வருணன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 23:
'''வருணன்''' அல்லது வருண தேவன் வேதகாலத்தில் மிகச் சிறப்புப் பெற்றிருந்த தேவர்களில் ஒருவன். வேதகாலத்தில் சிறப்புப் பெற்றிருந்த [[ஆதித்தர்கள்]] எனப்படும் பன்னிருவரில் ஒருவன். [[உலகம்]] முழுவதும் பரந்து இருப்பவன் இவன் என்று கூறப்படுகிறவன். வருணன் [[ஆகாயம்|ஆகாயத்தைக்]] குறிப்பவனாகவும், [[மேகம்]], [[மழை]], [[ஆறு]], [[கடல்]] போன்ற [[நீர்]] சார்பான அம்சங்களுடன் தொடர்பு படுத்தப்படுபவனாகவும் உள்ளான்.
 
அளவற்ற அறிவுத்திறனும், வலுவும் உள்ளவனாகப் புகழப்படும் இவன், உலகம் முழுவதையும் மேற்பார்வை செய்து வருவதாக அக்கால இந்துக்கள் கருதினார்கள். இதனால் வருணனை ஆயிரம் [[கண், கண்பார்வை|கண்]]கள் உடையவனாக இந்து சமய நூல்கள் சித்தரிக்கின்றன.
 
ஆரம்பகாலத்தில் இப் [[பிரபஞ்சம்]] முழுமையையும் ஆள்பவன் இவனே என்றும் கருதப்பட்டது. எனினும் [[வேதகாலம்|வேதகாலத்தின்]] பிற்பகுதிகளில் [[இந்திரன் (இந்து சமயம்)|இந்திரன்]] சிறப்புப் பெறத் தொடங்கியபோது, வருணனின் முக்கியத்துவம் குறைந்து விட்டது எனலாம்.
"https://ta.wikipedia.org/wiki/வருணன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது