சஞ்சய் சுப்ரமண்யன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *திருத்தம்*
No edit summary
வரிசை 1:
 
{{Infobox musical artist
|Name = சஞ்சய் சுப்ரமண்யன்
வரி 18 ⟶ 19:
}}
 
'''சஞ்சய் சுப்ரமண்யன்''' (Sanjay Subrahmanyan<ref>[http://sanjaysub.blogspot.in/2008_05_01_archive.html My name and its story]</ref> பி. [[ஜனவரி 21]], [[1968]]) [[தமிழ்நாடு|தமிழகத்தை]]ச் சேர்ந்த [[கருநாடக இசை]]ப் பாடகர் ஆவார். இவர் தனது இசை நிகழ்ச்சிகளை இந்தியா முழுவதும் மற்றும் பல்வேறு உலகநாடுகளிலும் நிகழ்த்தியுள்ளார். தனது பாடும் திறனுக்காக பல்வேறு விருதுகளை இவர் பெற்றிருக்கிறார். கேள்வி ஞானம் மூலமாக நேர்த்தியான திறமையை ஒரு இசைக்கலைஞன் வெளிப்படுத்தமுடியும் என்பது இவரின் நம்பிக்கை.
 
==சிறுவயதில்==
இவரது தந்தை சங்கரன் கல்கத்தாவில் வேலை பார்த்ததால் சஞ்சய் சுப்ரமண்யன் சிறு வயதில் கல்கத்தாவில் வசித்தார். கிரிக்கெட்டில் ஆர்வமுள்ளவராக இருந்தார். ரஞ்சி கோப்பை போட்டிகளில் தமிழ்நாட்டுக்காக ஆட வேண்டுமென விரும்பியதாக ஒரு நேர்காணலில் கூறியிருந்தார்.<ref>[http://www.hindu.com/mp/2005/08/13/stories/2005081302530200.htm He chose to be a singer] </ref>
 
==கல்வி/இசைப் பயிற்சி==
ஒரு இசைக் குடும்பத்தில் பிறந்த சஞ்சய், கல்வித் துறையில் பட்டயக் கணக்காளராக (chartered accountant) பட்டம் பெற்றார். தனது ஏழாவது வயதில் இசைப் பயிற்சியை தொடங்கிய சஞ்சய், தொடக்கத்தில் வி. லட்சுமிநாராயணனிடம் [[வயலின்|வயலினும்]] வாய்ப்பாட்டும் கற்றுக் கொண்டார்.
ஒரு சிறு விபத்தின் காரணமாக வயலின் வாசிப்பை தொடர முடியாமல் போனதால் வாய்ப்பாட்டு பயிற்சியை மேற்கொண்டார்.
இவரது பேத்தியார் ருக்மிணி இராஜகோபாலன் பரூர் சுந்தரம் ஐயரிடமும் பாபநாசம் சிவனிடமும் இசை பயின்றவர். 1930 களில் அகில இந்திய வானொலி தொடங்கிய காலத்திலிருந்தே அதன் பாடகராக அங்கீகாரம் பெற்றிருந்தார். அத்துடன் மாணவர்களைப் பயிற்றுவிப்பதிலும் பெயர் பெற்றவராக இருந்தார். சஞ்சய் அவரிடமே வாய்ப்பாட்டு கற்றுக் கொண்டார்.
பின்னர் கல்கத்தா கே. எஸ். கிருஷ்ணமூர்த்தியிடம் பயிற்சி பெற்றார். அவர் சஞ்சயின் ஆக்கச் சிந்தனையையும் படைப்புத் திறனையும் வளர்த்துவிட்டார். இசை நிகழ்ச்சிகளின் போது சஞ்சயின் வெகு சுதந்திரமான வெளிப்பாடுகளுக்கு இந்தப் பயிற்சியே காரணமாக இருந்தது. <ref>[http://sruti.com/index.php?main_page=product_info&products_id=326 A musician of integrity by SAVITA NARASIMHAN]</ref>
நாதசுவர வித்துவான் செம்பொன்னார்கோயில் எஸ். ஆர். டி. வைத்தியநாதனிடமும் இசைப் பயிற்சி பெற்றார்.
 
==இசைக் கச்சேரிகள்==
அகில இந்திய வானொலியில் ஒரு "உயர் ஏ" தர கலைஞராக அங்கீகரிக்கப் பட்டுள்ளார். சென்னை, மும்பாய், டெல்லி, கொல்கத்தா, பெங்களூரு உள்ளிட்ட பல இந்திய நகரங்களிலும் அமெரிக்கா, ஆத்திரேலியா, இந்தோனேசியா, ஐக்கிய இராச்சியம், ஓமான், கனடா, சிங்கப்பூர், சுவிற்சர்லாந்து, மலேசியா ஆகிய வெளிநாடுகளிலும் இசைக் கச்சேரிகள் செய்துள்ளார்.
அரிய தமிழ் பாடல்களை தேடியெடுத்து அவற்றிற்கு இசை வடிவம் தந்து பாடுவதில் வல்லவர். எந்தப் பாடலாக இருந்தாலும் அதை மனனம் செய்து பாடுவார். அதனால் பொருள் உணர்ந்து மனம் ஒன்றிப் பாடுவார். இவர் பாடும்போது இவரது கம்பீரமான தோற்றமும் அங்க அசைவுகளும் பார்வையாளர்களுக்கு உற்சாகத்தையும் பரவசத்தையும் கொடுக்கும்.
 
==பண்பாடு==
கருநாடக இசையையும் தமிழ் பண்பாட்டையும் பெரிதும் மதிப்பவர். 2013 டிசம்பரில் ''கான பத்மம்'' விருது வழங்கப் பட்டபோது மேடையில் விருதினை வழங்கிய மூத்த இசை வித்துவான் பாலமுரளி கிருஷ்ணாவின் பாதங்களை நெடுஞ்சாண்கிடையாக விழுந்து சஞ்சய் வணங்கியது பார்த்தவர்களை புல்லரிக்கச் செய்தது. <ref>[http://sanjaysub.blogspot.in/search?updated-min=2013-01-01T00:00:00%2B05:30&updated-max=2014-01-01T00:00:00%2B05:30&max-results=34 ஆனந்த விகடன் செய்தி]</ref>
 
==விருதுகள்==
* கிருஷ்ணகான சபாவின் இளைஞர் சக்தி (Spirit of Youth) விருது<ref>[http://iicdelhi.nic.in/IIC_Fest2013/Oct_22_2013_Performance.html The IIC Festival 2013] </ref>
* அகில இந்திய வானொலி நடத்திய இசைப் போட்டியில் முதற்பரிசு (1985)
* [[மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர்]] அறக்கட்டளையின் உயர் இசைப் பயிற்சிக்கான உதவி நிதி (1987/88)
* யுவ கலா பாரதி, 1991 வழங்கியது பாரத் கலாச்சார், சென்னை
* சன்ஸ்கிருதி விருது, 1997 வழங்கியது மேடைக்கலைகளுக்கான சன்ஸ்கிருதி பிரதிஸ்தான்
* இசைப் பேரொளி விருது, 2000 வழங்கியது கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ், சென்னை
* [[கலைமாமணி விருது]], 2006 வழங்கியது [[தமிழ்நாடு அரசு]]
* சங்கீத கலா சாரதி, 2006 வழங்கியது ஸ்ரீ பார்த்தசாரதி சுவாமி சபா
* வாணி கலா சுதாகர, 2010 வழங்கியது தியாகப் பிரம்ம கான சபா
* [[இந்திரா சிவசைலம் அறக்கட்டளை விருது]], 2011
* கான பத்மம், 2013. வழங்கியது: பிரம்ம ஞான சபா.<ref>http://www.thehindu.com/news/cities/chennai/renowned-artistes-honoured/article5418853.ece </ref>
"https://ta.wikipedia.org/wiki/சஞ்சய்_சுப்ரமண்யன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது