நாகசுரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Nadaswaram.jpg|right|frame|நாதசுவரம்]]
'''நாதசுவரம்''' அல்லது '''நாதஸ்வரம்''' என்பது துளைக்கருவி வகையைச் சேர்ந்த ஓர் [[இசைக்கருவி]]யாகும். இது '''நாதஸ்வரம்''', '''நாதசுரம்''', '''நாகசுரம்''', '''நாகஸ்வரம்'''. '''நாயனம்''' என்று பலவாறு அழைக்கப்படுவது உண்டு. சிறப்பாகத் [[தென்னிந்தியா]], [[இலங்கை]] போன்ற இடங்களிலும், தென்னிந்திய இனத்தவர் வாழும் உலகின் பிற பகுதிகளிலும் இந்த [[இசைக்கருவி]] வழக்கில் உள்ளது. திறந்த இடத்தில் இசைப்பதற்கு ஏற்றது. வெகு தூரத்தில் இருந்து கேட்டாலும் இன்பத்தைத் தரும் இயல்பினைக் கொண்டது<ref>{{cite news|title=Reality show India's Got Talent - Khoj 2 winners to sing for Obama|url=http://indiatoday.intoday.in/story/reality-show-indias-got-talent--khoj-2-winners-to-sing-for-obama/1/118399.html|accessdate=9 January 2012|newspaper=[[India Today]]|date=31 October 2010}}</ref>.
 
தென்னிந்தியாவில் இது ஒரு மங்கலமான இசைக்கருவியாகக் கருதப்படுவதனால். பொதுவாக எல்லாவகையான நன் நிகழ்வுகளிலும் இதற்கு ஒரு இடம் உண்டு. வசதியான பெரிய கோயில்களில் அன்றாடம் இது பல தடவைகள் இசைக்கப்படுவது வழக்கம். ஏனையவற்றில் சிறப்பு வழிபாட்டு நிகழ்வுகளின் போது பயன்படுகின்றது. தவிரவும், தனிப்பட்டவர்களின் திருமணம், பூப்புனித நீராட்டுப் போன்ற நிகழ்ச்சிகளிலும், சமய சார்பற்ற பல பொது நிகழ்வுகளிலும் நாகசுவரம் சிறப்பிடம் பெறுகின்றது.
"https://ta.wikipedia.org/wiki/நாகசுரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது