சிக்கல் வழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2:
'''சிக்கல் வழி'' (labyrinth) என்பது, கிரேக்கத் தொன்மங்களில் சிக்கல் தன்மை கொண்டதாக அமைக்கப்பட்ட ஒரு அமைப்பைக் குறிக்கும். இது கிரீட்டின் அரசரான [[மினோசு]] என்பவருக்காக [[டேடலசு]] என்னும் கைவினைஞரால் [[நோசசு]] என்னும் இடத்தில் அமைக்கப்பட்டது. இந்த அமைப்பு, அரைப்பகுதி மனித வடிவத்தையும், அரைப்பகுதி காளை வடிவமும் கொண்ட தொன்மப் பிராணியை எவரும் அணுகா வண்ணம் அடைத்து வைக்கப் பயன்பட்டது. ஆனாலும், [[ஆதென்சு|ஆதென்சின்]] வீரனான [[தேசியசு]] அந்த அமைப்புக்குள் நுழைந்து அப்பிராணியைக் கொன்றான்.
 
[[File:Classical 7-Circuit Labyrinth.svg|thumb|150px|left|செந்நெறிக்காலச் சிக்கல் வழி.]]
''சிக்கல் வழி'' என்பதும், ''[[புதிர்வழி]]'' (maze) எனப்படுவதும் பொது வழக்கில் பயன்படுத்தப்பட்டாலும், இரண்டு வேறுவேறானவை. புதிர்வழி என்பது, பல்வேறு கிளைவழிகளுடன் கூடிய மிகவும் சிக்கலான ஒரு வழியாகும் (பல்லொழுங்குப் பாதை). ஆனால், சிக்கல் வழி சிக்கலான முறையில் சுற்றிச் சுற்றிச் செல்லுகின்ற ஆனால் கிளைகள் இல்லாத ஒற்றை வழியாகும் (ஓரொழுங்குப் பாதை). இந்த அடிப்படையில் பார்க்கும்போது, ''சிக்கல் வழி'' உட்செல்வதற்கும் வெளியேறுவதற்கும் குழப்பம் தராத ஒரு அமைப்பு.
 
[[File:Classical 7-Circuit Labyrinth.svg|thumb|150px|left|செந்நெறிக்காலச் சிக்கல் வழி.]]
தொடக்ககாலக் கிரீத்திய நாணயங்களில் பல்லொழுங்கு வடிவங்கள் அரிதாகக் காணப்பட்டாலும், கிமு 430 இலிருந்தே ஏழு வரிசைகளில் அமைந்த ஓரொழுங்கு வடிவங்கள் நாணயங்களில் பயன்படுத்தப்பட்டு உள்ளன. தருக்கப்படியும், இலக்கிய விவரங்களில் இருந்தும், கிரேக்கத் தொன்மப் பிராணியான மினோட்டோரை அடைத்துவைத்த அமைப்பு கிளைத்த வழிகளோடு கூடியதாக இருந்த போதும், ஓரொழுங்கு வடிவங்களே பின்னர் சிக்கல் வழியைக் குறிப்பதற்காகப் பரவலாகப் பயன்படுத்தப்பட்டன. சிக்கல் தன்மை அதிகரித்தாலும், உரோமர் காலத்தில் இருந்து மறுமலர்ச்சிக் காலம் வரையில் சிக்கல் வழியைக் குறிக்கப் பயன்பட்டவை பெரும்பாலும் ஓரொழுங்கு வடிவங்களே. மறுமலர்ச்சிக் காலத்தில் பூங்காப் புதிர்வழிகள் பிரபலமானபோதே பல்லொழுங்கு வடிவங்கள் மீண்டும் அறிமுகமாயின.
 
 
"https://ta.wikipedia.org/wiki/சிக்கல்_வழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது