அக்டோபர் 2013 (UTC)
 
===சூர்யபிரகாஷ்க்கு அறிவுரை===
Return to the project page "நிர்வாக அணுக்கத்தைத் திரும்பப் பெறுதல்".