காழ்க் குழற்போலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 3:
==அமைப்பு==
{{PAGENAME}} என்பது நீளமாகவும் மழுங்கியமுனைகளுடனும் உள்ளன. இதன் உயிரணு அறை, மற்ற நார்களின் அறைகளை விட அகலமாக இருக்கிறது. இவற்றின் இரண்டாம் உயிரணுச்சுவர், 'லிக்னின்' என்ற வேதிப்பொருளால் தடித்துக் காணப்படுகிறது. குறுக்குவெட்டுத் தோற்றத்தில் இவைகள், பல [[கோணம்|கோண]]ங்களுடனும், தடித்த உயிரணுச்சுவருடனும் காணப்படுகின்றன. உயிரணுச்சுவரில் காணப்படும் குழிகள், எளிய குழிகளாகவோ அல்லது வரம்புடைய குழிகளாகவோக் காணப்படுகின்றன. இரண்டாம் உயிரணுச்சுவரில் பொருள்கள் படிவதன் காரணமாக, இவைகளின் உயிரணுச்சுவர், பலவகையான தடிப்புடன் காணப்படுகின்றன. அவை வளையத் தடிப்பு. சுருள் தடிப்பு, ஏணித் தடிப்பு, வலைத் தடிப்பு, குழித்தடிப்பு என பலவகைப்படுகின்றன.
 
இவற்றின் முனைகள் துளைகள் அற்றவையாக (Imperforate) இருக்கின்றன. இந்த முனை சுவரில் (End walls) வரம்புடைய குழிகள் காணப்படுகின்றன. இவைகள் ஒன்றின் முனையின் மீது ஒன்றாக, நீள்வரிசையில் அமைந்துள்ளன. [[வித்துமூடியிலி]] களிலும், டெரிடோஃபைட்டுகளிலும்(Pteridophyte) இந்த காழ்க்கலன்கள் தான், நீரைக்கடத்தும் முக்கிய கூறுகளாக உள்ளன. காழ்க்கலன்களில் நீரும், கனிம
உப்புக்களும், வரம்புடைய குழிகள் மூலம் கடத்தப்படுகின்றன. காழ்க்கலன்கள் தாவரத்திற்கு வலிமை அளிக்கின்றன.
 
 
"https://ta.wikipedia.org/wiki/காழ்க்_குழற்போலி" இலிருந்து மீள்விக்கப்பட்டது