இரண்டாம் ஜெய் சிங்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"படிமம்:Jai Singh II.jpg|130px|thumbnail|வலது..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

15:57, 2 நவம்பர் 2013 இல் நிலவும் திருத்தம்

மகாராஜா சவாய் ஜெய் சிங் (நவம்பர் 3, 1688 முதல் செப்டம்பர் 21, 1743 வரை) ஆம்பர் (தற்பொழுது ஜெய்ப்பூர்) அரசை ஆண்ட மன்னன் ஆவான். இவன் கச்வாகர்களின் தலைநகரான ஆம்பரில் பிறந்தான். இவனது தந்தையான மகாராஜா பிஷான் சிங்கின் மரணத்திற்குப் பின் (31 டிசம்பர் 1699), தனது 11வது அகவையில் இவன் ஆம்பரின் அரசனானான். முகலாய பேரரசன் முகம்மது ஷா ஏபிரல் 21, 1721 அன்று இவனுக்கு சராமத்-இ-ராஜாஹா-இ-ஹிந்த் என்ற பட்டத்தையும் மேலும் ஜூன் 2, 1723 அன்று ராஜ் ராஜேஸ்வர், ஸ்ரீ ராஜாதிராஜ் மற்றும் மகாராஜா சவாய் என்ற பட்டங்களையும் சூட்டினார். “சவாய்” என்றால் ஒன்றேகால் என்று பொருள், அதாவது பிற அரசர்களைவிடவும் இவன் (அதிகாரத்தில்) உயர்ந்தவன் என்ற பொருள்பட இப்பட்டம் வழங்கப்பட்டது. இன்றுவரையும் இவனது வழித்தோன்றல்களுக்கும் இப்பட்டங்கள் சேர்க்கப்படுகின்றன. இவ்வரசன் கணிதத்திலும் கட்டிடக்கலையிலும் வானியலிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவன்.

ஜெய்ப்பூரின் மன்னன் இரண்டாம் ஜெய் சிங்கின் ஓவியம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரண்டாம்_ஜெய்_சிங்&oldid=1539388" இலிருந்து மீள்விக்கப்பட்டது