ஒளிப்பதிவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

1,282 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
 
1873 ஆம் ஆண்டு யூன் 19 ஆம் தேதி, [[எட்வார்டு முய்பிரிட்சு]] (Eadweard Muybridge) என்பவர், 24 ஒளிப்படக் கருவிகளைப் பயன்படுத்தி "சாலி கார்டினர்" என்னும் பெயர்கொண்ட குதிரை ஓடுவதை வெற்றிகரமாகப் படம்பிடித்தார். ஒளிப்படக் கருவிகள் குதிரை ஓடும் பாதைக்கு இணையாக வரிசையாக வைக்கப்பட்டு இருந்தன. அடுத்தடுத்த ஒளிப்படக்கருவிகளுக்கு இடையிலான தூரம் 21 அங்குலமாகவும், இந்த வரிசையின் மொத்த நீளம் 20 அடியாகவும் இருந்தது.
 
ஒன்பது ஆண்டுகளுக்குப் பின்னர், 1882 ஆம் ஆண்டில், பிரெஞ்சு அறிவியலாளரான [[எட்டியென்-யூல்சு மரே]] (Étienne-Jules Marey) என்பவர் ஒரு செக்கனுக்கு 12 தொடர் படங்களைப் பிடிக்கக்கூடிய ஒளிப்படக் கருவி ஒன்றைக் கண்டுபிடித்தார். இரண்டாவது சோதனை அசைபடம் "ரவுன்டே பூங்காக் காட்சி" (Roundhay Garden Scene) என்பது இதை [[லூயிசு லே பிரின்சு]] (Louis Le Prince) என்பவர் உருவாக்கினார். இங்கிலாந்தின் லீசு என்னும் இடத்தில் உள்ள ரவுன்டே என்னும் இடத்தில் 1888 அக்டோபர் 14 ஆம் தேதி பிடிக்கப்பட்ட இப்படமே தற்போது தப்பியிருக்கும் மிகப் பழைய அசைபடம்.
 
==குறிப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1531580" இருந்து மீள்விக்கப்பட்டது