காழ்க் குழற்போலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎அமைப்பு: ==கட்டமைப்பு==
வரிசை 1:
'''{{PAGENAME}}''' என்பது (ஆங்கிலம்:Tracheid) [[காழ்]] என்பதன் நான்கு வகை [[உயிரணு]]க்களில் ஒன்றாகும். {{PAGENAME}}, [[காழ்க்குழாய்]]கள், காழ்நார்கள், காழ்பாரன்கைமா முதலிய நால்வகையணுக்களும் ஒன்றிணைந்து, ஒரு கூட்டணுக்களின் தொகுப்பாக செயற்படுகின்றன. இந்நான்கின் ஒருங்கிணைந்த தொகுப்பானது, தாவரத்திற்குத் தேவையானக் [[கனிமம்|கனிம உப்பு]]க்களையும், [[நீர்|நீரையும்]] [[வேர்|வேரி]]லிருந்து, தாவரத்தின் பிற பகுதிகளுக்குக் எடுத்து செல்வதைத் தமது தலையான பணியாகக் கொண்டுள்ளன.
 
==கட்டமைப்பு==
==அமைப்பு==
{{PAGENAME}} என்பது நீளமாகவும் மழுங்கியமுனைகளுடனும் உள்ளன. இதன் உயிரணு அறை, மற்ற நார்களின் அறைகளை விட அகலமாக இருக்கிறது. இவற்றின் இரண்டாம் உயிரணுச்சுவர், 'லிக்னின்' என்ற வேதிப்பொருளால் தடித்துக் காணப்படுகிறது. குறுக்குவெட்டுத் தோற்றத்தில் இவைகள், பல [[கோணம்|கோண]]ங்களுடனும், தடித்த உயிரணுச்சுவருடனும் காணப்படுகின்றன. உயிரணுச்சுவரில் காணப்படும் நீர்மங்கள் அழிந்து<ref>{{cite book|author=Peter A. Raven, Ray F. Evert, Susan E. Eichhorn|year=1999|title=Biology of Plants|publisher=W.H. Freeman and Company|pages=576–577|isbn=1-57259-611-2|nopp=}}</ref> காணப்படுவதால் குழிகள் காணப்படுகின்றன. குழிகள், எளிய குழிகளாகவோ அல்லது வரம்புடைய குழிகளாகவோக் காணப்படுகின்றன. இரண்டாம் உயிரணுச்சுவரில் பொருள்கள் படிவதன் காரணமாக, இவைகளின் உயிரணுச்சுவர், பலவகையான தடிப்புடன் காணப்படுகின்றன. அவை வளையத் தடிப்பு. சுருள் தடிப்பு, ஏணித் தடிப்பு, வலைத் தடிப்பு, குழித்தடிப்பு என பலவகைப்படுகின்றன.
 
"https://ta.wikipedia.org/wiki/காழ்க்_குழற்போலி" இலிருந்து மீள்விக்கப்பட்டது