"நோயெதிர்ப்பியல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

113 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
சி
Robot: ca:Immunologia is a featured article; மேலோட்டமான மாற்றங்கள்
சி (Robot: ca:Immunologia is a featured article; மேலோட்டமான மாற்றங்கள்)
| title = நோயெதிர்ப்பியல்
| subdivisions = நோயெதிர்ப்பு மரபியல் (Immunogenetics), [[மருத்துவம்|மருத்துவ]] நோயெதிர்ப்பியல் (Clinical immunology), [[மூலக்கூற்று]] நோயெதிர்ப்பியல் (Molecular immunology), [[உயிரணு]] நோயெதிர்ப்பியல் (Cellular immunology), தாதுசார் நோயெதிர்ப்பியல் (Humoral Immunology), [[தடுப்பு மருந்து|தடுப்பாற்றலியல்]] (Vaccinology)
| image = [[Fileபடிமம்:MRSA, Ingestion by Neutrophil.jpg|180px]]
| caption = ஒரு [[நுண்ணுயிர்|நுண்ணுயிரை]] ([[மஞ்சள் (நிறம்)|மஞ்சள்]]) உண்ணும் [[நடுவமைச்செல்கள்|நடுவமைச்செல்]] (நியூட்ரோஃபில், கருஞ்சிவப்பு வண்ணம்)
| system = [[நோய் எதிர்ப்பாற்றல் முறைமை]]
}}
 
'''நோயெதிர்ப்பியல்''' (Immunology) என்பது அனைத்து [[உயிரினம்|உயிரினங்களின்]] [[நோய் எதிர்ப்பாற்றல் முறைமை|நோய் எதிர்ப்பாற்றல் முறைமைக்]]க் குறித்த எல்லாக் கூறுகளையும் பயிலும் உயிரிமருத்துவ அறிவியல் பிரிவுகளுள் ஒன்றாகும்<ref>[http://www.ncbi.nlm.nih.gov/books/bv.fcgi?rid=imm.TOC&depth=2 Janeway's Immunobiology textbook] Searchable free online version at the National Center for Biotechnology Information</ref>. உடல் நலமுள்ள, [[நோய்]]வாய்ப்பட்ட சூழல்களில் நோயெதிர்ப்பு அமைப்பின் உடலியக்கச் செயற்பாடுகளைக் குறித்து அறிந்து கொள்வது; நோயெதிர்ப்பு பிறழ்வுகள், மிகையுணர்வூக்கம், [[தன்னுடல் தாக்குநோய்|தன்னுடல் தாக்குநோய்கள்]]கள், நோயெதிர்ப்புக் குறைபாடு, [[உறுப்பு மாற்று|உறுப்புமாற்ற நிராகரிப்பு]] ஆகியவற்றில் நோய் எதிர்ப்பாற்றல் முறைமையின் செயல்பிழைகள்; உடல், [[வேதிப்பொருள்]], உடலியக்கம் சார்ந்த, நோயெதிர்ப்பாற்றல் முறைமைக் கூறுகளின் [[ஆய்வுக்கூடம்|ஆய்வுக்கூடச்]] சோதனை முறை (in vitro), மூல நிலை (in situ), உயிருள்ளவைகளில் நடத்தப்படும் ஆய்வுகளின் (in vivo) சிறப்பியல்புகள் ஆகியவற்றைக் குறித்து அறிவது நோயெதிர்ப்பியல் துறையைச் சேர்ந்ததாகும். [[அறிவியல்|அறிவியலின்]] பல்வேறு துறைகளிலும் நோயெதிர்ப்பியல் செய்முறைகள் உபயோகப்படுத்தப்படுகின்றன.
 
"நோயெதிர்ப்பாற்றல்" கருத்துவாக்கம் உருவாகும் முன்னரே பல மருத்துவர்கள் இத்தகுச் செயற்பாடுகளைக் கொண்ட உடல் உறுப்புகளின் பண்புகளை விவரித்திருந்தார்கள். இவை பின்னாளில் நோயெதிர்ப்பாற்றல் அமைப்பின் கூறுகளாக நிறுவப்பட்டன. [[தைமஸ் சுரப்பி|தைமசும்]], [[எலும்பு மச்சை|எலும்பு மச்சையும்]]யும் நோயெதிர்ப்பாற்றல் முறைமையின் முதன்மையான உறுப்புகளாகும். இரண்டாம் நிலை நிணநீர்த்திசுகளாக [[மண்ணீரல்]], உள்நாக்கு, நிணநீர்க் குழாய்கள், [[நிணநீர்க்கணு|நிணநீர் முடிச்சுகள்]], அடினாய்டு சுரப்பிகள், [[தோல்]], [[கல்லீரல்]] ஆகியவற்றைக் குறிப்பிடலாம். தேவைப்படின், நோயெதிர்ப்பாற்றல் அமைப்பு உறுப்புகளான தைமசு, மண்ணீரல், எலும்பு மச்சையின் ஒரு பகுதி, நிணநீர் முடிச்சுகள், பிற இரண்டாம் நிலை நிணநீர்த்திசுகள் ஆகியவற்றை நோயாளிகள் உயிருடன் இருக்கும்போதே [[அறுவைச் சிகிச்சை]] மூலம் துண்டித்துச் சோதனைகளுக்கு உட்படுத்த முடியும். நோயெதிர்ப்பு அமைப்பின் பல்வேறு கூறுகளும் உயிரணுக்களைச் சார்ந்தவையாக உள்ளதால், எந்தவொரு குறிப்பிட்ட உடலுறுப்புகளுடனும் இவைச் சேர்ந்தவையாகக் கருதப்படுவதில்லை. உடல் முழுவதும் பல்வேறு திசுக்களில் இத்தகு உயிரணுக்கள் பொதிந்தும், சுற்றி வந்தும் செயற்படுகின்றன.
 
== மரபார்ந்த நோயெதிர்ப்பியல் ==
மரபார்ந்த நோயெதிர்ப்பியலானது [[கொள்ளை நோய்|கொள்ளை நோயியல்]] (நோய்ப்பரவு இயல்), [[மருத்துவம்]] ஆகியவற்றுடன் தொடர்புடையதாகும். இது உடலமைப்பு, நோய்க்கிருமிகள், நோயெதிர்ப்பு ஆகியவற்றிற்கானத் தொடர்புகளைக் குறித்து அறிந்து கொள்ள உதவுகிறது. ஏதென்சு நகரில் கிமு 430 ஆம் ஆண்டு நிகழ்ந்த கொள்ளைநோய் (பிளேக்கு) குறித்த ஆவணங்களே நோயெதிர்ப்பாற்றல் குறித்த முதல் எழுத்து வடிவப் பதிவுகளாகும்.
 
== நோயெதிர்ப்பியச் சிகிச்சை ==
{{Main|நோயெதிர்ப்பியச் சிகிச்சை}}
நோயெதிர்ப்பியத் தொகுதியின் கூறுகளைப் பயன்படுத்தி நோய்களுக்கு (அ) பிறழ்வினைகளுக்குச் சிகிச்சையளிப்பதை நோயெதிர்ப்பியச் சிகிச்சை என்கிறோம். இவ்விதமான சிகிச்சைகள் முதன்மையாக புற்றுநோயைக் குணப்படுத்த கதிரியக்கச் சிகிச்சை மற்றும் வேதிச்சிகிச்சைகளுடன் சேர்த்து உபயோகப்படுத்தப்படுகிறது. என்றாலும், நோயெதிர்ப்பு ஒடுக்கப்பட்ட நோயாளிகளிலும் (எடுத்துகாட்டாக, [[எயிட்சு]] நோயாளிகள்), பிற நோயெதிர்ப்பு குறைந்த நோயாளிகள், [[தன்னுடல் தாக்குநோய்|தன்னெதிர்ப்பு நோய்களினால்]] பாதிக்கப்பட்டவர்களிலும் நோயெதிர்ப்பியச் சிகிச்சை பயன்படுத்தப்படுகிறது.
 
== அறுதியீட்டு நோயெதிர்ப்பியல் ==
[[Fileபடிமம்:ELISA.jpg| thumb| right| 250 px | நொதிசார் எதிர்ப்புரதச் சோதனை (எலைசா)]]
{{Main|அறுதியீட்டு நோயெதிர்ப்பியல்}}
எதிர்ப்பிகள் -எதிர்ப்பான்களுக்கிடையேயானப் பிணைப்பின் தனித்தன்மைப் பல்வேறு அறுதியீட்டுப் பரிசோதனைகளில் (உயிர்)வேதிப்பொருட்களைக் கண்டறிய மிக உபயோகமானதாக உள்ளது. கண்டறிய வேண்டிய எதிர்ப்பிகளுக்கெதிரான எதிர்ப்பான்களை [[கதிரியக்கம்|கதிரியக்கக்]] குறியீடு, [[ஒளிர்மை|ஒளிரும்]] குறியீடு அல்லது வேதி வினைகள் மூலம் வண்ணங்களை உருவாக்கும் [[நொதி]] ஆகியவற்றைக் கொண்டுப் பிணைத்து பரிசோதனைகளில் ஆய்விகளாக (probes) உபயோகப்படுத்த முடியும். என்றாலும், சில எதிர்ப்பிகளிலுள்ள [[புரதம்|புரத]] ([[அமினோ அமிலம்|அமினோ அமில]]) ஒற்றுமைகள் தவறான நேர்முறைகளைத் (முடிவுகளைத்) தரலாம். எதிர்ப்பான்களின் பிற சம்பந்தமில்லாத எதிர்ப்பிகளுடன் குறுக்குப் பிணையும் தன்மை (cross-reactivity) இத்தகுப் பரிசோதனைகளில் பிறழ்வினைகளை (தவறுகளை) உருவாக்கலாம்<ref name="pmid1993317">{{cite journal | author = Miller JJ, Valdes R | title = Approaches to minimizing interference by cross-reacting molecules in immunoassays | journal = Clin. Chem. | volume = 37 | issue = 2 | pages = 144–53 |date=February 1991 | pmid = 1993317 | doi = }}</ref>.
 
== இனப்பெருக்க நோயெதிர்ப்பியல் ==
{{Main|இனப்பெருக்க நோயெதிர்ப்பியல்}}
நோயெதிர்ப்பியல் துறையின் இப்பிரிவு கருப்பம், [[கருத்தரிப்பு]] போன்ற இனப்பெருக்க நிகழ்முறைகளில் நிகழும் நோயெதிர்ப்பிய ஊடாடல்களைக் குறித்து விளக்குகின்றது. கருத்தரிப்பு மருத்துவமனைகளில் முன்சூல்வலிப்பு (pre-eclampsia), குறைப்பிரசவங்கள், அடிக்கடி நிகழும் கருச்சிதைவுகள் குறித்து விளக்கவும் இக்கருத்தாக்கம் பயன்படுத்தப்படுகிறது.
 
== புற்றுநோயெதிர்ப்பியல் ==
{{Main|புற்றுநோயெதிர்ப்பியல்}}
[[நோயெதிர்ப்புத் தொகுதி|நோயெதிர்ப்பியல் அமைப்பு,]] [[புற்றுநோய்]] உயிரணுக்களிடையே நிகழும் ஊடாடல்களைக் குறித்துப் பயில்வது புற்றுநோயினைக் கண்டறியும் புதிய நோய் நிர்ணய சோதனைகள், சிகிச்சை முறைகள் ஆகியவற்றை உருவாக்கி, தொடக்கத்திலேயே புற்றுநோயைக் கண்டறிய, சிகிச்சையளிக்க வழிக்கோலுகிறது.
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
 
[[பகுப்பு:நோயெதிர்ப்பியல்]]
 
{{Link FA|ca}}
44,013

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1667496" இருந்து மீள்விக்கப்பட்டது