எக்சு-கதிர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சான்றுகள் சேர்ப்பு
No edit summary
வரிசை 1:
{{தரமுயர்த்து}}
[[படிமம்:X-ray by Wilhelm Röntgen of Albert von Kölliker's hand - 18960123-02.jpg|thumb|200px|வில்ஹம் ராண்ட்கனால் எடுக்கப்பட்ட x-கதிர்ப் படம். மோதிர விரலில் மோதிரம் காணப்படுகின்றது.]]
 
 
[[படிமம்:X-ray by Wilhelm Röntgen of Albert von Kölliker's hand - 18960123-02.jpg|thumb|200px|An X-ray picture (radiograph), taken by Wilhelm Röntgen, of Albert von Kölliker's hand.]]
'''ஊடு கதிர் அலைகள்''' (X-rays, X-கதிர்கள், எக்ஸ் கதிர்கள்) மிக அதிக ஆற்றல் வாய்ந்த கதிர்கள் ஆகும். [[இரும்பு]] போன்ற உலோகங்களிலும் ஊடுருவிச் செல்ல வல்லவை. இவற்றின் [[அலைநீளம்]] 10 நானோமீட்டர் முதல் 0.01 நானோமீட்டர் வரையாகும் .
 
வரி 18 ⟶ 17:
எக்சு-கதிர்கள் மற்றும் [[காம்மா கதிர்|காம்மா கதிர்களுக்கு]] இடையே ஒரு வரையறை வேறுபடுத்தி உலகளவில் ஒருமித்த கருத்து இல்லை. அவற்றின் மூலத்தை வைத்துக்கொண்டே இக் கதிர்வீச்சுக்களை இருவகையாக வேறுபடுத்துகின்றனர். எக்சு கதிர்கள் [[இலத்திரன்|இலத்திரன்களில்]] இருந்து உமிழப்பட்டு வெளிவருகின்றன, ஆனால் [[காம்மா கதிர்|காம்மா கதிர்கள்]] அணுக்கருவிலிருந்து உமிழப்பட்டு வெளிவருகின்றன. மற்றச் செயல்முறைகளின் மூலம் இந்த உயர் ஆற்றலை உருவாக்க முடிவதாலும் சில வேளைகளில் அது உருவாக்கப்படும் முறை தெரியாமல் போவதாலும் இந்த வரையறையில் சிக்கல்கள் உள்ளன. ஒரு பொதுவான மாற்றீடாக [[அலைநீளம்|அலைநீளத்தின்]] அடிப்படையில் எக்சு-கதிர் மற்றும் [[காம்மா கதிர்|காம்மாக் கதிர்வீச்சுக்கள்]] வேறுபடுத்தப்படுகின்றன. 10<sup>−11</sup> m அலைநீளத்தைக் கொண்ட கதிர்வீச்சு [[காம்மா கதிர்|காம்மாக் கதிர்கள்]] எனப்படுகின்றது.
 
==X-கதிரின் பண்புகள்==
 
X-கதிர்கள் அதிக சக்தியுடைய மின்காந்தக் கதிர்களாகும். இவற்றின் அயனாக்கும் ஆற்றல் புற-ஊதாக் கதிர்களின் ஆற்றலை விட மிக அதிகமாகும். எனவே பொருட்களை அயனாக்கி இரசாயன பிணைப்புகளை உடைக்கும் ஆற்றலை இவை கொண்டுள்ளன. இப்பண்பு காரணமாகவே X-கதிர்கள் உயிரிகளுக்கு மிகவும் ஆபத்தானவை எனக் கருதப்படுகின்றன. மென்மையான X-கதிகளையும் உரிய பாதுகாப்பின்றி நீண்ட காலம் கையாண்டால் டி.என்.ஏ மூலக்கூறுகளின் ஒழுங்கு குலைந்து [[புற்று நோய்]]க்கு உள்ளாகலாம். அதிக சக்தியுள்ள X-கதிர்களினால் புற்று நோய்க் கலங்களை அயனாக்கி அழிக்கவும் இயலும். எனினும் இதன் போது ஆரோக்கியமான கலங்களுக்கு X-கதிர்கள் செலுத்தப்படுதல் தவிர்க்கப்பட வேண்டும். மருத்துவத்தில் X-கதிரைப் பயன்படுத்துவதால் வரும் நன்மை அதனால் வரும் ஆபத்தை விட அதிகமாக இருந்தால் மாத்திரமே அவை பயன்படுத்தப்படுகின்றன.
 
வலிமையான X-கதிர்களால் பொருட்களை ஊடுருவ முடியும். இப்பண்பே மருத்துவத் துறையில் X-கதிர்ப் படங்களை எடுக்கப் பயன்படுத்தப்படுகின்றது. விமான நிலையங்களில் பாதுகாப்புச் சோதனையின் போதும் இத்தொழிற்பாடே பயன்படுத்தப்படுகின்றது.
 
X-கதிர்கள் கட்புலனாகும் ஒளி, புற-ஊதாக் கதிர்களை விட மிகக் குறைவான அலை நீளமுடையவை. எனவே X-கதிகளைப் பயன்படுத்தும் நுணுக்குக்காட்டிகள் ஒளி நுணுக்குக் காட்டிகளை விட அதிக தெளிவுடையனவாக உள்ளன.
==மூலங்கள்==
 
வரி 45 ⟶ 51:
|}
 
எக்சு-கதிர்கள் இலத்திரன்களில் இருந்து உமிழப்பட்டாலும், அவை வெப்ப எதிர்மின்வாயினால் வெளியிடப்படும் [[இலத்திரன்|இலத்திரன்களை]] அதிக மின்னழுத்தத்தைப் பயன்படுத்தி வேகத்தினைக் கூட்டும் [[வெற்றிடக் குழாய்|வெற்றிடக் குழாயகிய]] [[எக்சு-கதிர்க் குழாய்|எக்சு-கதிர்க் குழாயிலிருந்தும்]] தயாரிக்கப்படலாம். கதிர்க் குழாயின் கத்தோட்டு/ எதிர்மின் வாயிலிருந்து இலத்திரன்கள் குறைந்த அமுக்கமுடைய குழாயினுள் செலுத்தப்படுகின்றன. அதிவேகத்தில் செல்லும் இலத்திரன்கள் உலோக இலக்காகிய எதிர்மின்வாயுடன்நேர்மின்வாயுடன் (அன்னோட்டுடன்) மோதி எக்சு-கதிர்களை உருவாக்குகின்றன.<ref>{{cite book
|last = Whaites
|first = Eric
வரி 55 ⟶ 61:
|url = http://books.google.com/?id=x6ThiifBPcsC&dq=radiography+kilovolt+x-ray+machine
|isbn = 0-443-07027-X}}</ref>
மருத்துவத்துறையில் தங்குதன் அல்லது சிறிதளவு ரீனியம் கலக்கப்பட்ட தங்குதன் பயன்படுத்தப்படுகின்றது. இவ்வுலோகம் அதிக ஊடுருவும் ஆற்றலுடைய X-கதிர்களை உருவாக்குகின்றது. குறைந்த ஊடுருவும் ஆற்றலுடைய X-கதிர்கள் தேவைப்பட்டால் மொலிப்டினம் பயன்படுத்தப்படும். மேலும் ஆற்றல் குறைந்த கதிர்கள் தேவைப்பட்டால் செம்பு அன்னோட்டாகப் பயன்படுத்தப்படும். கத்தோட்டின் மின்னழுத்த வேறுபாட்டிலேயே உருவாக்கப்படும் எக்சு கதிர்களின் சக்தி தங்கியுள்ளது. உதாரணமாக 75 kV மின்னழுத்தம் உடைய கத்தோட்டால் 75 keV சக்தியிலும் குறைவான சக்தியுடைய எக்சு கதிரையே உருவாக்க முடியும். X-கதிர்கள் பிரதானமாக இரு குவான்டம் முறைகளால் உருவாக்கப்படுகின்றன:
1. X-கதிர் [[உடனொளிர்வு]]- வேகமாக வரும் புற இலத்திரன்கள் உலோக அணுவின் இலத்திரன்களோடு மோதி இவற்றின் வினையால் x-கதிர்கள் உருவாகின்றன. இத்தொழிற்பாட்டால் தோற்றுவிக்கப்படும் x-கதிர்களின் [[நிறமாலை]] பயன்படுத்தப்படும் உலோகத்துக்கேற்றபடி வேறுபடும்.
 
2. பிரம்ஸ்ட்ரிலங்க் - வலிமையான மின் புலம் காரணமாக அதிர்வடையும் இலத்திரன்களிலிருந்து வெளியேற்றப்படும் X-கதிர்களாகும். இத்தொழிற்பாடு தொடர்ச்சியான நிறமாலையைக் கொடுக்கும்.
 
இவ்விரு தொழிற்பாடுகளும் மிகவும் வினைத்திறனற்றவையாகும். ஏனெனில் மின்சக்தியாக விநியோகிக்கப்படும் சக்தியில் அனேகமானது வெப்பசக்தியாக வெளியேற்றப்படுகின்றது. எனவே X-கதிர்க் குழாயின் வெப்பநிலையைக் கட்டுப்படுத்தும் தொகுதிகள் சேர்க்கப்பட வேண்டும்.
 
==மின்சாரமின்றி எக்சு-கதிர்கள்==
வரி 60 ⟶ 72:
எக்சு-கதிர்களைப் பெற பல்லாயிரக் கணக்கான [[வோல்ட்டு]] [[மின்னழுத்தம்]] தேவைப்படும். மின்வசதி இல்லாத இடங்களில் '''மின்சாரமின்றி எக்சு கதிர்கள்''' (''X-rays without electricity'') பெறுவதற்கு கதிர் [[ஐசோடோப்பு]]கள் உதவுகிறன. [[எக்சு-கதிர்க் குழாய்|எக்சு கதிர் குழாயில்]] ஆற்றல் மிக்க [[எலக்ட்ரான்]]கள், [[டங்ஸ்டன்|டங்சுடன்]] இலக்கை மோதும் நிலையில் எக்சு-கதிர்கள் தோன்றுகின்றன. மிக அதிக மின்னழுத்தத்தில் அவை அதிக ஆற்றலைப் பெறுகின்றன. இதுபோன்ற ஆற்றல் மிக்க எலக்ட்ரான்களை ஐசோடோப்பில் இருந்தும் பெறலாம். ஸ்ட்ரான்சியம் 90, β துகள்களை (எலக்ட்ரான்கள்) வெளியிடுகிறன. காப்பான ஈயக்கட்டியில் ஸ்ட்ரான்சியம் 90 எடுத்துக் கொள்ளப்படுகிறது. இதிலிருந்து வெளிப்படும் எலக்ட்ரான்கள் டங்சுடன் இலக்கை தாக்குமாறு அமைக்கப்படுகிறது. இம்முறையில் வெளிப்படும் எக்ஸ் கதிர்களின் செறிவு குறைவாகவே உள்ளது. பாதுகாப்பான முறையில் கருவி அமைக்கப்படுகிறது.
 
==மருத்துவப் பயன்கள்==
== எக்சு-கதிர் படத்தின் அடிப்படைப் பண்புகள்==
 
[[வில்ஹெம் ரொண்ட்ஜென்|வில்லெம் இராண்ஜன்]] கண்டுபிடித்ததிலிருந்து எக்சு-கதிர்கள் எலும்புகளின் கட்டமைப்பைக் கண்டறியப் பயன்படுகின்றன. எக்சு-கதிர்கள் [[மருத்துவப் படிமவியல்|மருத்துவப் படிமவியலில்]] பயன்படுத்தப்படுகின்றன. எக்சு-கதிரின் முதலாவது மருத்துவப் பயன்பாடானது அவரது கண்டுபிடிப்பு மேற்கொள்ளப்பட்டு ஒரு மாதத்திற்குள்ளேயே நிகழ்ந்தது. 2010 இல் உலகளாவிய ரீதியில் 5 பில்லியன் மருத்துவப் படிமவியல் கற்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
 
=== எக்சு-கதிர் படத்தின் அடிப்படைப் பண்புகள்===
 
நல்ல எக்சுகதிர் படம், பின்வரும் நான்கு அடிப்படைப் பண்புகளைக் கொண்டிருக்க வேண்டும்:
வரி 67 ⟶ 83:
# உச்ச அளவு தெளிவு (Maximum clarity);
# குறைந்த அளவு [[உருப்பெருக்கம்]] (Minimum magnification).
 
===எக்சு கதிர் படத்தில் தெளிவில்லாமை===
எக்சு-கதிர் படத்தில் தெளிவில்லாமை ( Blurring of x ray image ) என்பது சீரான விளிம்புகளைக் கொண்ட உடலுறுப்புகளின்
படம்கூட தெளிவற்ற விளிம்புகளுடன் காணப்படுவதைக் குறிக்கும். இதற்கு பல காரணங்கள் உள்ளன் அவையாவன:
வரி 78 ⟶ 95:
இவ்வாறு பல காரணங்களால் தெளிவின்மை ஏற்படுகிறது.
 
==மருத்துவப் பயன்கள்==
 
[[வில்ஹெம் ரொண்ட்ஜென்|வில்லெம் இராண்ஜன்]] கண்டுபிடித்ததிலிருந்து எக்சு-கதிர்கள் எலும்புகளின் கட்டமைப்பைக் கண்டறியப் பயன்படுகின்றன. எக்சு-கதிர்கள் [[மருத்துவப் படிமவியல்|மருத்துவப் படிமவியலில்]] பயன்படுத்தப்படுகின்றன. எக்சு-கதிரின் முதலாவது மருத்துவப் பயன்பாடானது அவரது கண்டுபிடிப்பு மேற்கொள்ளப்பட்டு ஒரு மாதத்திற்குள்ளேயே நிகழ்ந்தது. 2010 இல் உலகளாவிய ரீதியில் 5 பில்லியன் மருத்துவப் படிமவியல் கற்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/எக்சு-கதிர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது