வாருங்கள்!

வாருங்கள், உண்ணிகிருஷ்ணன், விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களை தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் தெரிவியுங்கள். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:

--நந்தகுமார் (பேச்சு) 15:38, 27 நவம்பர் 2013 (UTC)

பங்களிக்கத் தொடங்கியிருப்பதற்கு நன்றி

வணக்கம், உண்ணிகிருஷ்ணன்!

 
அறிவொளி ஏற்றுவதற்கு நன்றி!

தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிக்கத் தொடங்கியிருப்பதற்கு என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதன் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள் என்று பலரும் உள்ள தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவராக இணைந்துள்ளீர்கள். நீங்கள் தொடர்ந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்பதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தும் பள்ளிச் சிறுவர்கள் உள்ளிட்ட பலருக்கும் உதவியாக இருப்பீர்கள். பின்வரும் வழிகளில் பங்களிப்புகளைத் தொடரலாம்:

ஏதேனும் ஐயம் என்றால் என் பேச்சுப் பக்கத்தில் கேளுங்கள். அல்லது, tamil.wikipedia @ gmail.com என்ற முகவரிக்கு மின்மடல் அனுப்புங்கள். உங்களுக்கு உடனே உதவக் காத்திருக்கிறோம். நன்றி.

-தமிழ்க்குரிசில் (பேச்சு) 14:33, 30 நவம்பர் 2013 (UTC)

கட்டுரைப் போட்டிதொகு

வணக்கம் நண்பா! நீங்கள் கட்டுரைப் போட்டியில் கலந்துகொள்ள விரும்புகிறீர்கள் தானே! :) இந்த பக்கத்தில் உங்கள் பெயரை பதிவு செய்யுங்கள். இந்த பக்கத்தில் உள்ள சிறிய கட்டுரைகளை விரிவாக்குங்கள். கட்டுரையின் அளவு 15,000 பைட்டுகளைத் தாண்டும்வரை விரிவாக்குங்கள். உதவி தேவை என்றாலோ, சந்தேகம் என்றாலோ இங்கேயே பக்கத்திலேயே கேளுங்கள். (இது உங்கள் பேச்சுப் பக்கம். இங்கு தான் பிறர் உங்களுடன் உரையாடுவர்.) நன்றி! :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 07:37, 9 திசம்பர் 2013 (UTC)

படங்கள் சேர்ப்பது பற்றிதொகு

வணக்கம் உண்ணி! விக்கி ஊடக நடுவம் என்ற திட்டம் உள்ளது. அங்கு நிறைய படங்கள் உள்ளன. அங்கே தேடி பாருங்கள். அவற்றை எடுத்து, கட்டுரைகளில் சேர்க்கலாம். அல்லது, உங்கள் கணினியில் இருந்து பதிவேற்றி, பின்னர் அந்த படங்களை கட்டுரைகளில் இணைக்கலாம். ஒரு படத்தை கட்டுரைகளில் இணைக்க, [[படிமம்:photoname.jpg]] எனத் தரவும். படம் தானாக இணைக்கப்படும். வேறு உதவி தேவை என்றாலும் தயங்காமல் கேளுங்கள். நன்றி! :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 07:37, 9 திசம்பர் 2013 (UTC)

தங்களின் தகவலுக்கு நன்றி... -உண்ணிகிருஷ்ணன்

கட்டுரைகளை விரிவாக்குவதில் ஒரு நிபந்தனை உண்டு. இந்த பக்கத்தில் உள்ள தலைப்புகள் மட்டுமே கட்டுரைப் போட்டிக்கு ஏற்றவை. மற்ற கட்டுரைகள் (நீலகிரி கலாச்சாரம்) போட்டியில் சேர்க்கப்படாது. நான் குறிப்பிட்டுள்ள பக்கத்தில் உள்ள தலைப்புகளில் உங்களுக்குப் பிடித்தவற்றை உருவாக்கவும். நான் உதவுவேன். :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 14:38, 9 திசம்பர் 2013 (UTC)

குறிஞ்சி மலர் குறித்த கட்டுரை சேர்க்கலாமா என்பதை தெரிவிக்கவும்.. -உண்ணிகிருஷ்ணன்

தாராளமாக சேர்க்கலாம். :) ஆனால், கட்டுரைப் போட்டியில் இந்த கட்டுரை ஏற்கப்படாது. (கட்டுரைப் போட்டி நடத்துவதற்கு ஒரு காரணம் உண்டு! அனைத்து மொழிகளிலும் இருக்க வேண்டிய முக்கிய கட்டுரைகள் என ஒரு பட்டியல் உள்ளது. அந்த பட்டியலின் அடிப்படையில் ரேங்க் (தரவரிசை) உண்டு. தமிழ் விக்கி, 100க்கு 28 தான் பெற்றுள்ளது. இந்த புள்ளிகளை அதிகரிக்கவே, கட்டுரைப் போட்டி நடத்துகிறோம். அந்த முக்கிய கட்டுரைகளை உருவாக்கி, விரிவாக்கினால் மட்டுமே கட்டுரைப் போட்டியில் பங்கேற்கலாம்.) மேலே குறிப்பிட்ட பக்கத்தில் உள்ள கட்டுரைகள் மட்டும் போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவை. மற்ற கட்டுரைகளை (குறிஞ்சி) நீங்கள் எழுதலாம். ஆனால், அவை போட்டியில் கிடையாது. -தமிழ்க்குரிசில் (பேச்சு) 14:58, 9 திசம்பர் 2013 (UTC)

நீலகிரி மாவட்டம் குறித்துதொகு

வணக்கம் உண்ணிகிருஷ்ணன்! என்னை பெயர் சொல்லி அழைக்கலாமே! சார் எதற்கு?? :) நீலகிரி மாவட்டம் குறித்த உங்கள் கேள்வி எனக்குப் புரியவில்லை. எனக்கு புரிந்தவரை,

1. நீங்கள் நீலகிரி கட்டுரையில் செய்த திருத்தங்கள் அந்த கட்டுரையின் வரலாற்றுப் பக்கத்தில் சேமிக்கப்பட்டிருக்கும். இங்கே பார்க்கவும். உங்கள் பெயர் அந்த பக்கத்தில் பதிந்திருக்கும்.
2. நீலகிரி மாவட்டம் பற்றிய கட்டுரையை அறிய, நீலகிரி மாவட்டம் என்ற பக்கத்தில் பார்க்கலாம். இந்த பக்கத்தை உங்கள் நண்பர்களிடம் தர விரும்பினால், http://ta.wikipedia.org/wiki/நீலகிரி_மாவட்டம் என்ற இணையதள முகவரியை பயன்படுத்துங்கள்.
3. உங்களுக்கான பயனர் பக்கத்தில் உங்களைப் பற்றி எழுதிக் கொள்ளலாம். அந்த பக்கத்தில், நீலகிரி மாவட்டம் கட்டுரைக்கான இணைப்பையும் தரலாம். [[நீலகிரி மாவட்டம்]] என்று தந்தால் போதும்.

உங்கள் கேள்விகளுக்கு பதில் கிடைத்ததா? இன்னமும் ஏதாவது சந்தேகம் உள்ளதா? :)-தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:12, 15 திசம்பர் 2013 (UTC)