போதைப்பொருள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Addbotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
No edit summary
வரிசை 4:
==போதைப் பொருள் வகைகள்==
போதைப் பொருட்களில் [[மதுபானம்]], [[புகை பிடித்தல்|புகையிலை]], அபின், ஹெராயின், [[கஞ்சா]], பான் மசாலா, போதை தரும் இன்ஹேலர்கள் என பல வகைகள் அடங்கும்.
 
===காஃவீன்===
 
'''காஃவீன்''' என்பது சில செடிகொடிகளில் உள்ள மனிதர்களுக்கு ஒரு புத்துணர்வூட்டும் (விறுவிறுப்பூட்டும்) ஒரு போதைப் பொருள். இது [[காப்பி]]யில் இருப்பதை முதலில் உணர்ந்ததால் இதற்கு காஃவீன் என்று [[இத்தாலி]]ய மொழிவழி இப்பெயர் ஏற்பட்டது. இதே பொருள் பிற செடிகொடிகளில் இருந்து பெறும்பொழுது வேறு பெயர் கொண்டாலும் இதன் வேதியியல் பெயர் காஃவீன் (Caffeine) என்பதுதான். பிற செடிகளில் இருந்து பெறும் பொருள்களுக்கு சில எடுத்துக்காட்டுகள்: தேயிலைச் செடியில் இருந்து பெறுவதை ''தேயீன்'' (theine) என்றும், குவாரான் என்னும் செடியில் இருந்து பெறுவதை ''குவாரைன்'' (guaranine) என்றும், [[யெர்பா மேட்]] என்னும் செடிப்பொருளில் இருந்து பெறுவதை ''மேட்டீன்''(mateine) என்றும் கூறுவது வழக்கம்.
 
===கஞ்சா===
 
கஞ்சாவில் சில வர்க்கங்கள் போதையூட்டும் பொருட்களாகவும் மருத்துவப் பொருளாகவும் பயன்படுகின்றது. இதில் காணப்படும் வேதிப்பொருளான THC (Δ<sup>9</sup>- tetrahydrocannabinol), இவ்வியல்புக்குக் காரணமாகும். ''சிவகை'' என அழைக்கப்படும் கஞ்சா பக்தி கலந்த போதையை ஊட்டுவதாகக் கருதப்படுகின்றது.
 
===கோக்கைன்===
 
'''கோகோயின்''' என்பது கோகோ தாவர இலைகளில் இருந்து பெறப்படும் ஒரு பளிங்குரு கொண்ட டிரோபேன் அல்கலாய்டு ஆகும். “கோகோ” என்ற பெயருடன் சேர்ந்து அல்கலாய்டு துணைப் பெயரான ''-ine'' என்பது சேர்ந்து ''கோகோயின்'' என்ற வார்த்தையை உருவாக்குகிறது. இது மத்திய நரம்பு மண்டலத்தின் கிளர்ச்சியூட்டியாக இருப்பதுடன் பசி அடக்கியாகவும் செயல்படுகிறது. குறிப்பாக, இது ஒரு செரோடோனின்-நோரெபினிஃப்ரைன்-டோபமைன் மறுஉறிஞ்சல் தடுப்பான் ஆகும், இது புறத்திலமைந்த கடேகாலமைன் டிரான்ஸ்போர்ட்டர் ஈந்தணைவியின் (exogenous catecholamine transporter ligand) செயல்பாட்டை மத்தியஸ்தம் செய்கிறது. மீஸோலிம்பிக் ரிவார்ட் பாதையை இது பாதிக்கும் விதத்தின் காரணமாக, கோகோயின் அடிமைப்பழக்கத்திற்கு ஆட்படுத்தத் தக்கதாய் இருக்கிறது.
 
ஏறக்குறைய உலகின் அனைத்து பகுதிகளிலும் மருத்துவம் சாராத நோக்கங்களுக்கு அல்லது அரசு ஒப்புதலின்றி இதனை வைத்திருப்பது, வளர்ப்பது மற்றும் விநியோகம் செய்வது சட்டவிரோதமாக இருக்கிறது. ஏறக்குறைய எல்லா நாடுகளிலும், இதனை சுதந்திர வர்த்தகமயமாக்குவது சட்டவிரோதமானதாகவும் கடுமையான தண்டனைக்கு உரியதாகவும் இருந்த போதிலும், உலகளாவிய அளவில் இதன் பயன்பாடு பல்வேறு சமூக, கலாச்சார, மற்றும் தனிநபர் அந்தரங்க மட்டங்களில் பரந்துபட்டதாய் இருக்கிறது.
 
==விளையும் ஊறுகள்==
"https://ta.wikipedia.org/wiki/போதைப்பொருள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது