அன்டி வார்ஹால், [[பென்சில்வேனியா]]வில் உள்ள [[பிட்ஸ்பர்க், பென்சில்வேனியா|பிட்ஸ்பர்க்பிட்ஸ்பர்க்கில்]]கில் பிறந்தார். இவரது [[தந்தை]]யான அன்ட்ரிஜ் வார்ஹாலாவுக்கும், தாயாரான உல்ஜா (ஜூலியா)வுக்கும் மூன்றாவது பிள்ளையாக இவர் பிறந்தார். அக்காலத்தி ஆஸ்திரிய-ஹங்கேரியப் பேரரசைச் சேர்ந்ததும் தற்போது வடகிழக்குச் [[செக் குடியரசு|செக் குடியரசில்]] இருப்பதுமான ''மிக்கோவா'' என்னும் ஊரிலிருந்து இடம் பெயர்ந்தவர்களான இவர்கள் [[ருசின்]] இனத்தைச் சேர்ந்த உழைப்பாளர் வகுப்பினர். வார்ஹாலின் தந்தை 1914 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் குடியேறினார். வார்ஹாலின் பாட்டன், பாட்டி இருவரும் இறந்தபின்னர், வார்ஹாலின் தாய் 1921ல் அமெரிக்கா வந்து தனது கணவருடன் சேர்ந்து கொண்டார். வார்ஹாலின் தந்தை ஒரு நிலக்கரிச் சுரங்கத்தில் பணிபுரிந்தார். பின்னர், 55, பீலன்தெரு, பிட்ஸ்பர்க், ஓக்லேண்ட் என்ற முகவரியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். ‛பைசண்டைன் கத்தோலிக்க பிரிவில், இவர் குடும்பத்தினருடன் புனித புனித யோவான் பைசண்டைன் கத்தோலிக்க திருச்சபையில் பங்கேற்றனர்.