ஒலிச்சேர்க்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 6:
==வழிமுறைகள்==
===தன்னியக்க உரையாடல் பதிலீடு===
தன்னியக்க உரையாடல் பதிலீடு அல்லது கூடுதல் உரையாடல் ஒலிப்பதிவு என்பது, படப்பிடிப்பு முடிவடைந்த பின்னர், படத்தில் நடித்த நடிகர்கள் தமது உரையாடல்களை மீள்பது செய்யும் ஒரு செயற்பாடு ஆகும். [[ஒலித்தரம்|ஒலித்தரத்தை]] மேம்படுத்துவதற்காகவும், உரையாடலில் மாற்றங்களை ஏற்படுத்தவும் இது அவசியமாகின்றது. ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட உரையாடல்களில் இருக்கக்கூடிய சொற் தெளிவு, நேர இசைவுக் குறைபாடு, உச்சரிப்புக் குறைபாடு போன்றவற்றை நீக்குவதற்கும் இந்த முறை பயன்படுகின்றது.
 
வழமையான படத் தயாரிப்புக்களின்போது, [[படப்பிடிப்பு ஒலிப்பதிவாளர்]] படப்பிடிப்பின்போதே உரையாடல்களை ஒலிப்பதிவு செய்வார். ஆனாலும், கருவிகளிலிருந்து எழும் ஒலி, போக்குவரத்து ஒலி, காற்று மற்றும் சூழலிலிருந்து எழுகின்ற பிற ஒலிகள் போன்றவற்றினால், களத்தில் செய்யப்படும் ஒலிப்பதிவுகள் பெரும்பாலும் பயன்பாட்டுக்கு உதவாதவையாக ஆகிவிடுகின்றன. படப்பிடிப்புக்குப் பிந்திய கட்டத்தில், ஒரு ஒலிப்பதிவு மேற்பார்வையாளர் பதிவு செய்யப்பட்ட உரையாடல்களைக் கேட்டு மீள ஒலிப்பதிவு செய்யவேண்டிய பகுதிகள் எவை என முடிவு செய்வார்.
 
[[பகுப்பு:திரைப்படம்]]
"https://ta.wikipedia.org/wiki/ஒலிச்சேர்க்கை" இலிருந்து மீள்விக்கப்பட்டது