சால்வதோர் தாலீ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி Robot: af:Salvador Dalí is a featured article; மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 21:
'''சால்வதோர் தாலீ''' (''Salvador Dali'', [[மே 11]], [[1904]] - [[ஜனவரி 23]], [[1989]]) [[ஸ்பெயின்]] நாட்டைச் சேர்ந்த [[கட்டலன் மக்கள்|கட்டலன்]] இனத்தவரான, [[அடிமன வெளிப்பாட்டியம்|அடிமன வெளிப்பாட்டிய]] ஓவியர் ஆவார். இவரது முழுப்பெயர் '''சால்வதோர் டொமிங்கோ பிலிப்பே ஜசிண்டோ டொமெனிக்''' என்பதாகும். ஸ்பெயினின் [[கட்டலோனியா]]வில் உள்ள [[பிக்கரெஸ்]] (Figueres) என்னுமிடத்தில் பிறந்த இவர் ஒரு திறமையான படவரைவாளர். இவரது கவர்ச்சியான அடிமன வெளிப்பாட்டிய ஆக்கங்கள் பெரிதும் புகழ் பெற்றவை. சால்வதோர் தாலீயின் ஓவியத் திறன் [[மறுமலர்ச்சி]] ஓவியர்களின் செல்வாக்கினால் ஏற்பட்டதாகக் கூறப்படுகின்றது. மிகவும் அறியப்பட்ட இவரது ஓவியமான [[நீங்கா நினைவு]] (''The Persistence of Memory'') 1931 ஆம் ஆண்டில் தீட்டி முடிக்கப்பட்டது. இவருக்குத் [[திரைப்படம்]], [[சிற்பம்]], [[நிழற்படக்கலை]] போன்ற கலைகளிலும் ஈடுபாடு இருந்தது.
 
== இளமைக்கால வாழ்க்கை ==
இவரது தந்தை சால்வதோர் தாலீ இ குசி ஒரு வழக்கறிஞர் ஆவார். இவரது தாய்தான் இவருடைய கலைகள் மீதான ஈடுபாடுகள் வளர காரணமானவர். தாலீ சிறிய வயதிலேயே ஓவியப் பள்ளியில் சேர்ந்து ஓவியம் பயின்றார். 1919 ஆம் ஆண்டு இவரது ஓவியங்களை கொண்டு ஒரு கண்காட்சியை இவரது தந்தை ஏற்பாடு செய்திருந்தார்.
 
வரிசை 29:
 
 
== ஓவியங்கள் ==
[[படிமம்:The Persistence of Memory.jpg|thumb|right|நீங்கா நினைவு]]
மறுமலர்ச்சி கால ஓவியங்களின் தாக்கத்தில் இவரது துவக்க கால படைப்புகள் இருந்தாலும், 1930களில் வளரத்துவங்கிய அடிமன வெளிப்பாட்டிய வடிவத்தின் தாக்கத்தில் இவர் ஓவியங்களை வரையத் துவங்கினார். இவ்வியக்கத்தின் ஓவியர்கள் பலருடனும் நெருங்கிய தொடர்பில் இருந்தார்.
வரிசை 39:
1931 ஆம் ஆண்டு தாலீ வரைந்த [[நீங்கா நினைவு]] என்ற ஓவியத்தின் மூலம் பெரும் புகழ் பெற்றார். இந்த ஓவியத்தில், காலம் இடம் இரண்டுமே நெகிழ்வுத் தன்மை கொண்டது எனப் பொருள் படும்படி வரைந்திருந்தார். ஆல்பர்ட் ஐன்ஸ்டைனுடைய சார்பியல் கொள்கையை இந்த ஓவியம் அடிப்படையாக கொண்டதாக பலர் கருதுகிறார்கள். ஆனால், தாலீயோ வெயிலிலோ வைத்த பாலாடைக் கட்டி எப்படி உருகுமோ அதை அடிமன வெளிப்பாடாகக் கொண்டு வரையப்பட்டதே என்று விளக்கமளித்தார்.
 
=== தாலீயின் இளம்வயதில் வரைந்த ஓவியங்களில் சில: ===
* விலாபெர்டின் ('Vilabertin')
* பிகாரசின் அருகிலுள்ள நிலப்பகுதி ('Landscape Near Figueras')
* காபரே காட்சி ('Cabaret Scene')
 
=== அடிமன வெளிப்பாட்டியப் பாணியில் தாலீ உருவாக்கிய ஓவியங்கள் சில: ===
* [[நீங்கா நினைவு]]('The Persistence of Memory')
* [[யானைகள்]]('The Elephants') <ref>[https://en.wikipedia.org/wiki/The_Elephants யானைகள்]</ref>
 
=== அடிமன வெளிப்பாட்டியப் பாணியில் கிறித்தவக் கருத்துகள் கொண்ட ஓவியங்கள் சில: ===
* [[இறுதி இராவுணவு அருட்சாதனம் (ஓவியம்)]]<ref>[http://en.wikipedia.org/wiki/The_Sacrament_of_the_Last_Supper இறுதி இராவுணவு அருட்சாதனம்]</ref>
* [[சிலுவையின் புனித யோவானின் கிறித்து (ஓவியம்)]] (''Christ of Saint John of the Cross'')
* "புனித வனத்து அந்தோனியார் சோதிக்கப்படுதல்" (''The Temptation of St. Anthony'')
* "மிகுகனசதுர சிலுவையில் இயேசு" (''Corpus Hypercubus'')<ref>[http://en.wikipedia.org/wiki/Crucifixion_(Corpus_Hypercubus) சிலுவையில் இயேசு]</ref>
* "லிகாத் துறைநகர அன்னை மரியா" (''The Madonna of Port Lligat'')<ref>[http://en.wikipedia.org/wiki/The_Madonna_of_Port_Lligat லிகாத் துறைநகர அன்னை மரியா]</ref>
* "அணுநிலைச் சிலுவை"(''Nuclear cross'')
* "பொதுச் சங்கம்" (''The Ecumenical Council'')<ref>[http://en.wikipedia.org/wiki/The_Ecumenical_Council_(painting) பொதுச் சங்கம்]</ref>
 
== சிற்பங்கள் ==
ஓவியங்கள் மட்டுமல்லாது சிற்பங்களையும் அடிமன வெளிப்பாட்டியத் தாக்கம் கொண்டவையாக தாலீ உருவாக்கினார் அவற்றில் முக்கியமானது நண்டுத் தொலைபேசி ஆகும். தொலைபேசியின் மேல்புறம் பெரிய கடல் நண்டு போன்ற உருவத்தை வடிவமைத்து இணைத்தார். தாலீயின் ஓவியங்களில் தொலைபேசிகளும் நண்டுகளும் அடிக்கடி இடம்பெற்றன. இவையிரண்டும் ஆழ்ந்த பாலியல் தாக்கங்கள் கொண்டதாக தாலீ கருதினார். இந்த நண்டு தொலைபேசியை ஆங்கிலக் கவிஞரும் அடிமன வெளிப்பாட்டியம் தொடர்பான பொருட்களைச் சேமிப்பதில் அதிக ஆர்வம் உடையவராக இருந்த [[எட்வர்ட் ஜேம்ஸ்]] என்பவருக்காக தாலீ வடிவமைத்தார்.
 
உதடுவடிவ மெத்திருக்கையும் (Lips Sofa) தாலீயின் முக்கிய படைப்புகளில் ஒன்றாகும். மே வெஸ்ட் என்ற நடிகையின் உதடுகளைப் போன்ற தோற்றமுடைய மெத்திருக்கையை தாலீ உருவாக்கினார்.
 
== திரைத் துறை ==
சிறு வயது முதலே திரைப்படங்கள் மீது இவருக்குத் தீரக் காதல் இருந்தது. வாரந்தோறும் ஞாயிற்றுக் கிழமைகளில் திரைப்படம் பார்ப்பதை வாடிக்கையாகவே கொண்டிருக்கிறார். அந்த ஈடுபாடு பின்னாட்களில் இவர் திரைத்துறையில் நுழையக் காரணமாய் இருந்தது.
 
[[லூயி புனுவல்|லூயி புனுவலுடன்]] இணைந்து ஆந்தலூசிய நாய் (Un Chien Andalou) என்று பெயரிடப்பட்ட 17 நிமிட நீளம் கொண்ட ஒரு குறும்படத்தை உருவாக்கினார். இந்தக் குறும்படத்தின் துவக்கக் காட்சியில், ஒரு சவரக் கத்தியை நன்கு கூர் தீட்டி, ஒரு பெண்ணின் கருவிழியின் மத்தியப் பகுதி கிழிப்பதாகவும், விழிக்கோளம் சிதைந்து சதைகள் தொங்குவதாகவும், அந்தக் காட்சிகள் அப்படியே நிலவை, இருட்டு இரன்டாக கிழிப்பதாகவும் தொகுக்கப்பட்டு படமாக்கப் பட்டு [[அடிமன வெளிப்பாட்டியம்|அடிமன வெளிப்பாட்டியத்]] தன்மை கொண்டதாக அமைக்கப்பட்டு இருந்தது. இந்தக் காட்சி அமைப்பு இன்றும் வெகுவாக பேசப்படுகிறது. லூயி புனுவலுடன் சேர்ந்து மேலும் சில திரைப்படங்களில் பணி புரிந்தார்.
 
அதேபோல,[[ஆல்பிரட் ஹிட்ச்காக்|ஆல்பிரட் ஹிட்ச்காக்குடனும்]]குடனும் இணைந்து பணியாற்றியிருக்கிறார். ஹிட்ச்காக்கினுடைய ஸ்பெல்பவுண்ட் என்ற திரைப்படத்தின் கனவுக் காட்சிகளை வடிவமைத்தவர் தாலீ தான்.
 
[[வால்ட் டிஸ்னி]]யுடன் சேர்ந்து [[அக்கடமி விருது]]க்கு முன்மொழியப்பட்ட ''டெஸ்டினோ'' எனப்படும் குறுங் கார்ட்டூன் படம் ஒன்றைத் தயாரிப்பதில் ஈடுபட்டிருந்தார் எனினும் இது முற்றுப்பெறும் முன்னரே இவர் இறந்து விட்டார். இதன்பின் இப்படம் முழுமையாக்கப்பட்டு 2003 இல் வெளியிடப்பட்டது.
 
== தாலீயின் மீசை ==
[[Imageபடிமம்:Salvador Dali NYWTS.jpg|thumb|right|தாலீயின் மீசை]]
சல்வடார் தாலீயின் மீசை உலக அளவில் மிகவும் புகழ்பெற்றது. [[ஸ்பெயின்]] நாட்டைச் சேர்ந்த 17ஆம் நூற்றாண்டு ஓவியர் தியாகோ வெலாஸ்க்யூசின் மீசை இவருடைய மீசைக்கு ஒரு தூண்டுதலாக அமைந்தது. தாலீயின் மீசை [[அடிமன வெளிப்பாட்டியம்|அடிமன வெளிப்பாட்டியத்தின்]] ஒரு குறியீடாகவே திகழ்கிறது. தமிழ்த் திரைப்படம் இம்சை அரசன் இருபத்தி மூன்றாம் புலிகேசியின் மீசை வடிவமைப்பு இவருடைய மீசையை ஒத்ததே.
 
== குறிப்புகள் ==
{{reflist}}
 
[[பகுப்பு:ஸ்பானிய ஓவியர்கள்]]
[[பகுப்பு:1904 பிறப்புகள்]]
[[பகுப்பு:1989 இறப்புகள்]]
[[பகுப்பு:எசுப்பானியாவின் கத்தோலிக்கர்கள்]]
 
{{Link FA|af}}
"https://ta.wikipedia.org/wiki/சால்வதோர்_தாலீ" இலிருந்து மீள்விக்கப்பட்டது