புனைவியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''புனைவியம்''' என்பது, 18 ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் [[ஐரோப்பா]]வில் உருவாகி வளர்ந்த கலை, இலக்கிய, அறிவுசார் இயக்கம் ஆகும். பெரும்பாலான பகுதிகளில் இது 1800க்கும், 1850க்கும் இடையில் உச்சநிலையில் இருந்தது. ஓரளவுக்கு இது [[தொழிற் புரட்சி]]க்கான ஒரு எதிர் வினையாகக் கருதப்படுகிறது. அத்துடன், [[அறிவொளிக் காலம்|அறிவொளிக் காலத்தின்]], உயர்குடி ஆதிக்கத் தன்மையோடு கூடிய சமூக, [[அரசியல்]] நெறிமுறைகளுக்கு எதிரானதாகவும், [[இயற்கை]]யை [[அறிவியல்|அறிவியலுக்கு]] அமைய வழிப்படுத்துவதை மறுதலிக்கும் ஒன்றாகவும் இது விளங்கியது. [[காட்சிக் கலை]]கள், [[இசை]], [[இலக்கியம்]], போன்ற துறைகளில் இது மிகவும் வலுவானதாக இருந்ததுடன், [[வரலாற்றுவரைவியல்]], [[கல்வி]], [[இயற்கை அறிவியல்]] ஆகிய துறைகளிலும் இது குறிப்பிடத்தக்க தாக்கங்களை ஏற்படுத்தியது. அரசியலிலும் இதன் தாக்கம் குறிப்பிடத் தக்கதாகவும், சிக்கலானதாகவும் இருந்தது. புனைவியம் உயர்நிலையில் இருந்த காலத்தில் இது [[தாராண்மையியம்|தாராண்மையியத்துடனும்]], [[பருமாற்றவியம்|பருமாற்றவியத்துடனும்]] தொடர்புள்ளதாக இருந்தது. நீண்டகால நோக்கில் [[தேசியவாதம்|தேசியவாதத்தின்]] வளர்ச்சியில் இதன் தாக்கம் கூடிய முக்கியத்துவம் கொண்டதாக இருந்தது எனலாம்.
 
[[பகுப்பு:கலை இயக்கங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/புனைவியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது